புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Tuesday, October 23, 2012

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு..!


வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைக
ள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி ?


பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.

அஞ்ஞான வாசம் முடிந்த பின் அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அவர்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

Sunday, October 21, 2012

முதல் ஐந்து [TOP 5] - அதிக சராசரி ஆயுள் கொண்ட மக்கள் வாழும் நாடுகள்


1.மொனாகோ [MONACO]

சராசரி  ஆயுள் : 89.68 வருடங்கள் 


மெடிட்டரேனியன் கடலோரம் இருப்பதாலும் , அவர்கள் உண்ணும் மெடிட்டரேனியன் கடலோர உணவு வகைகளும் அவர்களது வாழ்க்கை முறைக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து , அவர்களது ஆயுளை  நீட்டிக்க செய்கிறது 

2.மக்காவு [MACAU]

சராசரி  ஆயுள் : 84.43 வருடங்கள் 

சூதாட்டத்தையும் , சுற்றுலா பயணிகளையும் நம்பி மட்டுமே  இந்த நாடு தன்னுடைய சாம்ராஜ்யத்தை கட்டி கொண்டு உள்ளது. நாட்டின் மொத்த பொருளாதாரம் முழுவதும் இவற்றை நம்பி தான் உள்ளது , கிட்டத்தட்ட 70 சதவிகிதம் வருமானம் இவற்றின் மூலமே வருகின்றது   


3.ஜப்பான் [JAPAN]  

சராசரி  ஆயுள் : 83.61 வருடங்கள் 

அரிசி , பசுமையான காய்கறிகள்  மற்றும் மீன்கள் தான் ஜப்பானியர்களின் உணவில் பெரும் பங்கு வகிக்கின்றது . கொலை மற்றும் தற்கொலைகளின் விகிதம் இங்கு மிகவும் குறைவு .

4.சிங்கப்பூர் [SINGAPORE]

சராசரி  ஆயுள் : 83.75 வருடங்கள் 

சுத்தமான சுற்றுப்புறம் மற்றும் முறையான உணவு பழக்கமும் உள்ளதால் , இவ்வூரின் மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர் .

5.சான் மரினோ  [SAN MARINO]

சராசரி  ஆயுள் : 83.07 வருடங்கள் 

இவ்வூர் இட்டாலியன் பெனின்சுலாவில் உள்ளது . உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று . அதிக தொழிலாளர்கள் இல்லாத நாடு என்பதால் , விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகவும் அரிது .


கருத்துள்ள சிரிப்பலைகள் ! ♥பெல்ட்


இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. முசோலினி ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்,''நிலைமை மிக மோசம். உணவு அவசரத்தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும்,''ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது,''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும்,ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்,''முசோலினி மீண்டும் தந்தி அனுப்பினார்,''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.''

இரவல்

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர்,''என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,''என்றார். மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,''என்று கேட்டார். மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,''என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.''
ஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார்,''ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்?''ஷா சொன்னார்,''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்!''
ஒருவர் நேதாஜியிடம் சொன்னார்,''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காதசாம்ராஜ்யம்,''நேதாஜி சொன்னார்,''உண்மை.அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.''

இயல்புதானே?


பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார். அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும் போது கால் தடுமாறிக் கீழே விழப்போனார். ஆதீனத்தலைவர்அவரை சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார். செட்டியார்மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,''எல்லாமே இயல்பாகத்தானே நடந்திருக்கிறது,சுவாமி,''என்றார். ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல்,''இயல்பாக என்ன இப்போது நடந்தது?''என்று கேட்டார். கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,''எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே? அதுதானே இப்போது நடந்திருக்கிறது?''ஆதீனத் தலைவர் செட்டியாரின் நகைச்சுவை உணர்வு கண்டு மகிழ்ந்தார்.

ஆஸ்திரேலியா பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்1.உலகில் "தோல்புற்றுநோயால்" அதிகம் பாதிக்கப்படவர்கள் உள்ள நாடு.

2.வளர்ச்சியடைந்த நாடுகளில்  உடல் பருமனாவர்கள் அதிகம் வாழும் நாடு.

3.ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளில் எயிட்ஸ் நோய் பரவாது தடுத்த நாடுகளில் ஒன்று.

4.மக்கள் தொகையில் 7.5% மக்கள் மட்டுமே வாரம் ஒருமுறை தேவாலயம் செல்கின்றனர்.

5. 'தி எக்கணமிஸ்ட்' இன் உலகில் மக்கள் வசதியாக வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் (2008) ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண், பேர்த், அடிலெயிட் , சிட்னி ஆகிய நகரங்கள் முறையே 2,4,7,9 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன.

பழைய சோறு .... :) இத அடிச்சிக்க எந்த #pizza # burger ஆலும் முடியாதப்பா !

அந்தக்  காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்போது  கிராமங்களில் கூட காண  முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம். இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான்.

 அப்படிதான் எங்கள் வீட்டில் ஒரு நாள் மதிய உணவை முடித்து விட்டு மீதம் இருந்த சாத்திற்க்கு தண்ணீர்  உற்றி வைத்து விட்டோம்... , சிறிது நேரத்தில் ஒருவர் தனக்கு பசிகிறது ஏதாவது சாப்பிட கொடுங்கள் என கேட்க எங்க அம்மா அவரிடம் இப்போதான் தண்ணீர்  ஊற்றினேன் குழம்பு ஊற்றி கொண்டு வரவா அல்லது தண்ணிரோடு சாப்பிடுகிறீர்களா என கேட்க தண்ணி ஊத்தியாச்சா நான் பழைய சோறு சாப்பிட மாட்டேன் எனக்கு வேண்டாம் என கூற, இப்போதான் ஊற்றினேன் பழைய சோறு இல்ல என எடுத்து கூறியும் அவர் எனக்கு வேண்டாம் என நடையை கட்டிவிட்டார். அப்போதே அப்படி என்றால் இக்காலத்தில் சொல்லவே வேண்டாம்.

 பழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். ஆணால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும். காலையில் கழிவறையில்  மல்லு கட்ட வேண்டாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிர்ப்பு  சக்தி கிடைகிறதாம். காய்ச்சல்  போன்ற  நோய்களிடம் இருந்து காக்கிறது , பண்றி காய்ச்சல் உட்பட.

 காலை உணவாக பழைய சாதத்தை  உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தண்ணீர்  ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும். அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லமல் காலையில் ஃபிரியா போலாம். 

இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும். 

அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம். 

அப்புறம் பழைய சாதம் செய்ய தெரியுமா? 
(என்ன கொடுமை சார் இது எதுகொல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியாத இருக்கு)
 பொங்குன சோத்துல தண்ணிய  ஊத்திட்டு அடுத்த நாள் காலையில்  திறந்து பாருங்க கம கம என பழைய சோறு தயார். இதுக்கு  கைகுத்தல் அரிசி சிறந்தது. நம்ம வீட்டல் போய் கைகுத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நம்க்குதான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசி கூட உபயோக்கலாம். சூடான சாதத்தில்  தண்ணீர்  ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண் சட்டியில்  போட்டு தண்ணீர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காதாம்"

Saturday, October 20, 2012

சீனாவில் தமிழ் மொழியை வளர்க்க பாடுபடும் சீனப் பெண்ம​ணி


சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள்


இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள். அவர் மேலும் தெரிவிக்கையில்

நான் தமிழ்மொழியை சீனா முழுவதும் பரப்புவதையே இலட்சியமாக கொண்டுள்ளேன். அதற்காக சீன தமிழ் தொலைக்காட்சிகள். வானொலிகள். ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இதில் முழுக்க சீனர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள்.

ஆயிரக்கணக்கான சீனர்கள் தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

அதிலே தேர்ச்சி பெற்றவர்களை தொலைக்காட்சி. வானொலிகள் பணிக்கு அமர்த்தி இருக்கிறோம்.

அதேபோல் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தமிழ் திரைப்படங்கள் சின்னத்திரை சினிமா பாடல்களுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்து இதை ரசிக்கிறார்களோ அதேபோல் தற்போது சீனாவிலும் தமிழ் மொழியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
வாழ்க தமிழ்மொழி...

மனிதர்களின் தலைகளை வெட்டி வீரத்தை வெளிப்படுத்திய நாகாலாந்து மக்கள்


நாகாலாந்து மாநிலத்தில் வாழ்ந்த கோன்யா இனக்குழுக்களே மனித தலைகளை வெட்டுவதை வீரமாக கருதி முற்காலத்தில் செய்திருக்கிறார்கள்.
நாகாலாந்து மாநிலத்தில் உள்ள மோன் மாவட்டத்தில் கடந்த ஜூலை  மாதம் ஒரு இடத்தில் குவியல் குவியலாக மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இவ்வளவு மனிதர்கள் ஒரே நேரத்தில் இறந்தார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்த போது அவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.

கோன்யா இனக்குழுவினருடைய நிலத்தை யாரேனும் அபகரித்தால் அக்குழுவினர் அபகரித்தவர்களின் தலைகளை வெட்டியே தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்துவார்களாம்.

அதேபோல் இந்த தலை வெட்டி மனிதர்கள் தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்தியமைக்கு சான்றாக இன்றளவும் ஒரு கல்வெட்டு அம்மாநிலத்தில் இருக்கிறது.


சான்று கூறும் கல்வெட்டு:

1923ம் ஆண்டு பிறந்த லெப் அகாங் ரோங்காங் என்ற கோபா, கடந்த 2001ம் ஆண்டுதான் இறந்திருக்கிறார்.

அவருக்கு மொத்தம் 18 மனைவிகள், 19 மகன்கள், 7 மகள்கள், 59 பேரக் குழந்தைகள்.

இவர் வாழ்வில் நிகழ்த்திய சாதனை என்ன தெரியுமா? இவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை மற்றொரு குழுவினர் ஆக்கிரமிக்க முயன்றபோதெல்லாம் அவர்களது தலைகளை வெட்டி எடுப்பதே வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார்.

தமது வாழ்நாளில் 36 மனித தலைகளை வெட்டி எடுத்து "வீரமிக்க" மனிதராக வாழ்ந்திருக்கிறார். இவரது வழித்தோன்றலோ 130 மனிதத் தலைகளை வேட்டையாடிருக்கின்றனராம்.

தலை கிடைக்காவிட்டால் காது:

இன்றளவும் நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் வசித்து வரும் "முன்னாள்" தலைவெட்டி மனிதர்கள் கூறும் மற்றொரு சுவாரசிய தகவல் என்ன தெரியுமா? எதிர்க் குழுவைச் சேர்ந்தவர்களின் தலையை வெட்டி எடுக்க முடியாது போனால் ஆகக் குறைந்த பட்சம் அவர்களில் ஒருவரது ஒரு "காதையாவது" அறுத்து வந்து தங்களது கிராமத்து தலைவரிடம் ஒப்படைத்து "வீரத்தை" வெளிப்படுத்திக் கொள்வார்களாம்.

அமெரிக்காவின் அமேசான், ஆப்பிரிக்காவின் அடர் வனத்து பழங்குடிகள் எல்லாம் இப்படி மனித தலைவேட்டையை முன்னரே நிறுத்திவிட்டனர்.

இருப்பினும் உலகிலேயே மனித தலைவெட்டுதலை கடைசியாக நிறுத்திய வரலாற்று பெருமைக்குரியவர் நாகாலாந்தின் கோன்யாக் குழுவினரே ஆவார்.


Courtesy : KAPILS [USETAMIL]

Friday, October 19, 2012

அண்டார்டிக்கா பற்றிய சில விசித்திர உண்மைகள்


♥இந்த உலகில் உரிமை கொண்டாடப்படாத ஒரே கண்டம் அண்டார்டிக்கா மட்டுமே .

உலகில் உள்ள 90 சதவிகிதம் [90%] பனி அன்டார்டிகாவை மூடியுள்ளது  .

உலகில் உள்ள மொத்த குடிநீரில் அண்டார்டிகாவில் மட்டும் 70 % பனியாக உறைந்து  உள்ளது .

அடுத்து நான் கூறும் உண்மை உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் : "அண்டார்டிக்கா ஒரு பாலைவனம் !!!"

ஒவ்வொரு வருடமும் இரண்டு இன்ச் [2 inch] அளவிற்கு பனி கூடும் .

என்னதான் முழுவதும் பனியால் மூடி இருந்தாலும் , அண்டார்டிகா தான் உலகில் மிகவும் வறண்டு போன இடம் !

அண்டார்டிகாவின் முழு ஈரப்பதம் "கோபி பாலைவனத்தையும் [GOBI DESERT]" விட மிகவும் குறைவு .


Thursday, October 18, 2012

சில சுவாரசியமான தகவல்கள்


1.மார்ட்டின் கார்னர் எனும் புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞான காதாசிரியர் எழுதிய மிக சிறிய திகில் கதை ---> "உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்து இருந்தான். கதவு தட்டப்பட்டது."

2.நாம் இந்தியர்களுக்கு கடமைபட்டுவர்கள். அவர்கள் தான் கூட்டல் முறையை கண்டு பிடித்தவர்கள். அந்த கண்டுபிடிப்பு மட்டும் இல்லையென்றால் எத்தனையோ அறிவியல் முன்னேற்றம் நிகழாமல் போயிருக்கும் என்று சொன்னவர் அறிவியல் விஞ்ஞானி ஐன்ஷ்டீன்.
                             
                               

3.இரண்டாம் ரமேசஸ் என்ற பண்டைய கிரேக்க மன்னன் கிமு 1213 இல் தனது 90 வயதில் காலமானார். சிறந்த வீரன் 66 வருடங்கள் ஆட்சி புரிந்தார். இவருக்கு 111 மகன்களும் 66 மகள்களும் இருந்தனர். அபுசிம்பல் என்ற சரித்திர புகழ் பெற்ற கோவிலை கட்டியவர் இவரே.

4.புகழ் பெற்ற ஆங்கில கவிஞர் மில்டன் திடீரென்று பார்வை இழந்தார். ஆனாலும் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. அவர் புகழ் பெற்ற இலங்க்கியங்கள் அனைத்தும் அவர் பார்வையிழந்த பின் எழுதப்பட்டவை.

திருவள்ளுவரை தெய்வமாக வணங்கும் கேரளத்தினர்!தனது இரண்டடி பாடல் மூலம் உலகிற்கே பல அறிய கருத்துகளையும் ஆழ்ந்த சிந்தனைகளையும்  தந்த தெய்வ புலவர் என அனைவராலும் அழைக்கப்படும் திருவள்ளுவரை தமிழகத்தில் தெய்வமாக வணங்குபவர்கள் வெகு சிலரே. கண்ணகிக்கு கேரளாவில் கோவில் உண்டு என்பது நாம் அறிந்த ஒன்றே. ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் திருவள்ளுவரை தெய்வமாக வணங்குகின்ற ஒரு மதத்தினர் உள்ளார்கள் என்பதும் திருவள்ளுவருக்கு இவர்கள் கோயில் அமைத்துள்ளனர் என்பதும் ஆச்சரியமான செய்தி. சில வருடங்களுக்கு முன் ஒரு நாளிதழில் கண்ட இந்த செய்தி உண்மையில் ஆச்சரியத்தை  தருகின்றது.

இவர்களை  ' சனாதான  ' மதத்தினர் என அனைவராலும் அழைக்கப் படுகின்றனர். திருவள்ளுவரை கடவுளாக கொண்டு உள்ள இதனை 'சமாதான மதம்' எனவும்  அழைக்கப்படுகிறது.  இவர்கள் வள்ளுவருக்கு கேரள மாநிலத்தில் 16 இடங்களில் கோயில்கள் அமைத்து இவரை வழிப்படுகின்றனர். இக்கோவில்களில்  முறையானப்படி  தினசரி வழிப்பாட்டையும்  நடத்தி வருகின்றனர்.   இவற்றில்  மிகவும் பிரசித்திப்பெற்ற  திருவள்ளுவர் கோயில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காஞ்சூர் தட்டம்படி என்ற ஊரில்  உள்ளதாகும்.
மற்ற அனைத்து கோவில்களிலும் இந்த மதத்தினர் இவரை அவர்களின் முறைப்படி வணங்கி வழிபாட்டு வருகின்றனர்.  

திருவள்ளுவருக்கென இம்மாநிலத்தில் முதல்முதலாக கோயில் கட்டியவர் சிவானந்தர் என்பவர் தான். இவர் 1979-ம்  ஆண்டு மார்ச் 1-ம் தேதி  இடுக்கி மாவட்டத்தில் உள்ள சேனாபதி என்ற ஊரில் அமைத்தார்.

விக்கல் பற்றிய சுவாரசியமான தகவல்கள்


நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், 'டயபரம்' [diaphragm]என்ற ஒரு பகுதி பிரிக்கிறது.சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி  விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல்.

தன்னிச்சையாக என்றால்...?

உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் அது. அதாவது, அனிச்சைசெயல் போன்றது.

உதாரணத்திற்கு ஒரு சம்பவம்:

நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். கீழே தரையில் பெரிய கற்கள்  கிடக்கின்றன. அவற்றை நம் கண்கள் பார்க்கின்றன. அடுத்த சில மைக்ரோ செகண்ட் நொடிகளிலேயே நம் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியில் இருந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அங்கே பெரிய, பெரிய கற்கள் கிடக்கின்றன. அதனால், அந்த கற்களை தாண்டிச் செல்ல வேண்டும். இல்லையென்றால், விலகிச் செல்ல வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.அந்த உத்தரவை மீறிச் சென்றால், காலில் ரத்தக்காயம் வாங்குவது நிச்சயம்.

ஆனால், அனிச்சைசெயல் என்பது அப்படி கிடையாது. சில அவசரமான நேரங்களில் மூளையின் ஹைப்போதலாமஸ் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம்.

உதாரணம்:

வேட்டி கட்டிய ஒருவர் ஒரு வெட்ட வெளியில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்.திடீரென்று காற்று வேகமாக வீசுகிறது. அவரையும் அறியாமல் அவரது கை அவர் அணிந்திருக்கும் வேட்டியை பிடிக்கச் செல்கிறது. இந்த சம்பவத்தில், ஹைப்போதலாமசில் இருந்து உத்தரவு வருவதற்கு முன்பே கையானது நடவடிக்கையில் ஈடுபட்டு விடுகிறது.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்