புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Wednesday, December 12, 2012

ஃபேஸ்புக்… தவிர்க்க வேண்டிய நான்கு முக்கிய விஷயங்கள்!இன்றைக்கு வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது ஃபேஸ்புக்.

அடிக்ஷன், டைம் வேஸ்ட், கிரிமினல்மயம் என்றெல்லாம் ஃபேஸ்புக் குறித்துப் புலம்பினாலும், கையை கழுவிட்டு சாப்பிடச் செல்வதைப் போல,
பேஸ்புக்கை பாவிக்க ஆரம்பித்துவிட்டனர்.


சரி.. பாவித்துக் கொள்ளட்டும். ஆனால் அப்படி பயன்படுத்துகையில் முக்கியமாக நான்கு விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார் ஆஸ்திரேலிய மீடியா சட்ட நிபுணர் ஜாமி வொயிட்.


முதல் விஷயம்: நண்பர்கள் எண்ணிக்கை சராசரியாக 120 இருக்கலாம். அதிகபட்சம் 5000. அதற்கு மேல் போனால் உங்கள் கணக்கு பொய்யா நிஜமா என ஆராய்ந்து, சந்தேகம் வந்தால் முடக்கவும் செய்யும் ஃபேஸ்புக் நிர்வாகம். எனவே நட்பை லிமிட்டாக வைத்திருங்கள்.

இரண்டாவது… ஒருவரின் பேஸ்புக் கணக்கு நிஜமாக இருக்க வேண்டும். பெயருக்கும், பாலினத்துக்கும் சம்பந்தமில்லாத படங்களை ப்ரொஃபைலில் போட்டு வைக்கக் கூடாது. பிரிட்டிஷ் பார்லிமெண்ட் உறுப்பினர் ஒருவரது பெயரில் கணக்கு தொடங்கி, அவரது ப்ரொபைல் படமாக ஒரு எருமை படத்தை வைத்திருந்தார்கள். இதுபோன்றவற்றை அறவே தவிர்க்கச் சொல்கிறது ஃபேஸ்புக்.

மூன்றாவது… ரொம்ப ஆக்டிவா இருந்தாலும் தப்பு என்கிறது ஃபேஸ்புக் நிர்வாகம். இப்படி ஓவர் ஆக்டிவாக இருந்தாலும் மற்றவர்களுக்கு போரடித்துவிடுமாம்!

இறுதியாக, காப்பிரைட். உங்களுக்கு சொந்தமான படம், கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யச் சொல்கிறது. ‘If you don’t own it, don’t post,’ இதுதான் ஃபேஸ்புக்கின் முக்கியமான விதி.

அப்படிப் பாத்தா… ஒருவரும் ஸ்டேடஸ் போடுவதோ, படம் பிரசுரிக்கவோ முடியாதே… பல பேர் இரவல் மேற்கோள்களில்தானே பேஸ்புக்கில் காலத்தை ஓட்டுகிறார்கள்!!


இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்