புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Saturday, May 11, 2013

தேனீக்கள் பல வகை - தேனீக்கள் பற்றிய ஒரு அலசல் !


தேனீக்களிடம் இருந்து தேன் மட்டுமன்றி அதைவிட விலை மதிப்புள்ள பொருள்களான மெழுகு, அரசக்கூழ், மகரந்தம் போன்றவையும் கிடைக்கின்றன. தேனீக்களில் பல வகைகள் உள்ளன.

மலைத் தேனீ: இவை உருவத்தில் மற்ற தேனீக்களான கொம்புத் தேனீ, இத்தாலியத் தேனீ மற்றும் கொசுத் தேனீக்களை விட பெரியவை. 

இவை திறந்த வெளியில் கூட்டினை உயர்ந்த மரக்கிளைகள், பாறைகள், அணைக்கட்டுகள் மற்றும் பெரிய கட்டடங்களில் கட்டுகின்றன. உணவு அதிகமாகக் கிடைக்கும் இடங்களில் ஒரே மரத்தில் பல தேன் கூடுகளைக் காணலாம்.

அடையின் மேற்பகுதியானது தேன் சேமிப்பிற்கும், அடிப்பகுதி புழு வளர்ப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை தொந்தரவு செய்தால், கோபத்துடன் அதிக தூரம் துரத்திச் சென்று கொட்டும் தன்மை உடையது. 

இவை திறந்த வெளியில் மட்டுமே வாழ விரும்புவதால் இவற்றை தேனீப் பெட்டிகளில் வைத்து வளர்க்க முடியாது.

இவை அதிக விஷத்தன்மை கொண்டது. மலைத்தேனீக்களால் அதிகளவு மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. 

ஒரு ஆண்டிற்கு மலைத்தேனீ அடையில் இருந்து 35 கிலோ தேன் கிடைக்கும். இது தவிர மெழுகும் அதிகளவில் கிடைக்கின்றன.

கொம்புத்தேனீ: இவை உருவத்தில் சிறியவை. எனவே, இவை சிறு தேனீ என்றும் அழைக்கப்படுகின்றன. 

மலைத்தேனீக்களைப் போல அடையினை மரக்கிளைகளிலும், புதர்களிலும் திறந்த வெளியில் கட்டுகின்றன. இவற்றையும் நாம் பெட்டிகளில் வைத்து வளர்க்க முடியாது. இதன் அடையிலிருந்து ஆண்டுக்கு ஒரு கிலோவுக்கு குறைவாகவே தேன் கிடைக்கும்.

இந்தியத் தேனீ: தமிழ்நாட்டின் தென்மாவட்டமான கன்னியாகுமரியில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் அதிகளவில் பெட்டிகளில் வைத்து வளர்க்கப்படுவது இந்தியத் தேனீயாகும்.

இவை தேனடைகளை அடுக்கு அடுக்காகக் கட்டுவதால் இவற்றிற்கு அடுக்குத் தேனீ என்ற பெயரும் உண்டு. இவை இருட்டில் மட்டுமே வாழும் இயல்புடையது. இவை அடைகளை அடுக்கடுக்காக மரப்பொந்துகள், பாறை இடுக்குகள், பாழடைந்த கிணற்றுச் சுவர்கள் போன்றவற்றில் கட்டுகின்றன.

இந்தத் தேனீக்களைக் கோபப்படுத்தினால் கூட்டை விட்டே ஓடிவிடும் இயல்பு உடையது. அதிக தொந்தரவுக்கு உள்ளாகும்போது கொட்டுகின்றன. இவை தேனீ வளர்ப்புக்கு ஏற்ற ரகமாகும். இந்தியத் தேனீ அடைகளில் இருந்து ஆண்டிற்கு 2 முதல் 5 கிலோ வரை தேன் கிடைக்கும்.

இத்தாலியத் தேனீ: இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டு, அதிக தேன் தரக்கூடிய அடுக்குத் தேனீ வகையைச் சேர்ந்தது இத்தாலியத் தேனீயாகும். 

இவை அடைகளை இருட்டில் அடுக்கடுக்காகக் கட்டக்கூடியது. இவை வட இந்திய மாநிலங்களில் அதிகளவில் பெட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. 

சாந்தமான குணம் உடையவை. 2 கி.மீ. தொலைவு வரை பறந்து சென்று மதுரம், மகரந்தம் மற்றும் பிசின் போன்றவற்றை சேகரிக்கின்றன. மலர்கள் அதிகமுள்ள தோட்டங்களில் மட்டுமே இவற்றை வளர்க்க இயலும். இத்தாலியத் தேனீ அடைகளில் இருந்து ஆண்டிற்கு 40 கிலோ வரை தேன் கிடைக்கும்.

கொசுத்தேனீ: இவை கொசு போன்று உருவத்தில் மிகவும் சிறியவை. இவற்றால் கொட்ட முடியாது. ஏனெனில் இவற்றின் கொடுக்குகள் வளர்ச்சி குன்றியிருக்கும். 

மாறாக கடிக்கும் திறன் உடையவை. இவைகள் மரப்பொந்துகள், கல் மற்றும் மண் கொண்டு கட்டப்பட்ட வீடுகளின் இடுக்குகளில் மண், மரப்பிசின் மற்றும் மெழுகு கொண்டு கூடு கட்டுகின்றன. இவற்றின் அடைகள் சிறிய திராட்சைக் குலை போல் காணப்படும்.

இதன் தேனானது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் கூட்டில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 100 கிராம் தேன் மட்டுமே கிடைக்கும். 

இவற்றை மூங்கில் குழாய்களிலும், சிறிய மண்பானைகளிலும் வளர்க்கலாம். பயிர்களின் மகரந்தச் சேர்க்கையில் பெரும்பங்கு வகிக்கின்றன

மனிதன் வயது முதிற்சியடைவதின் மர்மம் - ஆய்வறிக்கை


மனிதன் வயது முதிற்சியடைவதின் மர்மம் - ஆய்வறிக்கை

உலகத்தில் பிறந்த அனைத்து உயிரிணங்களும் ஒரு நாள் இறப்பை சந்திக்கத்தான் வேண்டும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அது ஏன் என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாருக்குமே தெரியாது. 

அதேசமயம் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் எப்படி இறந்து போகிறார்கள் என்று கேட்டால் அதற்கு நம்மால் ஓரளவுக்கு பதில் சொல்ல முடியும். பிறந்த ஒவ்வொரு உயிரிணங்களும் இறந்து  போவதற்கு காரணம் வயதாகிப்போவது அல்லது மூப்படைவதுதான். யாரும் இதுவரை விடை கண்டுபிடிக்கவில்லை.

ஆனால் தற்போது அமெரிக்காவின் சால்க் ஆய்வு மைய விஞ்ஞானி மார்ட்டின் ஹெட்சர். நியூரான்கள் என்னும் நரம்பு உயிரணுக்களின் மையக்கருவான நியூக்ளியசின் மேற்புறத்தில் ELLP என்னும் ஒரு வகை புரதங்கள் இருக்கிறது.

ELLP என்றால் மிக மிக நீண்ட ஆயுளை உடைய புரதங்கள் என்று பொருள். நியூக்ளியசிற்கு உள்ளேயும், நியூக்ளியசிலிருந்து வெளியேயும் என்னென்ன பொருட்கள் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பதே இந்த ELLP புரதங்கள்தான். இதனால் இவற்றுக்கு `போக்குவரத்து வழித்தட புரதங்கள்' என்று மற்றொரு பெயரும் உண்டு.

முக்கியமாக, நச்சுப்பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே செல்லாமல் தடுப்பது இந்த புரதங்களே. உடலின் பிற புரதங்கள் சேதமடைந்தால் உடனே அவை புதிய புரதங்களால் நிரப்பப்படும்.

ஆனால், வேதியியல் மாற்றங்கள் மற்றும் பிற பாதிப்புகளால் ELLP புரதங்கள் சேதமடையும்போது அவற்றுக்கு மாற்றாக, புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன் காரணமாக, பல நச்சுப்பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே சென்று நியூரான்களின் உள்ளே இருக்கும் மரபுப்பொருளான DNAவை பாதிக்கின்றன. இதனால் மரபணுக்களின் செயல்பாடுகள் மாற்றப்பட்டு உயிரணுக்கள் மூப்படைகின்றன என்று கண்டறிந்துள்ளனர் மார்ட்டின் ஹெட்சர் தலைமையிலான ஆய்வாளர்கள்.

பொதுவாக, உடலிலுள்ள புரதங்களின் வயது இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே. அதாவது மூன்று நாட்களுக்கு பின்னர் அவை செயலிழந்து போகும்.

ஆனால் ELLP புரதங்களின் வயதோ மிக மிக அதிகம். உதாரணமாக, எலிகளின் உடலிலுள்ள ELLP புரதங்களின் வயதும் எலியின் வயதும் ஒன்று என்கிறார் மார்ட்டின் ஹெட்சர். 

இத்தகைய விசேஷ பண்புடைய ELLP புரதங்களையும், இவற்றுக்கும் மூப்படைதலுக்கும் தொடர்பு உண்டு என்பதையும் உலகில் முதன்முதலில் கண்டறிந்த பெருமை ஆய்வாளர் மார்டின் ஹெட்சரையே சேரும்.

மூப்படைதல் தொடர்பான இதற்கு முந்தைய ஆய்வுகளில், இயல்பான மரபணு செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களே மூப்படைதலுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், உயிரணுக்களின் நியூக்ளியசில் இருக்கும் ELLP புரதங்கள் பாதிப்படைவதால், நியூக்ளியசிற்கு உள்ளே நச்சுப்பொருட்கள் சென்று உள்ளிருக்கும் DNAவை சேதப்படுத்துவதாலேயே மரபணு செயல்பாடுகள் மாற்றமடைகின்றன என்று ஆய்வாளர் மார்ட்டின் ஹெட்சர் கண்டறியும் வரை, மரபணு செயல்பாட்டு மாற்றங்களுக்கான காரணம் என்னவென்று உலகின் பிற ஆய்வாளர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

உடலின் முக்கிய பாகங்களான இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் குறைந்து போவதுதான் மூப்படைதலின் முதல் மற்றும் அடிப்படை அறிகுறி. இந்த பாகங்களின் உயிரணுக்களில் நிகழும் புரத சமன்பாடு (protein homeostasis) அல்லது உட்புற உறுதி நிலை (internal stability) பாதிக்கப்படுவதே அவற்றின் செயல்பாடு குறைவதற்கான முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள். 

ஆய்வாளர் மார்ட்டின் ஹெட்சரின் ஆய்வு முடிவுகளில், (மூளை உயிரணுக்களான) நியூரான்களின் செயல்பாடுகள் குறைவதற்கு ELLP புரதங்கள் சேதமடைவதே காரணமாக இருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நியூரான்கள் தவிர்த்த உடலிலுள்ள பிற உயிரணுக்களின் செயல்பாடுகள் குறையும்போது அவை, அவற்றின் சேதமடைந்த பழைய புரதங்களை அழித்து புதிய புரதங்களை உற்பத்தி செய்துவிடுகின்றன. 

இதனால் அவற்றின் செயல்பாடு மீண்டும் அதிகரித்து விடுகிறது. ஆனால் நியூரான்களிலுள்ள புரதங்கள் ஒருமுறை சேதமடைந்தால் அவற்றுக்கு மாற்றாக புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது துரதிஷ்டவசமானது.

நன்றி : தன்னம்பிக்கை முகபுத்தக குழு 

Wednesday, May 8, 2013

பாதங்களைப் பயமுறுத்தும் கால் ஆணி [ஆணிக்கூடு]

ஆணிக்கூடு : பாதங்களைப் பயமுறுத்தும் கால் ஆணி

பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி. 

இது பாதத்தை
த் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.  கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. 

அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை
த் தருகிறது. 

இந்த
க் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

கால் ஆணி ஏற்பட
க் காரணம்: 

பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.காலுக்கு
ப் பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாக
ச்சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

பப்பாளியின் பூர்வீகம் , வரலாறு மற்றும் மருத்துவுப்பண்புகள் ♣


பப்பாளியின் பூர்வீகம் , வரலாறு மற்றும் மருத்துவுப்பண்புகள் ♣

17ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். 
ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.

எளிதில் கிடைக்கக்கூடிய, மிக மலிவான விலையுள்ள பழம் பப்பாளி. மிகவும் இனிக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் வரையான மாதங்களிலும் பப்பாளி வரத்து இருக்கும். பழுக்காத காய்கள் பச்சை நிறத்திலும், நன்கு பழுத்தவுடன் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்தபின் விதைகள் மிளகு போன்று இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும்.


நல்ல மலமிளக்கியாகவும், பித்தத்தைப் போக்குவதாகவும் உள்ள பப்பாளி சற்றே எண்ணெய்ப் பசையாக உள்ள பழமாகும். இதுவும் உடலுக்குத் தெம்பூட்டும். இதயத்திற்கு நல்லது. மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும். கல்லீரலுக்கும் ஏற்றது. கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறுநீர்க் கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு அருமருந்து பப்பாளி.

டென்ஷன் [Tension] எதனால்?


டென்ஷன் [Tension] எதனால்?


எதற்கும் கோபப்படாத அர்ச்சனா, அன்று கோபப்பட்டாள். ஃபைல்களைக் கிழித்துப் போட்டாள். வேலையைப் பாதியில் போட்டுவிட்டு, டென்ஷனாக வீட்டிற்கு வந்துவிட்டாள். ‘இனிமேல் வேலைக்கே போகப் போவதில்லை’ என்று கத்தினாள்.

‘மகளுக்கு என்ன ஆச்சு?’ என்று கேட்க பெற்றோருக்குப் பயம். இரண்டுநாள் ஆறப் போட்டார்கள். மூன்றாம் நாள் அவளாகவே நெஞ்சுஎரிச்சல் என்று டாக்டரைப் பார்க்க பெற்றோருடன் போனாள். இந்தச்சாக்கில் அர்ச்சனா இரண்டு நாட்களாக நடந்து கொள்ளும் விதத்தை டாக்டரிடம் தயங்கித் தயங்கிச் சொன்னார்கள்.பெற்றோர் சொன்னதற்கும் டாக்டரின் பரிசோதனை முடிவுக்கும் நிறையத் தொடர்பு இருந்தது. அர்ச்சனாவுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய் தாக்குவதற்கான அறிகுறிகள் நிறையத் தெரிந்தன. அதன் ஆரம்பக்கட்டம்தான் இந்தக் கோபம், டென்ஷன் என்று டாக்டர் சொன்னார்.

டென்ஷனுக்கும், இதய நோய்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி டாக்டர் சொல்லச் சொல்லத்தான் அர்ச்சனா டென்ஷனாவதைக் குறைக்கும் வழிமுறைகளை நாடிப் போனாள்.

டென்ஷன் எதனால்?

டென்ஷன் என்பது, ஏதோ ஒரு சூழ்நிலையில் கோபத்தில் எழுந்து அடங்கும் உணர்வு என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். அது தவறு. மனத்தாலும், உடலாலும் அது பல கட்டங்களைக் கடந்த பின்னர்தான் வெளிப்படும்.

ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு உள்ளுக்குள் எழுகிறது. அதற்கு இடையூறு ஏற்படுவதாக உணர்கிறீர்கள். உடனே, அதைச் சரியாக செய்ய முடியுமோ முடியாதோ என்கிற சந்தேகம் உள்ளுக்குள் வந்துவிடுகிறது. மனம் பதைபதைப்பு அடைகிறது. நெஞ்சு துடிக்கிறது. ஒரு தடுமாற்றம் நடுக்கம் வருகிறது. நிதானம் இழக்கிறது. தவிப்பு ஏற்படுகிறது. இதனால், உடல் திசுக்கள் நிறைய கெடுகின்றன.


உடல்திசுக்கள் கெடக்கெட மனத்திலும், உடலிலும் ஒரு விறைப்பு நிலை உண்டாகிவிடும். இந்தச் சமயம்தான் மனிதர் கண்மண் தெரியாமல் நடந்து கொள்கிறார். அதாவது டென்ஷன் அடைகிறார். எளிதில் டென்ஷன் ஆகிறவர்கள் யார் யார்?

Monday, May 6, 2013

மனிதர்களுக்கு தேவை அங்கீகாரம் மட்டுமே !!!


மனிதர்களுக்கு தேவை அங்கீகாரம் மட்டுமே !!!

நிகழ்வு 1 :

ஒரு மேடையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்... அவர் பேசி முடிச்சதும் வழக்கம் போல எல்லோரும் கை தட்டினாங்க. ஆனா அதில் அவருக்கு திருப்தி இல்ல. இறங்கி வந்ததும் தன்னோட நண்பர் கிட்ட, என் பேச்சு எப்படி இருந்தது என்று கேட்டார்... அதற்கு அவரும், ரொம்ப அற்புதமான பேச்சுங்க உங்களோடது, நிறைய கருத்துகளை நான் குறிப்பெடுத்து வச்சிருக்கேன்.. அப்படின்னு சொன்னார். அப்பாடான்னு நிம்மதியானார் அக்கல்லூரி பேராசிரியர்..

நிகழ்வு 2:

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த குழந்தை விளையாடிகிட்டு இருந்துச்சு... குழந்தையோட அம்மா, பள்ளிக் கூடம் சேர்த்து மூணு மாசம் ஆயிடுச்சே என்ன சொல்லிக் கொடுத்திருப்பாங்கன்னு ஆசைப்பட்டு தன குழந்தையைக் கூப்பிட்டு தங்கம் ஒன்னு, ரெண்டு தெரியுமான்னு கேட்டாங்க, குழந்தை தெரியும்ன்னு சொல்லுச்சு... சொல்லுன்னு சொன்னதும், குழந்தை ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு... அத்தோட நிறுத்திகிச்சு. அம்மா மறுபடியும் சொல்ல சொன்னாங்க... அப்பாவும் அதே மாதிரி நாலு வரைக்கும் சொல்லி நிறுத்திகிச்சு. அம்மாக்கு கோபம், என்னடா குழந்தைக்கு ஒன்னு ரெண்டு கூட சொல்லத் தெரியலைன்னு நினைச்சு கிட்டு, அடுத்த நாள் பள்ளிக் கூடத்துக்குப் போனாங்க.. அங்க ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார். அவர் கிட்ட என்னங்க என் குழந்தை ஒன்னு, ரெண்டு கூட சொல்ல மாட்டேங்குது.. நீங்க சொல்லிக் கொடுக்களையான்னு கேட்டாங்க.. அதுக்கு அவர் சொன்னார் இல்லையே உங்க குழந்தை அழகா சொல்லுமே.. அப்படின்னு சொல்லிட்டு குழந்தைய கூப்பிட்டார்...

குழந்தை கிட்ட சொல்ல சொன்னார்... குழந்தை ஒன்னு சொல்லுச்சு, அப்போ ஆசிரியர் ம்ம்.. அப்படினார். குழந்தை ரெண்டு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம் அப்படின்னார். குழந்தை மூணு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம்.. அப்படின்னார்.. குழந்தை அப்படியே நூறு வரை சொல்லிடுச்சு... அப்போ அவங்க அம்மா சொன்னாங்க நான் நேத்து கேட்ட போது சொல்லலையே இப்போ மட்டும் எப்படி சொல்லுச்சு அப்படின்னு... அதுக்கு ஆசிரியர் சொன்னார், குழந்தை புதுசா கத்து கிட்டு வந்த விஷயத்தை நீங்க அங்கீகரிக்கனும்... ஒன்னு அப்படின்னு சொல்லி முடிச்சதும் நீங்க ம்ம்.. அப்படின்னு ஒரு சின்ன அங்கீகாரத்தை கொடுத்திருக்கணும்... இயந்திரம் தான் தொடர்ச்சியா சொல்லிகிட்டே இருக்கும். மனிதர்களுக்கு தேவை அங்கீகாரம் மட்டுமே. அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவும் முக்கியம், அப்படின்னு அம்மா செய்த தவறை சுட்டிக் காட்டினார். 

ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கே தன் பேச்சுக்கான அங்கீகாரம் தேவைப் படுகிற போது, குழந்தைகளுக்கு, அவர்களின் சிறு சிறு முயற்சிகளுக்கு நாம் அங்கீகாரம் அளிக்கிறோமா என்பது மிக முக்கியமானது... எனவே கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான், ஏனெனில், நாமும் அதே அங்கீகாரத்திற்கு தான் காத்திருக்கிறோம்...

#உலக புத்தக தின விழாவில் கேட்டது...

நன்றி : மழைக் காதலன்

பல மருந்துதன்மை கொண்ட கற்றாழை (Aloe vera)


கற்றாழை (Aloe vera)

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

கூந்தல் வளர

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.


இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்