புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Sunday, September 8, 2013

கிளி வாங்கி குடுத்த விவாகரத்து [Divorce] !


ஒரு வெளிநாட்டில் 2௦௦6 ஆம் ஆண்டு ஒரு விசித்திர வழக்கு நடந்தது . ஒரு பெண்மணி தன் கணவரின் நடத்தை சரி இல்லாததால் விவாகரத்து வேண்டும் என்று கோரி இருந்தார் . ரொம்ப நாளாக இந்த விவாகரத்து வழக்கு சரியான சாட்சி இல்லாமல் இழுத்து கொண்டு போனது . திடீர் என்று ஒரு நாள் அவர்கள் வீட்டில் இருந்த கிளியை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர் . கிளியை சாட்சியாக ஏற்று கொள்ள வேண்டும் என்று அந்த பெண்மணி கூறினார்.

சரி என்னதான் நடக்கிறது பாப்போம் என்று நீதிபதியும் ஒப்பு கொண்டார் . கிளியை தொடர்ந்து கவனித்ததில் மூன்று பெண்களின் பெயரை திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தது ! அந்த மூவரின் படங்களை காட்டிய பொழுது சரியாக பெயரை கூறியது !

அந்த மூன்று பெண்களும் தான் அந்த கணவருடைய கள்ள காதலிகள் ! இவற்றை விசாரித்த நீதிபதி , அந்த பெண்மணிக்கு விவகாரத்து அளித்து தீர்ப்பு வழங்கினார் !

ஒரு கிளியின் வாக்கு மூலத்தை ஏற்று தீர்ப்பு வழங்கியது இதுவே முதல் முறை ஆகும் !!!


#என்ன ஒரு விசித்திர உலகமடா !

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்