புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Saturday, November 30, 2013

ஒற்றை தலைவலி வரக் காரணம் !

ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.காரணம்:குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுண‌ர்வு ஆன‌ந்தம்.

அறிகுறிகள்:இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்

தீர்வுகள்:பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.
1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.

3.கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.

4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.

5.அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.

6. 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம். இதுமிகவும் விலைமதிப்பானது.

7. (அ)200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு
(ஆ)100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300 மிலி கேரட் சாறு
இந்த இரண்டு கல்வைகளில் ஒன்றை தினமும் பருக வேண்டும்.

8.வாசனை எண்ணெயால் தலைக்கு ஒத்தட்ம் தரலாம். தேய்த்து விடலாம்.


செய்ய வேண்டியவை:
1. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை
இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.

2. 2‍-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்)மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.

3. தூங்குவதற்கு முன் சூடான நீரால் வற்றிற்கு ஒத்தடம் தரலாம்.

4. தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:
1. புகை மற்றும் மது. இவை தலைவலியை தூண்டக் கூடியவை.
2. வெயிலில் அலைவது.
3. காரமான உணவு வகைகள்.
4. வயிறு முட்ட சாப்பிடுதல்.
5. தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை.


நன்றி - சுரேஷ் குமார்
தமிழ் பிரவாகம்

மூட்டு வலி (மூட்டு தேய்மானம்) வரக் காரணம் !

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:
1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்:
மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்:முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.
முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.
பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்: [பாட்டி வைத்தியம்]
1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்:
* வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.
காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
* கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

தவிர்க்கவேண்டியவைகாரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.


நன்றி - சுரேஷ் குமார்
தமிழ் பிரவாகம்

Wednesday, November 27, 2013

சமூக தளங்களில் (Social Networks) பகிர கூடாத 10 தகவல்கள்

சமூக தளங்களில் (Social Networks) பகிர கூடாத 10 தகவல்கள்


இணைய உலகில் சமூக வலைத்தளங்கள் இப்பொழுது அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. இணையுலகில் சமூக வலைத்தளங்களை உபயோகிப்பவர்கள் பற்றி சிறிய புள்ளி விவரம். இணையம் உபயோகிப்பவர்களில் 35% மேல் குறைந்தது ஒரு தளத்திலாவது உறப்பினர் ஆகி உள்ளனர்.

இதில் 51% மேல் ஒன்றிற்கும் மேற்ப்பட்ட தளத்தில் உறுப்பினர் ஆக உள்ளனர்.

இதில் மூன்றில் ஒரு பங்கு 18 இருந்து 24 வயது உள்ளவர்களே.

89% நண்பர்களை பெறுவதற்காகவே இதில் உறுப்பினர் ஆகி உள்ளனர்.

இதன் படி பார்த்தால் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களை உபயோகிக்கிறார்கள். அனைத்து சமூக வலை தளங்களிலும் Private என்ற ஒரு வசதி உள்ளது. ஆனால் நாம் யாரும் அதை உபயோகிப்பதில்லை. ஆகையால் நாம் சமூக வலை தளங்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். 10. சுலபமான கடவுச்சொல்: 

சமூக தளங்களில் நாம் உபயோகிக்கும் Password சுலபமாக கண்டுபிடிக்கும் படி வைக்க வேண்டாம். உங்கள் பெயரையோ அல்லது வேறு ஏதேனும் வார்த்தையோ அலது உங்கள் பிறந்த தேதியையோ தரவேண்டாம். இதனை ஹேக்கர்கள் சுலபமாக கண்டு பிடிக்கும் அபாயம் உள்ளது. சிறந்தது உங்கள் கடவு சொல்லுக்கு முன்னும் பின்னும் நம்பர்களை சேர்த்தல் சிறந்தது. (உ-ம்) 12xxxxxxx52 

9. முகவரி மற்றும் தொலைபேசி எண்:
சமுக தளங்களில் நீங்கள் உங்களுடைய தொலைபேசி எண்ணையோ அல்லது உங்கள் வீட்டின் முகவரியையோ கொடுக்க வேண்டாம். இது முற்றிலும் தவறான விஷயம். இதை கண்டிப்பாக தவிருங்கள். ஏற்க்கனவே கொடுத்து இருந்தாலும் எடுத்து விடுங்கள்.இதுவும் தவறு நடக்க ஒரு விதத்தில் வாய்ப்பு உள்ளது.

8. உங்கள் குழந்தையின் பெயர்:

அனைவருமே செய்கின்ற விஷயம் நம்முடைய குழந்தையின் புகைப்படத்தை நம் பேஸ்புக்கில் சேர்த்து இருப்போம் அது தவறல்ல, ஆனால் அந்த குழந்தையின் படத்திற்கு குழந்தையின் பெயரை தலைப்பாக போட்டு இருந்தால் அது தவறு தான். அதை மாற்றி விடுங்கள். உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் குழந்தையை ஏமாற்ற வழி உள்ளது. யாருக்கு என்ன தெரியும் எப்பொழுது என்ன நடக்கும் என்று நாம் கவனமாக இருப்பது நல்லது.

7.உங்கள் பிறந்த தேதி:

உங்கள் வங்கி கணக்கு மற்றும் கடன் அட்டை (credit card) ஆகியவைகள் அனைத்தும் உங்கள் பிறந்த தேதியை மையமாக வைத்தே இயங்குவதால் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. சமூக வலைதளைங்களில் நீங்கள் கொடுக்கப்படும் அனைத்து தகவல்களையும் உலகத்தின் எந்த நாட்டில் இருந்தும் பார்த்து கொள்ளலாம். அதனால் உங்கள் பிறந்த தேதியை வைத்து தவறு நடக்க வாய்ப்புள்ளது. ஆதலால் நீங்கள் உங்கள் பிறந்த தேதியை முழுமையாக கொடுக்க வேண்டாம். கொடுத்து இருந்தாலும் Edit profile சென்று மாற்றி கொள்ளுங்கள்.

6.சுற்றுலா விசேஷத்திற்கு செல்லுதல்: 

நீங்கள் சுற்றுலா செல்ல வேண்டாம் என்று கூற வில்லை. ஆனால் நீங்கள் செல்லும் தகவலை சமூக வலைதளங்களில் தெரிவிக்க வேண்டாம். (உதாரணாமாக நான் குடும்பத்தோடு இன்று ஊருக்கு செல்கிறேன் இதோடு பத்து நாள் கழித்து தான் வருவோம்.) இப்படி உங்கள் இதனால் பத்து நாளும் வீட்டில் யாரும் இல்லை என்பதை நீங்கள் சொல்லாமல் சொல்கிறீர்கள். ஆகவே போய்விட்டு வந்து கூறுவதே நல்லது. நெருங்கிய நண்பர் சொல்லியே தீர வேண்டும் என்றால் மெயிலிலோ அல்லது தொலைபேசியிலோ கூறுவது சிறந்தது.

5. உங்கள் பயனர் கணக்கு: 

நீங்கள் சமூக வலைதளங்களில் உறுப்பினர் ஆகும் போது அந்த என புதிய உறுப்பினர் கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள். அனைத்து சமூக தளங்களிலும் ஜிமெயில் அல்லது யாகு மெயில் உபயோகித்தால் போதும் அதற்கு லிங்க் கொடுத்தாலே பயனர் கணக்கை ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் இதில் பாதுகாப்பு என்பது குறைவே ஆகையால் தனியாக பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளுதல் சிறந்தது.

4. நண்பரை தேர்ந்தெடுத்தல்:

நீங்கள் சமுக தளங்களில் உங்களுக்கு நண்பர் கோரிக்கைகள் வந்தாலோ அல்லது நீங்கள் யாருக்கேனும் நண்பர் கோரிக்கை அனுப்ப நினைத்தாலோ பொதுவான நண்பர்களை சோதித்து நமக்கு தெரிந்தவர்கள் அதில் இருக்கின்றனரா என்று அறிந்து அவர்களின் கோரிக்கையை உறுதி படுத்தவும்.

3. குழந்தைகளிடம் 

குழந்தைகளுக்கு தெரியும் வண்ணம் இந்த சமூக தளங்களின் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அவர்களும் அந்த வலைதளங்களில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும்.

2. பெண் உறுப்பினரா: 

நீங்கள் பெண் உறுப்பினர் ஆக இருந்தால் உங்கள் புகைப்படத்தை சமூக தளங்களில் பகிர்வதை தவிருங்கள். இதை சில பேர் தவறாக பயன்படுத்த கூடிய வாய்ப்பு நிறைய உள்ளது. அதற்கு பதில் வேறு ஏதேனும் போட்டோவினை பயன் படுத்தலாம். இதை கடைபிடித்தால் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

1. அடிமை 

அனைத்து சமூக வலைதளங்களும் உறுப்பினர் ஆவதற்கு குறைந்தது 13+ வயது வரம்பை வைத்துள்ளார்கள். ஆனால் அதை நடைமுறை படுத்த எந்த வழியையும் செய்ய வில்லை. ஆகையால் சிறுவர்கள் கூட இதில் உறுப்பினர் ஆகி விடுகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மணிகணக்கில் இந்த தளங்களில் நேரங்களை செலவிடுகிறார்கள் போக போக இதற்க்கு அடிமையாகவே மாறி விடுகிறார்கள். படிக்கும் நேரங்களில் கூட படிக்காமல் இந்த தளங்களில் நேரங்களை செலவிடுகின்றார்கள். இதை கண்காணிப்பது அனைத்து பெற்றோரின் கடைமையாக உள்ளது. அவர்கள் கணினியில் என்ன செய்கிறாகள் என்பதை கவனித்து அவர்களுக்கு உண்மையை புரிய வைக்கவும்.

நன்றி : தமிழ்காரன்

Tuesday, November 26, 2013

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு !

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு !


வயிறு தொப்பையாக இல்லாமல், சுருங்கி.. அதாவது ஒட்டி இருத்தல் பெண்களுக்கு அழகு என்பதாகத்தான், இதன் பொருளை எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இதன் உண்மைப் பொருள் :-

உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு. நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்

நாயைக் கண்டால் கல்லைக் காணோம் 
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !

நாயைக் கண்டால் அடிப்பதற்குக் கல்லைக் காணவில்லை. கல் இருக்கும் போது நாய் அங்கு இல்லை என்பது போலத்தான் பொருள் கொண்டு இப் பழமொழி தற்போது பிரயோகிக்கப்படுகிறது. 

இதன் உண்மைப் பொருள் !

பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி... சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின.. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 
நாயைக் கண்டால் கல்லைக் காணோம் 
கல்லைக் கண்டால் நாயைக் காணோம். 
என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை. 

இது மனிதரின் பார்வையில்தான் ஒவ்வொன்றும் என்பதைக் குறிக்கிறது !


தண்ணீர் என்றால் ஒவ்வாமை [அலர்ஜி] !

தண்ணீர் என்றால் ஒவ்வாமை [அலர்ஜி] !


ஆஷ்லே மொரிஸ் [Ashleigh Morris] என்கின்ற 19 வயது இளம் பெண்ணிற்கு தண்ணீர் என்றாலே ஒத்துக் கொள்ளது ! ஆமாம், இந்த இளம்பெண் எல்லாரையும் போல் நீச்சல் அடிக்கமுடியாது , வெந்நீர் குளியல் எடுக்க முடியாது , உற்சாகம் அடைய ஷவர் நீரில் குளிக்க முடியாது , இவ்வளவு ஏன் , கொஞ்சம் அதிகமாக வியர்வை வந்தாலும் கூட பிரச்சனைதான் !

சிறிதளவு தண்ணீரோ வியர்வையோ பட்டால் கூட சருமத்தில் சொறி சிரங்கு[Rashes] வந்தது போல் ஆகி விடும் ! என்ன ஒரு வினோதமான அதே சமயம் கொடூரமான வியாதி இது ! பாவம் இந்த பேதை ! விலங்குகளை கல்லாக மாற்றும் ஆபத்தான ஏரி !

விலங்குகளை கல்லாக மாற்றும் ஆபத்தான ஏரி !

எந்த விலங்கு இந்த ஏரியின் நீரை பயன் படுத்தினாலும் அது கல்லாக மாறிவிடும் ! ஆம் , உண்மைதான் !

டான்சானியாயாவில் உள்ள நேட்றான் ஏரிதான் அது [Lake Natron, Tanzania]


மிகவும் ஆபத்தானது :

பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக இருக்கும் இந்த ஏரி கொடிய ஆபத்தை தன்னுள் மறைத்து வைத்துள்ளது . அழகிருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பது இந்த ஏரியின்  விசயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை.

உண்மை என்ன ?

இந்த அபூர்வ விசயத்திற்கு முக்கிய காரணம் அந்த ஏரியியில் இயற்கையாக உள்ள ரசாயன கலவைதான் !

ரசாயன மாற்றம் :


இந்த ஏரியில் எப்பொழுதும் நீரின் pH லெவல் 9 முதல் 1௦.5 [அதிகப்படியான basic alkalinity] ஆக இருக்கும் . எனவே தான் இந்த ஏரியில் விழும் அனைத்தும் எகிப்திய  மம்மி போல  பாதுகாக்கப்பட்டு விடுகிறது ! அது கல்லாக மாறிய தோற்றத்தை குடுக்கின்றது ! 


7 புலிகளுடன் வாழும் பிரேசில் நாட்டு குடும்பம் !

7 புலிகளுடன் வாழும் பிரேசில் நாட்டு குடும்பம் !

Brazilian Family Lives with 7 Tigers
அறிய வகை விலங்குகளை வளர்ப்பு பிராணியாக வளர்ப்பது என்பது இப்பொழுது பரவி வரும் ஒரு வழக்கமாக மாறி வருகிறது !

ஆனால் , பிரேசில் நாட்டைச்சேர்ந்த இந்த குடும்பமோ எல்லா வரைமுறைகளையும் தகர்த்து எறிந்து, ஏழு புலிகளை தங்களது செல்ல பிராணியாக வளர்த்து வருகின்றனர் !

போர்கஸ் குடும்பம் இந்த கொடூர மிருகங்களை சர்வ சாதரணமாக கையாண்டு வருகின்றனர் ! ஒரு சர்க்கஸ் குழுவில் மிகவும் பரிதாப நிலையில் இருந்த புலிகளை கண்ட  ஆர்யா போர்கஸ் இந்த முடிவிற்கு வந்துள்ளார் !

Tuesday, November 19, 2013

டால்பின் மீனை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட கோடீஸ்வர பெண்மணி !

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 41 வயது  கோடீஸ்வர பெண்மணி "ஷாரோன் டெண்ட்ளர்" . இவர் கடந்த டிசம்பர்  2005 ஆம் ஆண்டு இஸ்ரேல்  ரிசார்ட் [Resort] ஒன்றில் இருந்த  சிண்டி என்ற டால்பின் மீனை மணந்தார் !

புரியவில்லையா ? வேற ஒன்றும் இல்லை , 15 வருடங்களுக்கு முன்பு அந்த ரிசார்ட் வந்த பொழுது டால்பின் மீனுக்கும் இந்த பெண்மணிக்கும் காதல் மலர்ந்துள்ளது . பின்பு ஒவ்வொரு வருடமும் அந்த டால்பின் மீனை பார்க்க வருடத்திற்கு  இரண்டு அல்ல மூன்று முறை அங்கு செல்வதை வாடிக்கையாகி கொண்டார் . கடைசியாக கல்யாணமும் செய்து கொண்டார் !

ஆனால் அந்தோ பரிதாபம் , சிறிது நாள் கழித்து 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் நாள் அந்த டால்பின் மீன் இறந்து போனது ! மனிதனுக்கும் மிருகத்திற்கும் திருமணம் நடத்தி வைப்பது என்பது இந்தியாவில் நாம் சாதரணமாக கேள்விப்படும் ஒரு விசயம் தான் ! ஆனால் , அதுவே வெளிநாட்டில் நடந்தால் அதை நாம் ஆச்சர்யமாக பார்கிறோம் ! இங்கு நடக்கும் இத்தகைய கோமாளித்தனம் மூட நம்பிக்கையினால் நடக்கிறது ! வெளிநாட்டில் நடப்பது  பெரும்பாலும் வினோத காதல் , அன்பு மற்றும் அதிர்ஷ்டம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நடக்கிறது  !

எது எப்படியோ ! மனிதனுக்கும் மிருகத்திற்கும் திருமணம் என்பது ஒரு விந்தையான விசயம்தான் !

இதை போன்ற பல விசித்திர திருமணங்கள் பற்றி தொடர்ந்து இந்த வாரம் எழுதுகிறேன் !

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்