புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Monday, December 9, 2013

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?

1. தட்டான்

தட்டாதவன்

2. குட்டைப் பையன்

வாமனன்

குழப்பமா இருக்கா..

நம்ம மஹாபலிச் சக்கரவர்த்தி இருக்காரே அதாங்க நம்ம ஓணம் பண்டிகை ஹீரோ , அவர் 99 அசுவமேத யாகம் செஞ்சு முடிச்சிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யறார். அவரிடம் சென்று யார் தானம் கேட்டாலும் தட்டாமல் தருவதால் அவரே தட்டான் ஆவார் .

அதென்னங்க சட்டை போடுவது?
சட்டை எதுக்காகப் போடறோம்? நெஞ்சை மறைக்கப் போடுகிறோம்..

அப்படின்னா தட்டானுக்கு சட்டை போடுவது என்றால்?

தட்டாமல் தரும் மஹாபலி சக்கரவர்த்தி ஈகை நெஞ்சை மறைப்பது.. அதாவது தானம் தரமுடியாதபடிக்குத் தடுப்பது.

நம்ம சுக்ராச்சாரியார் என்ன செய்யறார்? மஹாபலிச் சக்ரவர்த்தியை தடுக்கிறார். எச்சரிக்கிறார். அதையும் மீறி அவன் தானம் தர நீர் வார்க்க முயற்சிக்கையில் சிறுவண்டாய் மாறி நீர் வராதபடிக்கு அடிக்கிறார்.

அப்ப நம்ம குட்டை பையன் வாமனர் என்ன செய்யறார். ஒரு குச்சியை (கட்டை) எடுத்து தலையில் குத்திவிட சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகிடுது.

அதாங்க

தட்டானுக்குச் சட்டை போட்டால்
குட்டைப் பையன்
கட்டையால் அடிப்பான்.


- முகபுத்தகத்தில் படித்தது 

5 comments:

 1. pandrikku nandri solli kundrin meal

  ReplyDelete
 2. pandrikku nandri solli kundrin meal elundhu nindraaal vendridalam kulaisekaranai athu enna

  ReplyDelete
  Replies
  1. Atharkku bathil itho ;)

   http://www.puriyathaputhir.com/2013/12/blog-post_7018.html

   Delete

 3. pandri avatharam varaha avatar kadavulai nandri solli ...kundrin Mel irukum iraivanai vananginaal ..vella mudiyum kulasekara azhwarai

  ReplyDelete
 4. பேசுவது பொய் மட்டுமே போல .
  வாமனனுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்.

  உண்மை கீழே.
  தட்டானுக்கு சட்டை போட்டால்,
  குட்டைப் பையன் கட்டையால்!
  அடிப்பான்...!!! அவன் யார்?


  விடை;
  தட்டான் =தட்டப் பயிறு,
  குட்டைப் பையன் = மரக் கட்டை
  (மரக்கட்டையால் பயிறு அடிக்கும் விவசாயி)

  ReplyDelete

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்