புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Saturday, June 8, 2013

அற்புத மணல் மாதா கோவில் - செட்டிவிளை

அற்புத மணல் மாதா கோவில் - செட்டிவிளை

சிவப்பு பட்டுக் கம்பளம் விரித்தாற்போல் நிரவியுள்ள சிவப்பு மணல் பகுதி. அங்குமிங்கும் சில ஆலமரங்கள், அத்திமரங்கள். மணல் பகுதியை அடுத்து முந்திரிப் பழத்தோட்டங்கள்; வழியெங்கும் ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்களின் அழகுத் தோற்றம். முட்புதர்களுக்கும் காட்டுச் செடிகளுக்கும் குறையில்லாத மணற்பரப்பு. இதுதான் மணல் மாதா கோயிலின் இயற்கைப் பின்னணி.


தூத்துக்குடி  மாவட்டதில் உள்ள  திருச்செந்தூரிலிருந்து கடலோரமாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பெரியதாழை அல்லது தோப்புவிளையிலிருந்து உட்புறமாகப் பிரிந்து செல்லும் சிறிய சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ளது, மணல் மாதா திருத்தலம். இதன் அருகே உள்ள ஊர் செட்டிவிளை. முன்னொரு காலத்தில் இந்த மணல் மாதாவின் திருத்தலம் அமைந்திருந்த ஊர், ‘கணக்கன் குடியிருப்புஎன்று அழைக்கப்பட்டது.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்