புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Saturday, September 7, 2013

திருக்கை மீன்[StingRay] பற்றிய சில அறிய தகவல்கள்


 • பெரும்பாலும் பிரவுன் அல்லது சாம்பல் நிறமாக இருக்கும்
 • 5 அடி முதல் 17 அடி வரை வளரக்கூடியது
 • 6௦௦ கிலோ எடை வரை இருக்கும்
 • கடலிலும் ,ஆற்றிலும் , கடலும் ஆறும் கலக்கும் இடம் என அனைத்து இடங்களிலும் வாழக்கூடிய ஆற்றல் உடையது
 • கண்கள் தலையின் மேலிலும், வாய் தலைக்கு கீழேயும் இருக்கும்
 • இவைகள் மாமிச உண்ணிகள்.
 • இரவு நேரங்களில் வேட்டையாடும்.
 • சிறு மீன்கள், சிப்பிகள் மற்றும் நண்டுகள் தான் இவையின் விருப்ப உணவு
 • ஆயள் காலம் : 15 முதல் 25 வரை.
 • சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் இவை ருசியான உணவாக உபயோகிக்கப்படுகிறது.
 • திருக்கை மீன்களின் தோல் ஜப்பான் நாட்டில் மிகவும் மதிப்புடையது.

பெரியாரும் திருநீறு சம்படமும் !

பெரியாரும் திருநீறு சம்படமும் ! 

பெரியாரின் அன்புக்கு பாத்திரமான நண்பர்களில் ஒருவர் 'தமிழ் தென்றல்' திரு.வி.கல்யாண சுந்தரானார்.

ஒருமுறை பெரியாரின் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார் திரு.வி.க.. இரவு நீண்ட நேரம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர். மறுநாள் காலை திரு.வி.க. எழுந்து குளித்து, உடை மாற்றி அவரது அறையிலிருந்து வெளியே வந்தபோது, அவரது முன்பு திருநீற்று சம்படத்தை நீட்டியபடி நின்றிருந்தார் பெரியார்.

இதை சற்றும் எதிர்பாராத திருவிக. ஆச்சரியத்தின் விளிம்புக்கே போய்விட்டார்.

“கடவுள் நம்பிக்கை இல்லாதவர் நீங்கள். உங்கள் வீட்டில் திருநீறு சம்படமா...?” என்று திகைப்பு மாறாமல் கேட்டார் திரு.வி.க.

அதற்கு பெரியார் அளித்த பவ்யமான பதில் இதுதான். “நான்தான் கடவுளை நம்பாதவன்தான். ஆனால் எனது நண்பரான தாங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவராயிற்றே. எனது விருந்தாளியாக வந்திருக்குக்ம் உங்களது தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது எனது கடமை.
மைக்கேல் ஜாக்சன் பற்றிய சில சுவையான தகவல்கள்

மைக்கேல் ஜாக்சன் பற்றிய சில சுவையான தகவல்கள்
 1. அவர் இரண்டு லாமா வளர்த்தார் , அவற்றின் பெயர் லூயிஸ் மற்றும் லோலா.
 2. அவரின் த்ரில்லர் ஆல்பம் தொடர்ந்து 37 வாரங்கள் US Billboardல் இடம் பெற்றது.
 3. அவருடைய முதல் பொது  இசை அரங்கேற்றம் அவருடைய ஐந்தாம் வயதில் நடை பெற்றது.
 4. அவருக்கு மொத்தம் எட்டு உடன் பிறந்தோர் உள்ளனர்.
 5. அவரின் த்ரில்லர் ஆல்பம் தான் இது வரை உலகில் அதிகம் விற்பனை ஆன இசை ஆல்பம் , இது வரை 5 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகி விட்டது !
 6. மூன் வாக்[Moonwalk] மற்றும் ரோபாட்[ROBOT] நடன அசைவுகள் மைக்கேல் ஜாக்சன் அறிமுகப்படுத்தி  பிரபலமானவை !
 7. இது வரை 13 கிராமி[Grammy] விருதுகள் பெற்றுள்ளார்
 8. ஜாக்சன் சைவ உணவுகளை மட்டுமே உண்பார் .
 9. MoonWalk – மைக்கேல் ஜாக்சனின் சுய சரிதை புத்தகம் நான்கு வருடங்களில் எழுதி முடிக்க பட்டது .
 10. மெக்சிகன் உணவு வகை அவருக்கு மிகவும் பிடித்தது .

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்