புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Sunday, September 8, 2013

கிளி வாங்கி குடுத்த விவாகரத்து [Divorce] !


ஒரு வெளிநாட்டில் 2௦௦6 ஆம் ஆண்டு ஒரு விசித்திர வழக்கு நடந்தது . ஒரு பெண்மணி தன் கணவரின் நடத்தை சரி இல்லாததால் விவாகரத்து வேண்டும் என்று கோரி இருந்தார் . ரொம்ப நாளாக இந்த விவாகரத்து வழக்கு சரியான சாட்சி இல்லாமல் இழுத்து கொண்டு போனது . திடீர் என்று ஒரு நாள் அவர்கள் வீட்டில் இருந்த கிளியை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர் . கிளியை சாட்சியாக ஏற்று கொள்ள வேண்டும் என்று அந்த பெண்மணி கூறினார்.

சரி என்னதான் நடக்கிறது பாப்போம் என்று நீதிபதியும் ஒப்பு கொண்டார் . கிளியை தொடர்ந்து கவனித்ததில் மூன்று பெண்களின் பெயரை திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தது ! அந்த மூவரின் படங்களை காட்டிய பொழுது சரியாக பெயரை கூறியது !

அந்த மூன்று பெண்களும் தான் அந்த கணவருடைய கள்ள காதலிகள் ! இவற்றை விசாரித்த நீதிபதி , அந்த பெண்மணிக்கு விவகாரத்து அளித்து தீர்ப்பு வழங்கினார் !

ஒரு கிளியின் வாக்கு மூலத்தை ஏற்று தீர்ப்பு வழங்கியது இதுவே முதல் முறை ஆகும் !!!


#என்ன ஒரு விசித்திர உலகமடா !

விதியின் விளையாட்டா அல்லது அமானுஷ்ய நிகழ்வா ?

விதியின் விளையாட்டா அல்லது அமானுஷ்ய நிகழ்வா ?

1975 ஆம் ஆண்டு 17 வயது இளைஞன் ஒருவன் அவனின் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு சாலை சந்திப்பில் டாக்ஸி மோதி விபத்தில் இறந்து விட்டான் . இதில் என்ன அமானுஷ்ய நிகழ்வு இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது !

சரியாக ஒரு வருடம் முன்பு அவனது மூத்த அண்ணன் 17 ஆம் வயதில் அதே சாலை சந்திப்பில் இந்த மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது அதே டாக்ஸியில் அதே டிரைவர் ஓட்டும் போது மோதி விபத்தில் சிக்கி இறந்தான். மேலும் அதில் பயணித்த பயணியும் அதே பழைய பயணிதான் !

இது ஒரு தற்செயல் நிகழ்வாக கூட இருக்கலாம் , அல்லது நாம் இது வரை புரிந்து கொண்டிராத நமது மூளைக்கும் அறிவியலுக்கும் இது வரை எட்டிடாத ஒன்றாகவும் இருக்கலாம் !


♥ உங்களது கருத்துக்களை கீழே பதியவும் ♥

நடுகடலில் மாயமாய் போன மனிதர்கள் !

நடுகடலில் மாயமாய் போன மனிதர்கள் !

2௦௦7 ஆம் ஆண்டு , ஆஸ்திரேலியா நாட்டு கடற்கரையோரத்தில் ஆளில்லாத படகு [Yacht] ஒன்று மிதந்து கொண்டிருந்தது . அதனுடைய என்ஜின் ஓடிகொண்டிருந்தது , லேப்டாப் இயங்கி கொண்டிருந்தது , ரேடியோ மற்றும் GPS கருவிகளும் நன்றாக வேலை செய்து கொண்டிருந்தது , உணவும் தாயார் செய்யப்பட்ட நிலையில் இருந்தது , ஆனால் அந்த கப்பலில் இருந்த மூன்று நபர்களை மட்டும் காணவில்லை !

கடலோர ரோந்து படையினர் அந்த படகை இழுத்து கொண்டு வந்து அதை முழுவதும் ஆராய்ந்து பார்த்தனர் ஆனால் எந்த விதமான தடயங்களும் கிடைக்கவில்லை !

இன்று வரை அந்த மூன்று நபர்களும் எப்படி மாயமாக போயினர் என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது !
உலகத்தில் மிகவும் அதிர்ஷ்டம் கொண்ட மனிதர் !

ஃபிரானோ செலக் [Frano Selak] – உலகத்தில் மிகவும் அதிர்ஷ்டம் கொண்ட மனிதர்

இது வரை இவர் தப்பித்து பிழைத்த விபத்துகள் :
  1.        விமான விபத்து
  2.        ரயில் விபத்து
  3.        எரியும் காரில் இருந்து தப்பினார்
  4.        இரண்டு கார் மோதலில் இருந்து தப்பினார்

இதுவரை இந்த விபத்துகளில் இவருக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை !
இவற்றிற்கும் மேலாக இவருக்கு ஒரு மில்லியன் டாலர் லாட்டரி மூலம் கிடைத்தது !!!

இப்ப சொல்லுங்க இவருக்கு அதிஷ்டம் இருக்கா , இல்லையா ! ஹி ஹி :)  இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்