புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Wednesday, December 4, 2013

சுலபமாக தென்னை மரம் ஏற பயன்படும் நவீன கருவி

சுலபமாக தென்னை மரம் ஏற பயன்படும் நவீன கருவி


கோவையைச் சேர்ந்த வெங்கட் என்ற ரங்கநாதன் என்பவர் மிக உயரமான தென்னை மரம் ஏற நவீன கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.

இது குறித்து இவர் கருத்து தெரிவிக்கையில், தனது படைப்பை டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த கண்காட்சியில், ஜனாதிபதி முன் பார்வைக்கு வைக்கும் வாய்ப்பு தற்போது இவருக்கு கிடைத்துள்ளது.

மிக உயரமான தென்னை மரத்திலும், விரைவில் ஏறக்கூடிய இந்த நவீன கருவியினைப் பயன்படுத்துவதால் காயம் ஏற்படாமல் பாதுகாப்பான முறையில் செயல்பட முடியும்.

இக்கருவியின் உதவியால் தற்போது இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் தென்னை, பனை மரங்களில் காய்களை பறிக்கும் பணி நடந்து வருகிறது.

இக்கருவியை கொண்டு சில்வர் ஓக், தேக்கு போன்ற மரங்களில் அமர்ந்தவாறு, கிளைகளை வெட்டலாம். இக்கருவி 11 கி.கி., எடை கொண்டது. 100 கி.கி., வரையுள்ள எடையை தாங்கக் கூடியது. இந்திய மதிப்பின் படி ஏழு ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

காது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்

காது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள் 


காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர். இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் படிப்பின் இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக இவர்கள் கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம் மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத் துல்லிய மாக உணர முடிவதோடல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர் கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கமுடியும்.

இவர்களுக்கு இந்த ஐடியா எப்படி வந்தது?

"எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு சரியாகக் காது கேட்காது. அவருக்காக நாம் ஒரு கருவி கண்டுபிடித்தால் என்ன என்ற யோசனையின் விளைவே இந்தக் கருவி" என்கிற சிவனேஷ், "அரைமனசோட அவர் என் கருவியைப் பயன்படுத்தி செல்போன்ல பேசுனப்ப அவர் முகத்துல வெளிப்பட்ட சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை" என்கின்றபோது, சிவனேஷின் முகத்தில் சாதித்த பெருமிதம் அலையாடியது.

எப்படி இயங்குகிறது இந்தக் கருவி?

ஹெட்போன் போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் மோட்டாரில்தான் இருக்கிறது சங்கதி. ஹெட்போனை மொபைலுடன் இணைத்துப் பேசும்போது மோட்டாரின் அதிர்வினைப் பயன்படுத்தி மறுமுனையில் பேசுபவரின் பேச்சைக் கேட்க முடியும் என்பதே இதன் செயல்பாடு.

"பொதுவாகவே மூக்கு, தொண்டை, காது போன்றவை ஒரே நரம்பால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், இவை எல்லாவற்றையும் இணைக்கும் பாலமான பல் இதற்கு உதவி செய்கிறது. ஹெட்போனில் இருக்கும் நீண்ட குச்சி போன்ற அமைப்பு பேசும்போது, தொடர்ந்து பல்லில் பட்டு அதிர்வினை ஏற்படுத்தி காது கேட்பவர்கள் கேட்க உதவி செய்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தால் பேசுவதைக் கேட்பதோடல் லாமல் பாடலையும் கேட்க முடியும்" என்று சிவனேஷ் தங்கள் கருவியின் செயல்பாட்டைப் பற்றி சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும் கருவியைக் கண்டுபிடிக்கவே 2,500 ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

பேட்டரி மூலம் இயங்கும் இந்தக் கருவியை எந்த செல்போனோடு வேண்டுமானாலும் இணைத்துப் பயன்படுத்த முடியும். தற்பொழுது பேடண்ட் வாங்க முயற்சித்து வருகிறார்கள். அது கிடைத்து, தொழிற் சாலையில் தயாரிக்கத் துவங்கி விட்டால் குறைவான விலைக்கே வழங்க முடியும் என்கிறார்கள்.

இவர்களின் செயலை பாராட்டுவோம்.... ♥சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்க வேண்டுமா?

சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்க வேண்டுமா?


நாசாவின் புதிய முயற்சி..

சர்வதேச விண்வெளி நிலையத்தை இரவுப்பொழுதில் நாம் இருந்த இடத்தில் இருந்து வெறுங் கண்ணால் இனிமேல் பார்க்க நாசா குறுஞ்செய்தி (SMS) சேவை ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பூமி மற்றும் பிரபஞ்சம் ஆகியவற்றை விண்வெளி வீரர்கள் விண்ணில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது International Space Station (ISS).

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான இந்நிலையத்துக்கு விண்வெளி வீரர்கள், ஆய்வுக் கருவிகள், உணவுகள் ஆகியவற்றை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் விண் ஓடங்கள் அவ்வப்போது விண்ணுக்குச் சுமந்து சென்று வருகின்றன.

தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கணையான சுனிதா வில்லியம்ஸ் ISS ஐ இயக்கி வருகின்றார்.

இந்த ISS செயற்கைக் கோளை இரவு வானில் தொலைக் காட்டி இன்றி எவரும் வெறுங் கண்ணால் ஒரு நட்சத்திரம் விண்ணில் குறுக்கே மிக வேகமாக செல்வது போல் அவதானிக்கலாம்.

தமது இடத்திலிருந்து வானின் எத்திசையில் சரியாக எத்தனை மணிக்கு இது வானில் செல்லும் என்பதை அறிவதற்கு நாசா சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய SMS சேவைக்கு அதாவது நாசாவின் இணையத் தளமான http://spotthestation.nasa.gov/ இல் தமது பெயர், மொபைல் நம்பர் மற்றும் முகவரியை இவர்கள் பதிவு செய்தால் போதும். ISS தென்படும் நேரம் மற்றும் இடம் SMS மூலம் தெரிவிக்கப்படும்.

வானியலில் ஆர்வமுடையவர் எவரும் ISS ஐ வெறுங் கண்ணால் பார்ப்பதற்கு இதன் மூலம் உடனடியாக முயற்சி செய்ய முடியும்.

ஆகவே நீங்களும் உங்கள் வீட்டருகே ISS ஐ அவதானித்து அதைப் பிறருக்கும் எடுத்துரையுங்கள். இதன் மூலம் அவர்களுக்கும் விண்வெளித் துறையில் ஆர்வம் அதிகரிக்கலாம்.நன்றி : SpotTamil

பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்

பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்


1. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.
விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.

2. அடியாத மாடு படியாது.
விளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.

3. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி
விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

4. ஆறிலும் சாவு நூறிலும் சாவு
விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
விளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.

6. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
விளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.

7. பசி வந்திட பத்தும் பறந்து போகும்
விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.

8. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை 
விளக்கம்: இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

9. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
விளக்கம்: இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.

10. சேலை கட்டிய மாதரை நம்பாதே
விளக்கம்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.

11. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.


மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்!

மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்!


  • ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
  • உங்களது அன்றாட நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன் வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.
  • எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச் செய்து கொண்டிருங்கள். அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச் செய்யும்.
  • ஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையே வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.
  • நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.
  • நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.
  • நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள்.
  • மன இறுக்கத்தையும் சோர்வினையும் மாற்றிக்கொள்ளுங்கள்.
  • மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.

உள்ளத்தை பக்கவப்படுத்திக்கொண்டுபொறாமைகளை அறவே.ஒழித்தெறிந்துஇருப்பதையும் கிடைத்ததையும் வைத்துஆசைகளை கைவிட்டு வாழ்ந்து கொண்டே போனால்இளமையுடன் அமைதியுடன் சந்தோசமாய் வாழமுடியும்இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்