புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Sunday, December 8, 2013

கயோலா - சபிக்கப்பட்ட தீவு

கயோலா - சபிக்கப்பட்ட தீவு 

Cursed Island of Gaiola
கயோலா - சபிக்கப்பட்ட தீவு [Cursed Island of Gaiola]

இத்தாலி நாட்டின் நேப்ல்ஸ் இல் உள்ள ஒரு சிறு தீவுதான் இந்த கயோலா ! நேப்ல்ஸ் நாட்டை சேர்ந்த மக்கள் இந்த தீவை சபிக்கப்பட்டது என்று கூறுகின்றனர் . அதற்கு பல காரணங்களையும் கூறுகின்றனர் . இந்த அழகான தீவிற்கு பின் பல மர்மங்கள் உள்ளதாம் .

இந்த தீவின் முதலாளிகள் எல்லாம் அற்ப ஆயுளில் இறந்து விடுவதால் இந்த மக்கள் இதை கண்மூடித்தனமாக நம்புகின்றனர் !

1920 களில் சுவிஸ் ஹான்ஸ் பௌன் ஒரு தரை விரிப்பில் சுருட்டப்பட்டு இறந்து கிடந்தார் . சிறிது நேரம் கழித்து அவரின் மனைவி அருகில் உள்ள கடலில் மூழ்கி இறந்தார் .

இதற்கு அடுத்து இந்த தீவை வாங்கிய ஜெர்மன் ஓட்டோ க்ருன்பக் தீவின் வில்லாவில் வசிக்கும் போது மாரடைப்பால் இறந்தார் அதுவும் சிறு வயதில் !

அடுத்த உரிமையாளர் மிகப்பெரிய தொழில் அதிபர் மௌரிசே-ய்வேஸ் சாண்டோஸ் . இவர் பைத்தியம் பிடித்து மனநல காப்பகத்தில் இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டார் !

இவருக்கு பிறகு இதை வாங்கியவர் ஒரு ஜெர்மன் இரும்பு தொழிற்சாலை அதிபர் . இதை வாங்கியவுடன் அவரின் நடவடிக்கைகள் மாறியது . அவரின் மொத்த சொத்தும் அவரின் இந்த மாற்றத்தால் அழிந்தது !

அடுத்து வாங்கிய ஜியானி அக்னெல்லி , அவரின் பெரும்பாலான உறவினர்களை மரணத்தின் பிடியில் குடுத்தார் . பிறகு பால் கெட்டி என்பவர் வாங்கினார் . வாங்கிய பின் அவரின் பேரனை யாரோ கடத்தினார்கள் .

சமீப கால நிகழ்வு 2009 இல் நடந்தது . பிரான்கோ அம்ப்ரோசியா மட்டும் அவரின் மனைவி ஜியோவன்னா சாக்கோ இருவரும் இந்த தீவின் எதிரில் உள்ள ஒரு வில்லாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது கொலை செய்ய பட்டனர் .

இது போன்று இன்னும் நிகழ்வுகள் ஏராளம் !

இவை அனைத்தும் தற்செயலாக கூட இருக்கலாம் ! இருந்தாலும் இந்த தீவின் அருகில் இருக்கும் மக்களுக்கு உண்மை தெரியும் வரையில் , இவை அனைத்தும் புரியாத ஒரு புதிராகவே இருக்கும் என்பதில் மட்டும் ஐயமில்லை !
Cursed Island of Gaiola

Cursed Island of Gaiola

Cursed Island of Gaiola

Cursed Island of Gaiola

Cursed Island of Gaiola

Cursed Island of Gaiola

Cursed Island of Gaiola

உலக வரலாற்றில் பிரசித்தி பெற்ற 17 புகைப்படங்கள் !

உலக வரலாற்றில் பிரசித்தி பெற்ற 17 புகைப்படங்கள் !

இப்போதெல்லாம் நாம் நமது ஐபோன் போன்ற ஸ்மார்ட் போன்கள் , டிஜிட்டல் கேமரா , DSLR கேமரா போன்று பல வகை தொழிட்நுட்பங்களை பயன் படுத்தி சர்வசாதரணமாக புகைப்படம் எடுகின்றோம் !

ஆனால் , கடந்தகாலத்தில் புகைப்படம் எடுப்பது ஒரு தனித்துவம் வாய்ந்த ஒரு துறை மற்றும் திறமை சார்ந்த விசயம் !

அப்படி  எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தனித்துவம் வாய்ந்த 17 புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக இதோ ...!

ஒரு பெண்மணி புகையை வடிகட்டும் முகமூடி அணிந்து ஒரு ப்ராம் [Pram] வண்டியை தள்ளி செல்கிறார் [இங்கிலாந்து ,1938]இராணுவத்தில் உலக புகழ்பெற்ற பாடகர் எல்விஸ் ப்ரெஸ்லீ [Elvis Presley] , 1958
குழந்தைகளுக்கு நல்ல சூரிய வெளிச்சமும் சுத்தமான காற்றும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலிபோர்னியா மாகணத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் அமைக்கப்பட்ட குழந்தை கூண்டு [Baby Cage ] , 1937
புது குண்டு துளைக்காத சட்டையை சோதனை பண்ணி பார்க்கின்றனர் ,1923
27 வயது சார்லி சாப்ளின் , 1916
ஹிண்டென்பெர்க் பேரழிவு , மே மாதம் 6 ஆம் தேதி , 1937
ஒரு சர்க்கஸ் குழுவை சேர்ந்த ஒரு நீர்யானை வண்டியை இழுத்து செல்கிறது , 1924அன்னி எடிசன் டெய்லர் ,முதன் முதலில்  நயாகரா நீர் வீழ்ச்சியில் ஒரு மர குவளையில் பயணித்து பிழைத்தவர்   ,1901அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையின் தலையை பிரித்த பொழுது எடுத்த படம் , 1885
டிஸ்னி லேன்ட் இல் வேலை செய்யும் பணியாளர்களுக்கு குடுக்கப்பட்ட கேன்டீன் ,1961 
பெர்லின் சுவரை கட்டிய பொழுது எடுக்கப்பட்ட படம் , 1961
1920 களில் நீச்சல் உடை அணிந்து வரும் பெண்களின் ஆடை உயரம் அளக்க படுகின்றது . குறிப்பிட்ட உயரத்திற்கு கம்மியாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும் !
கடலோர உயிர்காப்பான் , 1920
லாஸ் வேகாஸ் நகரில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனையை அச்சத்துடன் பார்கின்றனர் ஒரு தாயும் அவரின் மகனும் , 1953
விண்வெளிக்கு சென்று திரும்பிய ஒரு சிம்பன்சி குரங்கு புகைப்படம் எடுக்கு போஸ் குடுகின்றது ,1961பனி பந்து விளையாட்டிற்கு பிறகு - புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழக மாணவர்கள்  , 1893
இடது பக்கதில் இருந்து வலது பக்க  ட்ரைவிங் மாறிய முதல் நாள் - ஸ்வீடன் ,1967


உலகத்திலேயே மிகவும் சிறிய கார் !

 உலகத்திலேயே  மிகவும் சிறிய கார் !

பீல் P 50 - இந்த வகை சிறிய வகை கார்கள் 1962 முதல் 1965 வரை பீல் இன்ஜினியரிங் கம்பெனி மூலம் தயாரிக்கப்பட்டது . இதில் ஒரு பக்கம் மட்டுமே கதவு இருக்கும் . ஒரு முகப்பு விளக்கு மற்றும் ஒரு viper மட்டும் இருக்கும் . இது மூன்று சக்கரம் உடையது . ஒருவர் மட்டும் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது . இதுதான் இது வரை தாயரிக்கப்பட்ட கார்களில் சிறியது ஆகும் !

The Peel P50 is a three-wheeled microcar originally manufactured from 1962 to 1965 by the Peel Engineering Company on the Isle of Man. Designed as a city car, it was advertised as capable of seating "one adult and a shopping bag." The vehicle's only door was on its left side, and equipment included a single windscreen wiper and only one headlight.The Peel P50 is a three-wheeled microcar originally manufactured from 1962 to 1965 by the Peel Engineering Company on the Isle of Man. Designed as a city car, it was advertised as capable of seating "one adult and a shopping bag." The vehicle's only door was on its left side, and equipment included a single windscreen wiper and only one headlight.

The Peel P50 is a three-wheeled microcar originally manufactured from 1962 to 1965 by the Peel Engineering Company on the Isle of Man. Designed as a city car, it was advertised as capable of seating "one adult and a shopping bag." The vehicle's only door was on its left side, and equipment included a single windscreen wiper and only one headlight.

The Peel P50 is a three-wheeled microcar originally manufactured from 1962 to 1965 by the Peel Engineering Company on the Isle of Man. Designed as a city car, it was advertised as capable of seating "one adult and a shopping bag." The vehicle's only door was on its left side, and equipment included a single windscreen wiper and only one headlight.

The Peel P50 is a three-wheeled microcar originally manufactured from 1962 to 1965 by the Peel Engineering Company on the Isle of Man. Designed as a city car, it was advertised as capable of seating "one adult and a shopping bag." The vehicle's only door was on its left side, and equipment included a single windscreen wiper and only one headlight.


பாரீசில் 75 வருடங்கள் திறக்கப்படாமல் இருந்த அடுக்கு மாடி குடியிருப்பு

பாரீசில் 75 வருடங்கள் திறக்கப்படாமல் இருந்த  அடுக்கு மாடி குடியிருப்பு 

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 75 வருடங்களாக திறக்கப்படாமல் இருந்த ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை கடந்த வருடம் திறந்த பொழுது அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர் . ஏனெனில் சிலந்தி வலை பின்னி அனைத்து பொருட்களும் அப்படியே காலத்தை கடந்து இருந்தன !

இந்த குடியிருப்பில் வசித்து வந்த பெண்மணி இரண்டாம் உலக யுத்தத்தின் போது தெற்கு பிரான்ஸ் சென்ற அவர் திரும்ப வரவே இல்லை . இத்தனை காலம் கடந்து எப்படியோ அவருடைய சொந்தங்கள் இந்த வீட்டை கண்டு பிடித்துள்ளனர் . 

சிலந்தி வலைகளின் பிடியில் இருந்த இந்த குடியிருப்பில் செல்லும் பொழுது மிகவும் வினோதமான உணர்வுகள் வருவதாக அனைவரும் கூறுகின்றனர் . ஆம் பின் காலத்தை கடந்து இத்தனை காலம் அமைதியாக இருந்த ஒரு இடத்தில் அத்தகைய உணர்வு வருவது ஒன்றும் வியப்பு இல்லை !

இதற்கும் மேலாக அந்த வீட்டில் இருந்து 2.1 மில்லியன் யூரோ மதிப்புள்ள வரைப்படங்கள் கிடைத்தன . இவற்றை வரைந்தது ஜியோவானி போல்டினி [Giovanni Boldini] என்ற புகழ்பெற்ற ஓவியர் !

இத்தனை காலம் இந்த குடியிருப்பை எவரும் கண்டு கொள்ள வில்லை என்பதை நினைக்கும் பொழுது மிகவும் வியப்பாக இருக்கிறது ! 
இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்