புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Tuesday, December 10, 2013

செயற்கை தோல் சென்சார் !

செயற்கை தோல் சென்சார் ! 


புது வகையான தோல் சென்சார்களை உருவாகும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக உலகத்தில் இருந்து பல விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர் . இது மட்டும் வெற்றிகரமாக உருவாக்கி முடிக்கப்பட்டால் , செயற்கை உறுப்புகளை கொண்டவர்களால் இனிமேல் அருகில் இருக்கும் வெட்பம் ,தொடுதலின் உணர்வு,  ஈரப்பதம் போன்ற பல வகை உணர்வுகளை உணர முடியும் . இந்த தோலை குறிப்பிட்ட செயற்கை உறுப்பின் மீது பொருத்தினால் மட்டும் போதும் .  

கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொள்ளும் பறவைகள் !

கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொள்ளும் பறவைகள் !


இந்தியாவின் அஸ்ஸாம்[Assam] மாநிலத்தை சேர்ந்த ஜெடிங்கா [Jetinga] என்னும் கிராமத்தில்தான்  தான் இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது . இந்த ஊரில் ஏறக்குறைய 2500 மக்கள் வசித்து வருகின்றனர் . இந்த கிராமம் பிரபலம் ஆனதற்கு காரணம் இந்த பறவைகள்  தற்கொலைதான் !

உலகில் பல இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து இங்கு  வரும் பறவைகள்  பெரும்பாலும் திரும்ப செல்வதில்லை . இங்குள்ள வீதிகளில் செத்து விழும் . இது இன்று நேற்று நடப்பதில்லை ! நூற்றாண்டுக்கும் மேலாக இந்த சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது . இந்தியாவில் அறிவியலால் விளக்க முடியாமல் இருக்கும் பல நிகழ்வுகள் உண்டு , அதில் மிகவும் முக்கிய இடம் பெற்றது இந்த பறவைகள்  தற்கொலை தான். 

மேலும் நமது புருவங்களை விரிய வைக்கும் காரணம் , இந்த பறவைகள் அனைத்தும் மாலை 6 முதல் 9.30 மணி அளவில் மட்டுமே இறந்து விழுகின்றது ! மேலும் இது நடப்பது அக்டோபர் மட்டும் செப்டம்பர் மாத அம்மாவாசை தினங்களில் மட்டுமே ! இந்த அமானுஷ்ய நிகழ்வு நடப்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில்  மட்டுமே . இதன் அளவு ஒரு மைல் தூர நீட்டமும் , 600 அடி அகலமும் மட்டுமே  !

இதற்கு பல வகை விளக்கங்கள் கூறப்படுகிறது . 

*கிராமத்தில் உள்ள விளக்கு வெளிச்சங்கள் பறவைகளை குழம்பி விடுகின்றன என்று கூறுகின்றனர் சிலர் .

*அந்த குறிப்பிட்ட இடத்தில் பூமியின் காந்த சக்தி வெளிப்பாடு  அதிகமாக உள்ளது எனவும் , அதனால் தான் பறவைகள் இப்படி நடந்து கொள்கின்றது என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். 

இந்த மாதிரி பல காரணங்கள் கூறப்பட்டாலும் , இது வரை இதை பற்றி தெளிவாக எதுவும் சொல்ல படவில்லை !இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்