புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Wednesday, December 11, 2013

வரலாற்றுச் சுவடுகள் - காலத்தை வென்ற புகைப்படங்கள் : பாகம் - 3

 வரலாற்றுச் சுவடுகள் - காலத்தை வென்ற புகைப்படங்கள் : பாகம் - 3


1945 இல் யூத அகதிகள் தங்களுக்கு விடுதலை கிடைத்ததை கேள்வி பட்டு சந்தோஷத்தில் ஓடிய காட்சி ! 


1926 ஆம் ஆண்டு அமெரிக்க மது விலக்கின் போது சாராயம் கடத்தி சென்ற ஒரு வண்டியை போலீசார் சோதனை போட்ட போது எடுத்த படம் ! [மரம் ஏற்றி செல்லும் வண்டி போல் பொய் தோற்றம் ஏற்படுத்தி கடத்தி வந்துள்ளனர் ]


1860 - 1880 களில்  சாமுராய் வீரர் ! 


ஜோசேப் மற்றும் மக்டா கொஎப்பெல்ஸ் அவர்களின் திருமணம் - 1931 : இந்த திருமணத்தில் மாப்பிள்ளை தோழன் சர்வாதிகாரி ஹிட்லர் !!! 


1945 இல் ஜப்பானின் கோபே நகரின் மீது குண்டு மழை பொழியும் போது எடுத்த படம் !


1860 - 1900 களில் ஜப்பானிய வில் வீரர்கள் !


ஹங்கேரியன் எழுச்சி போராட்டம் - 1956


ரூபி பிரிட்ஜஸ் - வெள்ளையர்கள் படிக்கும் மதிப்புமிகு கான்வென்ட் இல் சேர்ந்த முதல் கருப்பு-அமெரிக்க குழந்தை - தினமும் பாதுகாவலர்கள் உடன் வந்து செல்லும் காட்சி ! 


பெர்லின் மீது போர் தொடுத்து செல்லும் போது இடையில் சர்கஸ் பார்த்து ரசித்து ஓய்வு எடுக்கும் சோவியத் ரஷ்யாவை சேர்ந்த இராணுவ வீரர்கள் - 1945 ஆம் ஆண்டு 


உலகப் புகழ் பெற்ற இசை கலைஞர் லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் தனது மனைவிக்கு எகிப்து நாட்டில் இசை வாசிக்கும் காட்சி ! 


1969 ஆம் ஆண்டு நிலவில் நடந்த பின்பு எடுக்கப்பட்ட படத்தில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் !  


ஆய்வகத்தில் இருக்கும் நிகோலா டெஸ்லாவை சந்திக்க வரும் மார்க் ட்வைன் !


வரலாற்றுச் சுவடுகள் - காலத்தை வென்ற புகைப்படங்கள் : பாகம் - 2

வரலாற்றுச் சுவடுகள் - காலத்தை வென்ற புகைப்படங்கள் : பாகம் - 2


யுத்தம் முடிந்து 1945 ஆம் ஆண்டு வீடு திரும்பிய ஜப்பானிய குடும்பம் !


1893 - முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே நடந்த பனிபந்து  விளையாட்டுக்கு அப்புறம் எடுத்த படம் - பிரின்ஸ்டன் பல்கலை கழக மாணவர்கள் !


போலந்து நாட்டில் உள்ள ஒரு போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் காப்பகத்தில் இருந்த இந்த சிறுமி தெரேஸ்கா வரைந்த படம் தான் இது ! உங்களது வீட்டை வரையுங்கள் என்று கூறியதற்கு இவள் வரைந்த இந்த படம் எந்த அளவு அவள் மனம் பாதிக்கப்பட்டுள்ளது என்று காட்டுகிறது  ?


1945ஆம்  ஆண்டு ஜப்பான் சரண் அடைந்ததை உறுதி செய்து கையொப்பம் இடுகிறார் டௌகலஸ் மக் ஆர்தர் 


விண்ட்ச்டோர் கோட்டையில் கூடிய ஒன்பது ராஜாக்கள் - 1910


வாலிப வயதில் - கென்னெடி குடும்பம் ; ஜான் , பாபி , டெடி - 1930 களில் 


குஸ்டாவ் ரயில் துப்பாக்கியை ஆய்வு செய்கிறார் ஹிட்லர் - 1942


அண்டிஎடம் போர்க்களத்தில்  அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் மற்றும் அவரது படை தளபதி ஜார்ஜ் மெக்களெல்லாம் - அக்டோபர் 3 , 1862 


USS ஹம்ப்ஷிரே கப்பலில் துப்பாக்கி பவுடர் சுமக்கும் வேலையில் 12-14 வயது சிறுவர்கள் மட்டுமே உபயோக படுத்த பட்டனர் ! - 1864


1962 ஆம் ஆண்டு ஏற்பட்ட கியூபா ஏவுகணை பிரச்சனையின் போது ஜான் F . கென்னெடி மற்றும் லிண்டன் B .ஜான்சன் !


ஜெர்மன் படை எடுப்பை எதிர்த்த பிரெஞ்சு நாட்டு பிரஜை ஒருவர் சிரிப்புடன் தனது சாவை ஏற்று கொள்ளும் காட்சி !  - 1944


வரலாற்றுச் சுவடுகள் - காலத்தை வென்ற புகைப்படங்கள் பாகம் - 1

வரலாற்றுச் சுவடுகள் - காலத்தை வென்ற புகைப்படங்கள் : பாகம் - 1 

1956 ஆம் ஆண்டு 5 MB அளவு உள்ள இந்த ஹார்ட் டிஸ்கை விமானத்தில் ஏற்றுகின்றனர் !


1944 ஆம் ஆண்டு ஜெர்மன் பிடியில் இருந்து விடுப்பட்ட ஒரு பிரெஞ்சு நாட்டு பிரஜை , இங்கிலாந்து நாட்டு பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களுக்கு சிகரெட் பத்த வைக்கிறார் !


ஆஸ்திரேலியா நாட்டின் முழுமையான  கடைசி பழங்குடி மக்கள் [Aborigines] - 1860 


1927 ஆம் ஆண்டு நைல் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட படம் !


1942 ஆம் ஆண்டு தனது இல்லத்தின் வெளியே தலையை நீட்டும் அன் ஃபிரான்க் [Anne Frank] - அவரை பற்றி தெரியாதவர்கள் 
இங்கு செல்லவும் Anne Frank 


1965 ஆம் ஆண்டு செயின்ட் லூயிஸ் வளைவு கட்டப்படும் போது எடுக்கப்பட்டது 


இரண்டாம் எலிசபெத் ராணியின் மகுடம் சூட்டும் விழாவில் சிறுவயது இளவரசர் சார்லஸ் - 1953 ஆம் ஆண்டு 


கைது செய்யப்பட்ட ஜெர்மன் வீரர்களின் தலை கவசங்களை நியூ யார்க் நகரத்தில் மக்கள் பார்வைக்காக வைத்துள்ளனர் - 1918 ஆம் ஆண்டு 


நியூ யார்க் சுரங்க ரயில் பாதையின் முதல் பயணிகள் - 1904 


அமெரிக்காவில் 1927 ஆம் ஆண்டு மது விலக்கின் போது எறிப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மது பேழைகள்   !
இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்