புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Friday, December 13, 2013

ஜெர்மன் ராட்வைலர் VS டெரியர் குட்டிகள் !

ஜெர்மன் ராட்வைலர் VS  டெரியர் குட்டிகள்  !


ஜெர்மன் ராட்வைலர்க்கும் [Rottweiler],  டெரியர் [West Highland Terrier] இனத்துக்கும் இடையே இனவிருத்தி என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்றுதான் ! ஆனால் இயற்கை மறுபடியும் நம்மை பார்த்து நகைக்கின்றது ! நமக்கு தெரிந்தது கையளவு மட்டுமே என்று அடிக்கடி ஞாபக படுத்துகிறது !


இந்த இரண்டு நாய் இனங்களும் எதிரும் புதிரும் போன்றது , இருந்தாலும் இவை எப்படி சேர்ந்தது என்று இவைகளின் உரிமையாளருக்கு கூட தெரியவில்லை ! குட்டிகளை ஈன்ற பின் தான் இந்த இரண்டு இனங்களின் கலவையாக இருப்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்துள்ளார் !

 இதன் உரிமையாளர் பேட்டேர்சன் கூறும் பொழுது "இவை இரண்டும் எப்படி ஒன்று சேர்ந்தது என்று எனக்கு தெரியவில்லை , குட்டிகள் இரண்டும் ஆரோக்கியமாக இருந்தாலும் இவற்றை பராமரிக்க செலவு அதிகம் ஆகிறது . இனிமேல் இவ்வாறு நடக்காமல் இருக்க விரைவில் ஜோயி[ராட்வைலர்] மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல போகிறேன்  " என்று கூறினார் !

என்றுமே இயற்கையை யூகிக்க முடியாது எனபதற்கு இது ஒரு சிறு சம்பவம் !
இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்