புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Thursday, December 18, 2014

பாம்புக்கடி வைத்திய முறைகள் !

பாம்புக்கடி வைத்திய முறைகள்


நம்மிடையே பல காலங்களாக இருந்து வந்த நாட்டுப்புற வைத்தியர்கள் (சித்த வைத்தியர்கள்) இப்போது குறைந்து போனதால் நாட்டு மருந்துகளை பற்றிய விசயங்களும் மறைந்து வருகின்றன. முன்பெல்லாம் பாம்பு கடியை பற்றி அவ்வளவாக பயப்பட மாட்டார்கள். கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம் பார்த்து பிழைத்துக்கொள்ளலாம் என்பதை உறுதியாக நம்புவார்கள்.

பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். இன்றைக்கு அரசாங்கம் மக்களுக்கான பாம்பு கடி மருந்துகள் கூட பற்றாக்குறையில் இருக்குமளவுக்கு தான் அரசை நடத்துகிறது. நகரங்களில் நாய் கடித்தவர்களின் புள்ளி விவரம் இருக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை.

பாம்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ஊது சுருட்டை, வளனை, சாரை, தண்ணீர் பாம்பு( டிஸ்கவரி சேனலில் அவ்வப்போது பசிக்கு பியர் கிரில்ஸ் பிடித்து சாப்பிடுவது), கொம்பேறி மூக்கன், மலைப்பாம்பு, கருநாகம், சுண்டக்கருவினை, சாரை என்று பல வகை இருக்கின்றன.ஆனால் இவற்றில் மனிதனை கொல்லக்கூடிய அளவுக்கு விஷமுள்ளவை குறைவே. ஆனால் கடுமையான விஷமுள்ளவை என்று கருநாக வகை பாம்புகளின் கடி தான் ஆபத்தானவை. ஆனாலும் பாம்பு கடித்த அடுத்த நிமிடம் முதலுதவி கிடைத்து விட்டால் கடி பட்ட நபரை பிழைக்க வைத்து விடலாம் என்பது தான் அனுபவத்தில் கண்ட உண்மை.

இது தவிர கடிபட்ட நபர்கள் தன்னை கடித்தது என்ன பாம்பு என்று அடையாளத்தை சரியாக சொல்ல தெரிந்தால் அந்த நபருக்கு நச்சு முறிவு மருந்தை உடனடியாக தேர்வு செய்ய முடியும். பொதுவாக இப்படி அடையாளம் காண தெரியாமல் விடும் போது தரப்படும் தடுப்பு மருந்துகள் ஒருவரின் உயிரை பிழைக்க வைத்து விட்டாலும், கடி பட்ட இடத்தில் இருக்கும் தசை அணுக்கள் செயலற்று போய்விடுகின்றன.

எனவே பாம்பு கடித்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். நோயாளி சுயநினைவுடன் இருக்கும் போதே பாம்பின் அடையாளத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இருக்கும் சில பாம்பு பிடிக்கும் குழு மக்களுக்கு பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை என்று சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் சொல்வதை பார்க்க முடிந்தது. காரணம், காலம் காலமாக இந்த இனத்து மக்கள் பாம்பு பிடிப்பதும், அவர்கள் பாம்பு கடிபடும் போது அது அவர்கள் உடலில் நாளாவட்டத்தில் பாம்பு விஷத்தை முறித்துக்கொள்ளும் அளவு வலிமை பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஆனால் சாதாரண நபர்கள் பாம்புகளிடம் கடி பட்டால் பதறிவிடுகிறார்கள்.

பாம்பு கடித்ததும் ஐயோ....பாம்பு கடித்து விட்டதே என்று அதிர்ச்சியடைகிறார்கள். இப்படி ஏற்படும் அதிர்ச்சியும் பயமும் தான் அந்த நபரை மரணத்தின் விளிம்புக்கு அழைத்து சென்று விடுகிறது. பாம்பு கடித்து விட்டால் பதறக்கூடாது. இது தான் மிக முக்கியமானது. கடித்த பாம்பு தப்பித்து விட்டாலும் அதன் தோற்றத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது தான் மருத்துவர்கள் சரியான விஷ முறிவு மருந்தை தேர்வு செய்ய முடியும்.

பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள். பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.

இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.

மருத்துவர்கள் இல்லாத பல கிராமங்களில் இன்றும் இது நடைமுறையில் இருக்கிறது. இது தவிர பாம்பு கடி பட்ட நபர்களுக்கு வாழை மட்டையை திருகினால் வரும் சாற்றை எடுத்து குடிக்க கொடுப்பதுண்டு. இந்த வாழைப்பட்டை சாறு பாம்பின் விஷத்தை முறிக்கிறது என்பது கைகண்ட வைத்திய முறை.

நாகப்பாம்பு அல்லது கருநாகம் கடித்திருந்தால் கடித்த இடத்தில் ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் ஒரு அங்குல இடைவெளி தென்படும்.

விரியன் பாம்பு கடித்திருந்தால் இரண்டிற்கும் மேற்பட்ட பற்குறிகள் காணப்படும்.

நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் உறையாமல் கடி இடத்திலிருந்து ரத்த ஒழுக்கு இருக்கும்.

பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.

பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடி பட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும். இதனால் மூர்ச்சை தெளிந்து விடும். இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.

நஞ்சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும். அப்போது கசப்பு தெரிந்தால் நஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும். இப்படியான நாட்டு வைத்திய முறையில் பாம்பு கடிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.

சில பாம்புகள் கடித்தால் அறிகுறிகள். . .
நல்ல பாம்பு கடித்தால், கடிபட்ட இடத்தில் வலி இருக்கும். சிலருக்கு வலி தெரியாது. பார்வை மங்கும். கண் இமை சுருங்கும். நாக்கு தடிக்கும். பேச்சு குளறும். வாயில் எச்சில் வடியும். மூச்சு திணறும். நினைவு குறையும்.

கட்டு விரியன் கடித்தால் இந்த அறிகுறியுடன் வயிற்று வலியும் இருக்கும். கண்ணாடி விரியன் கடித்தால் கடிபட்ட இடத்தில் வலி கடுமையாக இருக்கும். கடிபட்ட இடத்தில் வீக்கம், மூச்சுதிணறல், வாந்தி, சோர்வு, சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் ரத்தம் வரும்.

1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா....???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...

2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா....??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி)
காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்...

முதலுதவி:-

1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது

4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.

5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...

எனவே பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம். காரணம், சில நேரங்களில் அது மரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும் உடலின் முக்கிய பாகங்களில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடும். உங்கள் கிராமங்கள் அவசர மருத்துவத்திற்கு எட்டாத இடத்தில் இருந்தால் இது போன்ற முதலுதவிகளை உடனே செய்ய அறிவுறுத்துங்கள்.

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,

1.நல்ல பாம்பு
2.கட்டு வீரியன்
3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு
5.கரு நாகம்
6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து"சீர நஞ்சு" (anti -venom) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.

பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :-

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-

இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது.

இரவில் நச்சுப் பூச்சி ஏதேனும் கடித்து விட்டால் என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடி பட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்
 இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்லபாம்பு என்றும்,
 புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டுவிரியன் பாம்பு என்றும்
 வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்,
 கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும்
அறிந்து உணரலாம்.

தேள்கடி மருந்துகள் :
 எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள்கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும்.
 கல்லில் சில சொட்டுத் தண்ணீரைத் தெளித்து அதில் புளியங் கொட்டையைச் சூடு உண்டாகும்படி தேய்த்துத் தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும்; நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்துவிடும்.
 சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும். பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும்.
 குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.

ஒற்றை மருத்துவம்:-
சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர்.
 நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும்.
 பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

வெறிநாய்க்கடி மருந்து :
 வெறிநாய் கடித்து விட்டால் நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

பாம்புக்கடி மருந்து :
 பாம்பு கடித்து விட்டால் உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்கவைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழிய வேண்டும். சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில் படுக்கவைத்தவன் பல்கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.

நஞ்சு முறிப்பு
 எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க, நாயுருவியின் விதையை வீசும்படி எடுத்து வெய்யலில் காயவைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும்.

 உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம் வெளியேறிவிடும். வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்துவிட்டால் நஞ்சு முறிந்து போகும்.

சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது. நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் மருந்துண்டு. ஆனால் சித்த மருத்துவத்தின் பயன்பாடுதான் இப்போது குறைந்து வருகிறது

Sunday, December 14, 2014

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்


அரசர் இரண்டாம் ஹியரோ தனது யுத்த வெற்றிகளை கொண்டாடுவதற்காக கோவிலொன்றுக்கு தங்க கிரிடமொன்றை வழங்க நாடினார். அதற்காக கொல்லனுக்கு தூய தங்கம் வழங்கியிருந்தார். கொல்லனும் அரசரின் கட்டளைப்படி கிரீடத்தை செய்து கொடுத்தான். ஆனால் கொல்லன் கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளி கலந்திருப்பான் என்ற வதந்தி பரவியது. ஆனால் அரசன் உண்மையை அறியாமல் அவனை தண்டிக்க விரும்பவில்லை. எனவே அவர் இப்புதிரை தீர்க்கும் பொறுப்பை ஆர்க்கிமிடீஸ் எனும் அக்காலத்தில் சிறந்த கணித மேதையிடம் ஒப்படைத்தார்.

இதன்பிறகு ஆர்க்கிமிடீஸ் ஒருநாள் குளிக்கும்போது குளியல் தொட்டியில் தண்ணீரின் உயரம் தான் உள்ளே இறங்கும்போது உயருவதைக் கண்டார். இதை வைத்து அரசரின் கேள்விக்கு விடை கண்டுவிடலாமே என்று உணர்ந்து யுரேகா (கண்டுபிடித்துவிட்டேன்) என்று கத்திக்கொண்டு தனது உடைகளையும் அணியாமல் வீதியில் ஓடினார்.இத்ததுவதத்தின் மூலம் அவர் தங்கம் வெள்ளியின் அடர்த்தியின் அளவை ஒப்பிட்டு கொல்லன் கிரீடத்தில் வெள்ளி கலந்த்ததை நிரூபித்தார்.

ஆர்க்கிமிடீஸ் தத்துவம்,

ஒரு பாய்மத்தினுள் (திரவம் அல்லது வாயு) அமிழ்த்தப்பட்ட ஒரு பொருளின் மீது அப்பாய்மம் செலுத்தும் மிதப்பு-விசை அப்பொருளினால் இடப்பெயர்க்கப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமம் எனக் கூறுகிறது. இன்னொரு வகையில் கூறுவோமானால் ஒரு பொருள் ஒரு நீர்மத்தினுள் மூழ்கியிருக்கும் போது அது இழந்ததாகத் தோன்றும் எடை அதனால் வெளியேற்றப்பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமம். இத்தத்துவம் முழுமையாக அமிழ்த்தப்பட்ட பொருளுக்கும் பொருந்தும்; ஒரு-பகுதி அமிழ்த்தப்பட்ட பொருளுக்கும் பொருந்தும். ஆனால், பொருள்களின் எடையின்மை நிலையில் ஆர்க்கிமிடீசு தத்துவம் உண்மையாயிராது.


பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்


பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்


ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன.


ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகி றது. நாம் அதனிடமிருந்து தப்பி க்க ஏதேனும் வழி கண்டாக வேண்டும்’ என்று உணர்ச்சியுடன் பேசியது.

கிழ எலி ஒன்று எழுந்து, ‘நீ சொல்வது உண்மைதான். நாம் எல்லோரும் பூனைக்கு அஞ்சி அஞ்சித்தான் வாழ்கிறோம். அதனிடமிருந்து தப்பிக்க வழி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே, என்ன செய்வது?’ என்றது.

அங்கிருந்த சுண்டெலி ஒன்று எழுந்தது. ‘நாம் எதிர்பாராத நேரத்தில் பூனை நம் மீது பாய்ந்து பிடித்துக் கொள்கிறது. நம்மால் தப்பிக்க முடியவில்லை. பூனை வருவது நமக்கு முன்னரே தெரிந்தால் நாம் அதனிடமிருந்து தப்பிக்க முடியும்.

நாம் எப்படியாவது முயன்று பூனையின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டிவிட்டால் போதும். அது வரும் போதெல்லாம் மணி ஓசை நமக்குக் கேட்கும். நாம் வளைக்குள் பாதுகாப்பாகப் பதுங்கிக்கொள்ளலாம். பூனையால் நம்மைப் பிடிக்கவே முடியாது’ என்றது.

‘ஆ! அருமையான திட்டம். இனி அந்தப் பூனையால் நம்மைப் பிடித்துத் தின்ன முடியாது’ என்று பல எலிகள் அந்தச் சுண்டெலியைப் பாராட்டின.

‘திட்டம் நல்ல திட்டம்தான். அதை நிறைவேற்றுவதில் ஒரு சிக்கல் உள்ளதே’ என்றது கிழ எலி ஒன்று.

‘பூனையின் கழுத்தில் மணி கட்டப் போவது யார்? நீங்களா அல்லது திட்டத்தைச் சொன்ன சுண்டெலியா? நம்மால் பூனையின் அருகே சென்று உயிருடன் திரும்ப முடியுமா? இயலாத செயலுக்கு ஏன் இப்படி ஆரவாரம் செய்கிaர்கள்?’ என்றது அது.

அப்பொழுதுதான் மற்ற எலிகளுக்கும் ‘பூனையின் கழுத்தில் மணி கட்டுவது இயலாத செயல்’ என்பது புரிந்தது.

எல்லா எலிகளும் தலையை கவிழ்த்தன. ஆனால் இரு இளம் எலிகள் இரு வேறு யோசனைகள் கூறி பூனையின் கழுத்தில் மணியைக் கட்டின. அவற்றைக் கேட்டு வியந்த மற்றைய எலிகள் இவ்விரு எலிகளின் புத்திக் கூர்மையை மெச்சின. அடுத்தநாள் பூனை வரும்போது மணியோசை கேட்டது. எலிகள் ஓடி ஒளிந்தன. பூனைக்கு ஏமாற்றம். அதற்குப் பிறகு, பூனையால் அந்த வீட்டில் ஓர் எலியைக்கூட பிடிக்க முடியவில்லை. இவ்விரு யோசனைகளில் உங்களால் ஒன்றாவது கூற முடியுமா?


புதிர்விடை :

முதல் புத்திசாலி எலி கூறியது

‘நான் இரவு நேரத்தில் பக்கத்து மருந்துக்கடையிலிருந்து தூக்க மாத்திரைகளை எடுத்து வந்தேன். பூனை குடிக்கும் பாலில் அவற்றைப் போட்டேன். அது, அயர்ந்து தூங்கும்போது மணியைக் கட்டினேன்’ என்று சொன்னது.

இரண்டாம் எலியோ


‘பூனையின் கழுத்தில் மணி கட்ட முடியாது . ஆனால், பூனை குட்டி போட்டிருக்கிறது. அந்தக் குட்டி இன்னும் கண் விழிக்கவில்லை. அதன் கழுத்தில் மணியைக் கட்டலாம். அதன்படியே, தாய்ப் பூனை வேட்டையாடச் சென்றிருக்கும் போது, எலிகள் ஒன்றுசேர்ந்து கண் விழிக்காத குட்டியின் கழுத்தில், சிறியதொரு மணியைக் கட்டின. பின் பூனை குட்டியோடு வரும்போது மணிச் சத்தம் கேட்டு ஓடி ஒளிந்தன. அத்தோடு அக் குட்டிப் பூனை பெரிதானாலும் மணி அதன் கழுத்திலேயே தொடர்ந்தும் இருக்கும்.

ஒரு பெண் , ஒரு கடைக்காரன் , ஒரு போலி நோட்டு ! - புதிர் கதை

ஒரு பெண் , ஒரு கடைக்காரன் , ஒரு போலி நோட்டு ! - புதிர் கதை 


பெண்ணொருத்தி ஓர் கடையில் 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கினாள். கடை முதலாளியும்  இலாபம் ஏதும் இன்றி அவ்விலைக்கு விற்க 1000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்தாள் அவள்.அதை கவனிக்காத கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்கி வந்தார்.

திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை அப் பெண்ணிடம் கொடுத்துவிட்டார். சிறிது நேரம் கழித்து போலி நோட்டை அடையாளங் கண்ட பக்கத்து கடை காரர், முதல் கடைக் காரரிடம் வந்து “இந்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு” என்று சொல்லி கொடுத்து விட்டு  1000 ரூபாய் தூய நோட்டாக வாங்கி சென்றார்.
முடிவில் முதல் கடை காரருக்கு எவ்வளவு நஷ்டம்”  ?

Thursday, May 8, 2014

சிப்ஸ் மட்டுமே சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிரும் பெண்

சிப்ஸ் மட்டுமே சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிரும் பெண்


குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான, ´சிப்ஸ்´ வகைகளை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் நலம் பாதிக்கப்படும் என, பெற்றோர் எச்சரிப்பர்.

ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 15 ஆண்டுகளாக, சிப்ஸ் வகைகளை மட்டுமே சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

இங்கிலாந்தில் வசிப்பவர், ஹைனா 20. இவரின், 5வது வயதில், வினோத நோய் ஏற்பட்டது. எந்த உணவானாலும் இவர் உடல்நலம் பாதிக்கப்படும்.

இதன் காரணமாக, 5 வயதில் இருந்து, இப்போது வரை சிப்சை மட்டும் சாப்பிட்டு வருகிறார். இவரை பரிசோதித்த டாக்டர்கள், ´செலக்டிவ் ஈட்டிங் டிஸ்ஆர்டர்´ என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரே மாதிரியான உணவை உட்கொள்வர் என்றும், வேறு உணவைக் கண்டால், இவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் கூறினர்.

இதையடுத்து சமீபத்தில், மனநல ஆலோசகர் பெலிக்ஸ் எகனாமிக்ஸ் என்பவர், ஹைனாவை, ´ஹிப்னாட்டிசம்´ எனப்படும் மன மயக்கத்தில் ஆழ்த்தி, அவர் மனநிலையை மாற்றி, பீட்சா உணவை சாப்பிட வைத்தார். சிப்சை தவிர்த்து, வேறு உணவை சாப்பிட்டு அறியாத ஹைனா, இன்னும் ஆரோக்கியமாக உள்ளார் என்பது அனைவருக்கும் ஆச்சர்யமான விஷயம்.

குறுஞ்செய்தி அனுப்பியதற்கு மரணதண்டனையா !!!

குறுஞ்செய்தி அனுப்பியதற்கு மரணதண்டனையா  !!!


பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்துவ தம்பதிகள் நபிகள் நாயகத்தை அவமதித்து எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு பாகிஸ்தான் கோர்ட் மரண தண்டனை அளித்துள்ளது.


பாகிஸ்தானில் உள்ள கோஜ்ரா என்ற நகரில் வசித்து வரும் இமானுவே-ஷகுப்டா கவுசர் என்ற தம்பதியினர் மீது அதே நகரில் உள்ள மசூதி ஒன்றின் தலைவர் மெளல்வி முகமது ஹூசை என்பவர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில் இந்த தம்பதியினர் தங்களது செல்போனில் இருந்து நபிகள் நாயகத்தை அவமதிக்கும்படியான ஒரு எஸ்.எம்.எஸ் ஐ தனது செல்போனுக்கு அவர்கள் அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதை தம்பதிகள் இருவரும் மறுத்தனர். தங்கள் செல்போன் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொலைந்துவிட்டதாகவும், தங்களுக்கு வேண்டாத சிலர், தங்களது மொபைல்போன் மூலம் தவறான எஸ்.எம்.எஸை அனுப்பி தங்களை சிக்கலில் மாட்டிவிட்டிருப்பதாகவும் வாதாடினர்.

ஆனால் பாகிஸ்தான் கோர்ட் நேற்று அளித்த தீர்ப்பில் இருவருக்கும் மரணதண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை அளித்த நீதிபதி மியான் அமீர் ஹபீப், ‘நபிகள் நாயகத்தை அவமதிப்பவர்களை மன்னிக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தம்பதியினர் மேல்முறையீடு செய்யவிருப்பதாக கூறியுள்ளனர்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு..!!

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு..!!


மேற்கு வங்காள மாநிலம், மிட்னப்பூர் மாவட்டத்தில் கலைகுண்டா ராணுவ விமானதளம் உள்ளது. இதன் அருகே உள்ள மவுலிஷோல் கிராமத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் விளக்கு கம்பம் நடுவதற்காக ஊழியர்கள் பள்ளம் தோண்டினர்.


சுமார் 3 அடி ஆழம் தோண்டிய போது, கடப்பாரை ஏதோ ஒரு உலோகத்தின் மீது மோதுவதை உணர்ந்த ஊழியர்கள், மண்ணை கையினால் அகற்றிப் பார்த்து, திகைப்படைந்ததனர்.

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட 450 கிலோ எடையுள்ள வெடிகுண்டு 4 அடி நீளத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த வெடி குண்டினை கைப்பற்றி பத்திரமாக கொண்டு சென்றனர்.

1933-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த வெடிகுண்டை அருகாமையில் உள்ள துத்குன்டி காட்டில் செயலிழக்க வைக்கும் முயறசியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Monday, May 5, 2014

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?


ஆண்களுக்கு பேயாடத் தெரியாதா? அல்லது பேய் வராதா? அல்லது பெண்களை மட்டும்தான் பேய் பிடிக்குமா? அல்லது ஆண்களுக்கு பேய் பிடித்தாலும் அமைதியாக இருப்பார்களா? ஆண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறு, பெண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறா?

இன்னும் என்னென்ன கேள்விகள்.. இவையனைத்தையும் மீறி படிப்போரின் மனதில் இன்னும் புதிய கேள்விகள் அடுக்கடுக்காக எழத்தான் செய்கின்றன!

அது சரி, உங்களிடம் ஒரு சின்ன கேள்வி! ஸ்வீட் சாப்பிட்டு பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் ஸ்வீட் என்றால் இனிப்பு என்று தெரியும். இனிப்பு தெரியும் என்றால் இனிப்பை உங்களால் காட்ட முடியுமா?

சர்க்கரையை காட்டுவீர்கள்.. அதன் பெயர் சர்க்கரைதான்! லட்டை காட்டினால் அதன் பெயர் லட்டுதான்!

பின்பு இனிப்பு ஏங்கே?

இந்த சின்ன கேள்விக்கே பதில் இல்லை இது அன்றாடம் நம் வாழ்வில் அனுபவிக்கும் ஒன்று, நீங்கள் தினம் தினம் உணரும் அனுபவம் அனைவரும் ஒப்புக் கொண்ட அனுபவம்! ஆனால் யாருக்கும் காட்ட முடியாத ஒன்று!

இப்படித்தான் இந்த பேய் என்ற சொல்லும்கூட!


சற்று மேலே தலைப்பை பாருங்கள்! அந்த கேள்விக்குறியை மட்டும் சற்று நேரம் உற்றுப்பாருங்கள்.. அதுவும் ஒருபேய் ஆடுவதைப்போலத்தான் தெரியும். (மிரண்டவன் கண்ணுக்கு) அது போகட்டும்!

பேய் என்று ஒன்று உண்டா? அதன் உறைவிடம் ஏது? அது யாரை தாக்கும்? நான் கண்டதில்லையே! என சிலர்... பேயாடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன் என ஒரு சிலர்!

சரி இதுபோன்ற ஆட்டங்களை எங்கே காண முடிகிறது?

மனிதர்களைப் போன்று சாதி,மதம், இன வேறுபாடு இவற்றிற்கு உண்டா? எனக்கும் தெரியாது... ஆனால் நிகழ்ச்சிகள், இதுவரை நடந்தேறியவைகள் என்ன கூறுகிறதென்று பார்ப்போம்.!

ஒரு அம்மன் கோயிலுக்குப் போகிறோம் என வைததுக்கொள் ளுங்களேன்! அங்கே பூiஜக்கு வரும் அனைவரும் ஆடுவதில்லை. ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே ஆடுவதைப் பார்க்கிறோம். அவற்றிற்கு பல பெயர்களும் உண்டு அதை அவர்கள் வாயால் உச்சரிக்கும்போது,

ஆஹா.. நான்தான் முனீஸ்வரன் வந்திருக்கேன்!

என்னை யாருன்னு நினைச்சடா? நான் ஆத்தா...

யாராலும் அடக்க முடியாத சங்கிலி கருப்பன்டா நான்!

நன்றி : சிவா 

நோய் வராமல் தடுக்கும் உடற்பயிற்சிகள்

நோய் வராமல் தடுக்கும் உடற்பயிற்சிகள்

நோய் வராமல் தடுக்கும் உடற்பயிற்சி உடல் எடை அதிகரிப்பது தான் பல்வேறு நோய்கள் வர காரணம் என்று மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நம்முன்னோர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள்.அளவான உடல் அமைப்பு தான் அழகை தரும் என்று பெண்களில் பலர் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறார்கள். ஆண்களிலும் உடலை பேணுகிறவர்கள் உண்டு என்றாலும் ஏதோ ஒரு காரணத்தால் பலருக்கு உடல் எடை அதிகரித்துவிடுகிறது. உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி தான் சிறந்த வழி.

நோய் வராமல் உடலை பேணுவதற்கு வழி என்ன? அதிக எடை உள்ளவர்கள், எந்த பயிற்சியை செய்தால் என்ன பலன்கிடைக்கும். குறிப்பிட்ட உடற்பயிற்சி செய்யும் போது எதை தவிர்க்க வேண்டும்? எந்த வகை உணவு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது பற்றிய குறிப்புகளை `மாலை மலர்’ வாசகர்களுக்காக டாக்டர் கமலி ஸ்ரீபால் வழங்குகிறார்.

இதோ உங்களுக்காக…
நீங்கள் தினமும் சுமார் 30 நிமிடங்கள் கீழ்கண்ட பயிற்சிகள் செய்தால் உங்கள் எடையின் படி சுமார் எவ்வளவு `கிலோ ஜோல்ஸ்’ குறையும் என்பது இங்கே தரப்பட்டுள்ளது.


1. 55 கிலோ எடை கொண்டவர்கள் குறையும் அளவு (கிலோ ஜோல்ஸ்)
2. 65 கிலோ எடை கொண்டவர்கள் குறையும் அளவு (கிலோ ஜோல்ஸ்)   3. 75 கிலோ எடை கொண்டவர்கள் குறையும் அளவு (கிலோ ஜோல்ஸ்)   4. 90 கிலோ எடை கொண்டவர்கள் குறையும் அளவு (கிலோ ஜோல்ஸ்)


55 கிலோ எடை கொண்டவர்கள் 1 எண்ணில் உள்ள அளவைவும், 65 கிலோ எடை கொண்டவர்கள் 2 எண்ணில் உள்ள அளவைவும், 75 கிலோ எடை கொண்டவர்கள் 3 எண்ணில் உள்ள அளவைவும், 90 கிலோ எடை கொண்டவர்கள் 4 எண்ணில் உள்ள அளவைவும் கணக்கில் கொள்ளவும்.பயிற்சி                                                     1          2         3       4


சைக்கிள் (10 கி.மீ. வேகம்)             400    500    550    600+
சைக்கிள் (20 கி.மீ. வேகம்)             700    800    1000    1200+
ஸ்கிப்பிங்                                             1200   1400    1500   2000+
ஓட்டம் (10 கி.மீ. வேகம்)                 1250    1500   1700    2000+
ஓட்டம் (11 கி.மீ. வேகம்)                 1600    1900   2000    2500+
நீச்சல் 25 மீட்டர்/நிமிடம்                 450    550    650    750+
நீச்சல் 50 மீட்டர்/நிமிடம்                 850    1000    1200    1300+
நடைபயிற்சி 3 கி.மீ./1 மணி           400    500    550    650+
நடைபயிற்சி 5 கி.மீ./1 மணி           550    650     750    850+
நடைபயிற்சி 6.5 கி.மீ./1மணி         750    900    1000    1100+
டென்னிஸ்                                           700      800    9000    1000+


மேற்கண்ட உடற்பயிற்சிகள் கூறப்பட்டிருந்தாலும் மருத்துவ ரீதியாக அன்றாடம் 30 நிமிட நடைபயிற்சியே உங்களை ஆரோக்கியமாக வைக்க போதுமானது.

Friday, May 2, 2014

அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)


உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால்  நம் எல்லோரையும் அதிர வைக்கும் 

ஒரு மர்மம்!  இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது  இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!


தேஜா வு (Deja vu)

தேஜா வு (Deja vu)

“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது,  இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!

இதுவரைக்கும் நாம பார்த்த விஷயங்கள் சில “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி” இருந்திருக்கும் உங்களுக்கு. எனக்கும்தாங்க! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம்,  நம்ம எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசில அனுபவப்பட்டதா/கேள்விப்பட்டதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன். என்னன்னு யூகிக்க முடியுதா உங்களால……?!


Thursday, May 1, 2014

தீராத தீவிரவாதம்.. (கவிதை)

தீராத தீவிரவாதம்.. (கவிதை) 


எது தீவிரவாதம்?
எச்சில் உமிழும் வேகத்திலும்
எட்டி குதிக்கிறது தீவிரவாதம்..

எழுந்து நடைபழகும் வயதில்
முட்டை கொடுத்து
பின் மீனறுத்து
பிறகு கோழி விரட்டிப் பிடித்து
துடிதுடிக்க கழுத்தையறுக்கும் கொடூரத்திலிருந்து
குழந்தைக்குப் பரிட்சையமாகிறது
தீவிரவாதம்..

எதிரியைச் சுடுவது வெற்றி
தான் விழுந்தால் கொலையெனும்
மனோபாவம்
தீவிரவாதத்தின் முதல் போதனையாகப்
பதிகிறது
மனதுள் பிற கேள்விகளின்றி..

அப்பா அம்மாவிற்கிடையே
விழும் கோடுமிழும்
பேத பிரிவினையை,

ஆசிரியர் தவறாக அடிக்கும்
ஒரு அடி கற்பிக்கும்
அதர்மத்தின் சீற்றத்தை,

நண்பன் இழைக்கும் காழ்ப்புணர்வு கொடுக்கும்
தீவிரவாதத்திற்கான
சிறு தீயை,

என் வீடு
என் நாடு
எனது மொழி
எனது மக்கள் எனும்
பிடிப்பு இடர்கையில் கூடும் வெறியில்
முரண்பட்டப் புரிதலில்
முளைத்துவிடுகிறது தீவிரவாதம்..

அனிச்ச மலருக்கு வலிக்குமோ
பச்சைப்பிள்ளை பாவம் துடிக்குமோ
என்று பதறும் மனசுதான்
எல்லோருக்கும்
பிறக்கையிலிருக்கிறது,

அதில்
அறமறுக்கும் கத்தியை
நாம் தீட்டாதவரை -
குழந்தைகளுக்குத் தெரியாது தீவிரவாதம்;

அதைப் புரிந்து நாம் மாறாதவரை
முற்றிலும்
தீராதிந்த தீவிரவாதம்..
———————————————————————-
நன்றி : வித்யாசாகர்


Wednesday, April 30, 2014

ரொமான்ஸ் ரகசியம் ! ♥

ரொமான்ஸ் ரகசியம் ! ♥ 


ரொமான்ஸ் என்பது ஊடலின் ஒருபகுதி என்பது இன்றைய தம்பதிகளுக்கு தெரிவதில்லை. ரொமன்ஸை சினிமாவிற்கும் அதில் வரும் கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு மட்டும் சம்பந்தமான விசயமாகவே பலர் கருதுகிறார்கள். கலாச்சாரத்தோடு ஒன்றிய நம் தேசத்தில் தம்பதியர், நான் ரெடி..! நீங்க ரெடியா? என்று நேராகவோ.. மறைமுகமாகவோ கேட்பதில்லை. ஆசை அருபது நாள் மோகம் முப்பது நாள் என்பதோடு வாழ்வின் இனிய பயணம் முடிந்து விடுவதில்லை.கணவன்-மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், தங்கள் உறவை திருப்திகரமாக்கிக் கொள்ளவும் ரொமான்ஸ் அவசியம். திருமண உறவு மூழ்கிப்போகாமல் காப்பாற்றும் ரகசிய பார்முலாவில் மிகவும் முக்கியமான விசயம் ரொமான்ஸ்! நாம் வாழும் வாழ்க்கையை கடைசிவரை அதன் கிக் குறையாமல் கலர்புல்லாக வைத்திருக்கும் உணர்வு ரொமான்ஸ்..

இனிதாக ஆரம்பிங்க

திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவி கலகலப்பாக இருக்க முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உங்கள் வயதை மறப்பது தான்...! ஆம் , இளைஞர்கள் திருமணத்திற்கு முன்புவரை நண்பர்களுடன் கலகலப்பாக கடி ஜோக்கும், வேடிக்கைப் பேச்சுமாக இருப்பார்கள். திருமண்ம் முடிந்த அடுத்த நிமிடமே தனக்கு ஏதோ பத்து வயது கூடிவிட்டது போல உணர ஆரம்பித்து விடுவார்கள். சரி அவன் தான் அப்படி நினைக்கிறான்-னு பார்த்தால், அவனது சொந்த பந்தம், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் தரும் அட்வைஸ் வேறு இன்னும் அவன் வயதை கூட்டுகிற மாதிரி இருக்கும். கண்ணா நீ முன்ன மாதிரி விளையாட்டுப்பிள்ளை இல்லை.. இனிமேல் உன் வால்தனத்தை எல்லாம் சுருட்டி வெச்சிட்டு குடும்பஸ்தனா லட்சனமா பொருப்பா நடந்துக்கோ-னு உபதேசம் குவியும்.. இதையெல்லாம் கேட்ட அந்தப் பையன் ஓகோ குடும்பஸ்தன்-னா இப்படித்தான் இருக்கனும் போல-னு நினைக்கிறான். எந்த ஒரு விசயத்தையும் சீரியஸாக அணுகுவது தான் குடும்பஸ்தனுக்கு அழகு என்பதுபோல் நம் சமூகம் அவனுக்கு ஒரு வரைபடம் காட்டுகிறது. நாமும் அந்த வரைபடத்தில் தான் இருக்க வேண்டுமென்று தன்னைப் பொருத்திக் கொள்கிறான்..


ஒரு சேம்பிள் சொல்றேன்..
   அந்த இளைஞன் வாரத்திற்கு இரண்டு நாள் சினிமாவிற்கு போவதும்.. விசிலடித்து பாட்டு பாடுவதும்.. டிவி-யில் காதை பிழக்கும் அளவு சத்தம் வைத்து டான்ஸ் ஆடுவதுமாக இருப்பவன் எதற்காக திருமணத்திற்குப் பின் இதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும்?
சொல்லப்போனால், திருமணத்திற்குப் பின் அவன் தன் மனைவியுடன் சேர்ந்து இதை தொடரலாமே..!
  மனைவி காலையில் அரைத் தூக்கத்துடன் பால்பூத்-ல் நிற்க்கும் போதும், பஸ்சில் கூட்டத்துடன் கூட்டமாக செல்லும் பொழுது வரும் டென்சனில், அலுவலக மேனேஜரின் காரப்பேச்சில் சிக்கும் போதும் அவளுக்கு ஏற்படும் மன இறுக்கத்தை உடைக்க கணவனின் விசிலும், டான்சும் உதவலாமே....!
 * அன்பு மனைவிக்கு ஒரு முழம் பூ, நாலுவரிக் கவிதை, பிரியமான ஒரு சொல், எதிர்பாராத முத்தம், செல்லமாக ஒரு தட்டல், கிளுகிளுப்பான ஒரு கிள்ளல் என்று எத்தனையோ விசயங்கள் சந்தோசப்பட வைக்கின்றன.இது மட்டும் ரொமான்ஸ் அல்ல...
*  உங்கள் கணவர் அல்லது மனைவி மிகவும் டென்சனாக ஒரு வேளையைச் செய்து கொண்டிருக்கும்பொழுது அந்த டென்சனை மறந்து அவர் ரசிக்கும் விதத்தில் ஜோக் அடிப்பவரா நீங்கள்? அப்படியானால் நீங்களும் ஒரு ரொமான்டிக் நபர் தான்.
*  அடிக்கடி, அதிலும் குறிப்பாக வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் குறையும் நேரங்களில் எல்லாம் நீங்கள் இருவரும் முதன்முதலாகச் சந்தித்துக்கொண்ட அந்த நிமிடங்கள் பற்றியும், காதலும் படபடப்பும் பின்னிப்பிணைய நீங்கள் பேசிய டயலாக்குகள் பற்றியும் நினைத்துப் பார்த்துத் தன் துணையுடன் பகிர்ந்துகொள்ளும் நபரா நீங்கள்? அப்படியானால் நீங்களும் ஒரு ரொமான்டிக் நபர் தான்.

Tuesday, April 29, 2014

உலகின் தீரா மர்மங்கள் - ஸ்டோன் ஹென்ஜ்

உலகின் தீரா மர்மங்கள் - ஸ்டோன் ஹென்ஜ்


உலகின் தீரா மர்மங்களில் ஸ்டோன் ஹென்ஜ் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. தோராயமாக இதன் வயதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கணித்திருக்கிறார்கள். இன்றைய பிரிட்டனின் மிகப்பழமையான புராதனச்சின்னங்களில் இதுதான் முதலிடம் என்பது கூடுதல் சிறப்பு.

ஸ்டோன் ஹென்ஜ் பார்க்க எண்ணி பயணீத்தீர்களேயானால், ஒரு சில மலைகளைத் தாண்டிச் செல்லும் பயணத்தில் திடீரென இந்த அமானுஷ்ய இடத்துக்குள் நுழைவீர்கள். இந்த இடத்தின் மயான அமைதியும், வீசும் வித்தியாசமான காற்றும் உங்களுக்குள் ஒரு மர்மத்தாக்கத்தை நிச்சயம் உண்டாக்கும்.  

இது உருவாக்கப்பட்ட விதமாக ஆராய்ச்சியாளர்களால் கணிக்கப்பட்ட தகவல்கள் இதுதான்…
1)   முதலில் கி.மு.3100ம் ஆண்டில் மதச்சடங்குகளுக்காக தொடர் பள்ளங்கள் தோண்டப்பட்டிருக்கின்றன.
2)   அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் இந்த கல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. வேல்ஸ் மலையிலிருந்து பெரிய பெரிய கருங்கற்கள் கிட்டத்தட்ட 240மைல் தொலைவுக்கு எடுத்துவரப்பட்டிருக்கிறது. சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் எதற்காக, யாரால், எப்படி இந்தக் கற்கள் இவ்வளவு தூரம் எடுத்து வரப்பட்டிருக்கும் என்பது மர்மமே. இவ்வாறு எடுத்து வரப்பட்ட கற்கள் முற்றுபெறாத ஒரு இரட்டை வட்ட வடிவில் மிட்சம்மர் சூரிய உதயத்திற்கு அலைன்மெண்ட் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது.
3)   இதன் முன்னர் மூன்றாவது நிலையாக கி.மு.2000வது ஆண்டில் மேலும் சில கற்கள் 25மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்திலிருந்து எடுத்துவரப்பட்டிருக்கிறது.
4)   இதன் பின்னர் மேலும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ ஒரு சிலரால் இன்றைய குதிரைக் குளம்பு போன்ற வட்ட வடிவத்தில் இந்தக்கற்கள் மறுஒழுங்கு செய்யப்பட்டு அடுக்கப்பட்டிருக்கிறது.

இன்று வரையிலும் இந்தக்கற்கள் அடுக்கப்பட்டிருப்பதன் அர்த்தம் எந்தவொரு முடிவையும் எட்டவில்லை. இது ஒரு வழிபாட்டுத்தலம், வானவெளி சம்பந்தப்பட்ட காலண்டர், சுடுகாட்டு மயானம் என்று விதவிதமான கதைகள் திரிந்தாலும் இது இன்னமும் தீர்க்கப்படாத ஒரு மர்மம்தான்!!!

 

உலகின் தீரா மர்மங்கள் - பயிர் வட்டங்கள்

உலகின் தீரா மர்மங்கள் - பயிர் வட்டங்கள்


2014 வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பயிர் வட்டங்கள் ஒரு சுவாரசியமான மர்மங்கள். விளைந்திருக்கும் பயிரில் ஒரே இரவில் ஏதோவொரு அமானுஷ்ய சக்தி இதுபோன்ற உருவங்களை உருவாக்கிச் செல்வதாய் கதைகள் நீள்கின்றன. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த பயிர் வட்டங்கள் தோன்றியிருக்கும் போதும் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகம் பதியப்பட்டிருப்பது இங்கிலாந்தில்தான்.


பெரும்பாலான உருவங்கள் ஒரே இரவில் மனிதர்கள் உருவாக்க சாத்தியமேயில்லாத முறையில் உருவாக்கப்பட்டிருப்பது இதன் மர்மத்தை மேலும் கூட்டுகிறது. இரவுப்பொழுதில் வெளிச்சம் இல்லாமல் சுற்றியிருக்கும் பயிருக்கு எந்தவொரு சிறு சேதமும் இல்லாமல் எந்தவொரு வாகனமோ, மனிதக்காலடியோ, இல்லை இயந்திரத்தின் தடயமோ இல்லாமல் இப்படிப்பட்ட படைப்புகள் உருவாக்கப்படுவது மர்மத்திலும் மர்மமே. அதுவும் சில ஆராய்ச்சிகளில் இந்த பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்ட இடத்தின் மண் மட்டும் பாறைப்படிவம் போல மாறியிருப்பது மர்மத்தின் உச்சம். ஏனென்றால் ஒரு சாதாரண மண் இறுகிப் பாறைபடிவம் போல மாறவேண்டுமென்றால் அதற்கு இயற்கையாய் 1000 ஆண்டுகளுக்குமேல் தேவைப்படும். இப்படி ஒரேயிரவில் பாறைப்படிவம் போல மாறவேண்டுமானால் கிட்டத்தட்ட 8000 டிகிரி வெப்பத்தில் மண்ணை சூடுபடுத்தவேண்டும். அவ்வாறு வெப்பம் உண்டாக்கப்படும் பட்சத்தில் அந்த இடமே சின்ன புல் பூண்டு கூட இல்லாமல் பஸ்பமாகிவிடும். மேலும் இதேப்போன்ற பயிர் வட்டங்களை மனிதர்களைக்கொண்டு உருவாக்க நடந்த ஆராய்ச்சிகளின் முடிவில் ஒரு சாதாரண உருவத்தை பகல் வெளிச்சத்தில் உருவாக்கவே 5 நாட்களுக்கும் மேல் ஆகியிருக்கிறது. அதைவிட முக்கிய விஷயம் மனிதர்களைக்கொண்டு இந்த முயற்சியைச் செய்தபோது பயிர்கள் நிறைய உடைபட்டிருக்கின்றன. மனிதர்களின் சேற்றுக்காலடித்தடங்கள் பயிர்களில் பதிந்திருக்கின்றன. ஆனால் உண்மையான பயிர்வட்டங்களில் பயிர்கள் மடக்கப்பட்டிருந்தாலும், வளைக்கப்பட்டிருந்தாலும் இதுவரை ஒரு பயிர்கூட சேதப்பட்டிருக்கவில்லை என்பது கூடுதல் ஆச்சர்யம்.

இந்தப் பயிர் வட்டங்கள் இரவு நேரத்தில் வானத்திலிருந்து வரும் ஒரு ஒளிக்கற்றையால் உருவாக்கப்படுவதாகவும், வேற்றுக்கிரக வாசிகளின் வாகனம் இறங்கிச் சென்ற தடையங்களே இந்தப்பயிர் வட்டங்கள் என்றும், இந்தப்பயிர் வட்டங்களுக்குள் செல்லும் மிருகங்கள் மிரண்டு ஓடுவதாகவும், இந்தப்பயிர் வட்டங்களுக்குள் கடிகாரம் வேகமாகவும், மெதுவாகவும் மாறி மாறிச்சுற்றுவதாகவும், சில மனிதர்களுக்கு இந்தப்பயிர் வட்டங்களுக்குள் நுழையும்போது தலைச்சுற்றல் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றுவதாகவும், சில மனிதர்களுக்கு இந்தப்பயிர் வட்டத்துக்குள் நுழைந்ததும் தங்கள் உடம்பிலிருந்த நோய்கள் சரியானதாகவும் வித விதமான மர்மக்கதைகள் நமக்கு மயக்கத்தையே வர வைக்கின்றன.

எனினும் வெறும் காகிதத்திலேயே வரையச் சிரமப்படும் பல டிசைன்கள், பயிர்களில் சேதமில்லாமல் உருவாகியிருப்பது மர்மமான ஆச்சர்யம்தான்.உலகின் தீரா மர்மங்கள் - எகிப்தும் பிரமிடுகளும் !

உலகின் தீரா மர்மங்கள் - எகிப்தும் பிரமிடுகளும்


எகிப்தின் பிரமிடுகளைப்பற்றி நம்மில் சிலபேர் முன்னரும் பலபேர் மம்மி பார்ட்-1 மற்றும் பார்ட்-2 திரைப்படங்கள் பார்த்த பின்னரும் அறிந்திருப்போம். பிரமிடுகள் என்றாலே இன்றளவும் ஒரு மலைப்பும் ஆச்சர்யமும் உண்டாவது நிச்சயமாய் அவற்றின் தனிச்சிறப்பே.

எகிப்து நாட்டில் காணப்படும் இந்தப்பிரமிடுகள் கற்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டங்கள். 2008ம் ஆண்டு வரையிலும் கிட்டத்தட்ட 138 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

பிரமிடுகளுக்குப் பின்னாலான மர்மங்கள் கணக்கிலடங்காதவை. பிரமிடுகள் என்றாலே சட்டென நம் நினைவில் நிழலாடும் உருவம் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான கிரேட் பிரமிடுதான். கிங் குஃபு வின் பிரமிடு என்றும் இது அழைக்கப்படுகிறது.

இதுவரை கண்டறியப்பட்ட பிரமிடுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவிலானது. இதன் உயரம் 146 மீட்டர் (கிட்டத்தட்ட 500அடி). கிட்டத்தட்ட 4600 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் முதன் முதலில் கட்டப்பட்டது கிரேட் பிரமிடு அல்ல.  கிங் குஃபு வின் தந்தை கிங் ஸ்நெஃப்ரு வினால் கட்டப்பட்ட ஸ்டெப் பிரமிடுதான் முதன் முதலில் கட்டப்பட்ட பிரமிடாகும்.

கிரேட் பிரமிடு 2.3 மில்லியன் எண்ணிக்கையிலான கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த எடை 5.9 மில்லியன் டன்கள்.

பிரமிடு போலவே இன்னுமொரு தீராத மர்மம் அதன் முன்னால் இருக்கும் Sphinx சிற்பம். மிகப்பிரமாண்டமான அளவில் கட்டப்பட்டிருக்கும் இந்த சிற்பம் கிரேட் பிரமிடை பாதுகாக்கத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்ற வாதங்களையும் தாண்டி காலச்சிதைவுகளுடன் அமர்ந்திருக்கிறது.

ஒரு சராசரி பிரமிடின் எடையென்று எடுத்துக்கொண்டால் அது 54 இலட்சம் டன்னாகும். பிரமிடுகள் கட்ட உபயோகித்திருக்கும் ஒரு கல்லின் சராசரி எடை இரண்டரை டன்னாகும். மிஸிரினஸ் பிரமிடில் உபயோகித்திருக்கும் ஒரேயொரு கல்லின் எடை மட்டும் 285 டன் என்பதும், சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இவ்வளவு எடையுள்ள கல்லை எப்படி கையாண்டிருப்பார்கள் என்பதும் ஆராயமுடியாத மர்மமாகவே நீடிக்கிறது. சில ஆராய்ச்சியாளர்கள் கிரேட் பிரமிடு நாலு இலட்சம் மனிதர்களைக்கொண்டு சுமார் 20 ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். (சிலர் பிரமிடுகளை கட்டியது மனித சக்தியே அல்ல… நிச்சயமாய் ஏதோவொரு சூப்பர் பவரோ… இல்லை… வேற்றுக்கிரக வாசிகளோதான் கட்டியிருக்கவேண்டும் என்றும் வாதிக்கின்றனர். ஏனென்றால் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட மனிதர்களால் கிரேட் பிரமிடு போன்ற ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லாதபோது 5000 வருடங்களுக்கு முன் இது எப்படி மனித சக்தியால் கட்டப்பட்டிருக்கும் என்ற கேள்வியும் வாதத்திற்கு வலு சேர்ப்பதாய்த்தான் இருக்கிறது)

பிரமிடுகள் கட்டப்பட்ட கற்களின் அளவை இந்தப்படத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்…

பிரமிடுகள் கட்டப்பட்ட விதமும் கட்டப்பட்டதற்கான காரணங்களும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளுடன் தொடர்ந்து கொண்டேயிருக்கும் மர்மங்கள். இறந்து போன மன்னர், மகாராணி ஆகியோரின் சடலங்கள் பதப்படுத்தப்பட்டு அவர்கள் உபயோகிக்கும் பொருட்களுடன் பிரமிடுக்குள் அமைக்கப்பட்டிருப்பது இறப்பிற்கு பின்னாலான வாழ்க்கை குறித்த மர்மமாகவே ஆராயப்படுகிறது.

எகிப்தின் மர்மங்கள் வெறும் பிரமிடுகளுடன் முடிந்து விடுவதல்ல. மம்மிகள் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உடல்கள், பிரமிடுக்குள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே ஃபிளையிங் மெஷின் மற்றும் பல்பு போல செதுக்கப்பட்டிருக்கும் உருவங்கள், மனித உடலும் விலங்கு தலையுமான உருவங்கள் என நீளும் விஷயங்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் தீர்க்க முடியாத எகிப்தின் மர்மங்களே!!!

கற்கள் தானாக நகரும் அதிசயம் : மண்டையை பிய்த்துக்கொள்ளும் விஞ்ஞானிகள்

கற்கள் தானாக நகரும் அதிசயம் : மண்டையை பிய்த்துக்கொள்ளும் விஞ்ஞானிகள் 


அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும் ‘Death Valley National Park’ என பெயரிடப்பட்டுள்ள தேசிய பூங்கா ஏறத்தாள 1000 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை 

பிறப்பிடமாகக் கொண்ட சொஸோன் என்று அறியப்பட்ட ‘டிம்பிஸா’ எனப்படும் ஒரு பழங்குடியினர் வாழ்ந்த பிரதேசமாகும். டிம்பிஸா பழங்குடியினரினால் டும்பிஸா என பெயரிடப்பட்டிருந்த இப்பள்ளத்தாக்கிற்கு ‘கலிபோர்னியா தங்க நெருக்கடி’ காலப்பகுதியில் அதாவது 1849ஆம் ஆண்டளவில் ‘Death Valley’ எனும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில் ஆச்சரியத்தக்க வகையில் என்னதான் இருக்கிறது? நம்ப மறுக்கும் அளவிற்கு என்னவென யோசிக்கத் தோன்றுகிறாதா? அவ்வாறு இந்த மரணப் பள்ளத்தாக்கில் இதுதான் நடைபெறுகிறது என ஆய்வாளர்களால் கூட அறிய முடியாத அளவிற்கு மர்மங்கள் அடங்கியிருப்பதே நிஜம். குறித்த மரணப் பள்ளத்தாக்கு பாலைவனத்திற்கும் மலைகளுக்கும் இடையில் காணப்படுகிறது. சாதாரணமாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஆள் நடமாட்டமோ பூச்சி புழுவோ தென்பட வாய்ப்பில்லாத அளவிற்கு பாலைவானத்தினைப் போன்று காட்சி தருகின்றது.

ஆனாலும் கற்களின் நடமாட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை என்கின்றனர் புவியியல் ஆராச்சியாளர்கள். இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக இடம்பெயர்ந்து செல்கின்றன. 1948இலேயே இத்தகவல் வெளியாகியதும் ஏன்? எப்படி? என்ற எண்ணிலடங்கா கேள்விகளுடன் ஆராய்ச்சியாளர்கள் படையெடுக்க அங்கு ஆரம்பித்தனர். 1972 – 80ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாராய்ச்சிகள் தீவிரம் அடைந்தது. இருப்பினும் கல் தனது நகர்வைத் தொடர்ந்ததே தவிர ஆராய்ச்சிகளுக்கான விடைகள் நகர்ந்தபாடில்லையாம். நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இங்குள்ள கற்கள் மூன்று வருடங்களில் முழுப் பிரதேசத்தையும் சுற்றி வருகிறது. இதனை நன்கு உணர முடிகிறது. ஏனெனில் அக்கற்கள் பணிக்கும் பாதையை கல்லின் சுவடுகளினூடாக தெளிவாகின்றது. இந்த மரணப் பள்ளத்தாக்கின் அருகே மலைத் தொடர் ஒன்று உள்ளது.

இம் மலையிலிருந்து உடைந்து விழும் கற்களே இந்த மரணப் பள்ளத்தாக்கு முழுவதிலும் நடமாடுகிறது. இக் கற்கள் சுமார் 10 ஆயிரம் அடி நகர்கின்றது. சில சமயம் ஒரிரு அடிகள் வரை மட்டுமே நகரும். வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. பாரம் குறைந்த மிகச் சிறிய கல் ஆண்டொன்றுக்கு இரண்டரை அங்குலம் நகரும் அதே சமயம் 36 கிலோ கிராம் நிறையுள்ள பெரிய கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் நிறைக்கும் அவை நகர்வதற்குமான தொடர்புகள் எதுவும் இல்லை என்பதையே இவை எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் என்ன? கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களி மண் தட்டா காரணம்? என குழப்பம் இன்னும் தீரவில்லை. ஒரு வேளை காற்றினால் என்றால்? அதுவும் இல்லையாம் ஏனெனில் அங்கு கடும் காற்று வீசுவதில்லை. எனவே அதற்கும் சாத்தியமில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியினாலேயே கற்கள் இவ்வாறு நகர்கிறது என மெஸசெட்ஸ் பகுதி ஹெம்ஷயர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்க அங்கு அமானுஷ்ய சக்தி, ஆவி, பேய் என மரணப் பள்ளத்தாக்கு என்ற பெயருக்கு ஏற்றவாறு புரளிகளுக்கு மட்டும் குறைவில்லையாம். ஆனால் அங்கு சுற்றுலா சென்றவர்களோ சுற்றுலாவுக்கு சிறந்த இடம் என மெச்சிக்கொள்கிறார்கள். இருந்தாலும் மரணப் பள்ளத்தாக்கிலுள்ள மர்மம் என்ன என்ற கேள்வியுடன் ஆராய்ச்சிகள் நகர்ந்துகொண்டேதான் இருக்கிறது கூடவே கற்களும் தான்.

யாழ்ப்பாணத்து தமிழில் பேசும் ஒரு ஜெர்மானியப் பெண்

வெளிநாடுகளில் வாழும் தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைக்கு தமிழ் தெரியாது என்று பெருமையாக சொல்லும் இந்த காலத்தில் இப்படி ஒரு பெண் சொல்லும் உண்மை கருத்துக்களைக் கேளுங்கள். 


Monday, March 17, 2014

கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!

கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்! 


ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.


1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.

2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.

3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.

4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.

5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.

6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.

7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.

8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.

9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.

10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.

11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.

12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.

13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.

14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.

15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.

16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.

17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.

18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.

19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.

20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.

21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.

22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.

23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.

24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.

25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.

26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.

27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.

28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.


தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.

பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.

பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.

சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

அவீசி: பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.


மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற தண்டனைகள்:

1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.

2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.

3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.

4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.

5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.

6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பான்.

7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.

8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு, வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும். எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை நரகில் நிச்சயம் என்று அறிந்து புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.

தேடு பொறி (Search Engine) பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டியவை

தேடு பொறி (Search Engine) பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டியவை 


நம் கணினிக்குள் மால்வேர் புரோகிராம்கள் நுழைந்து நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்புவது ஒரு வகை திருட்டு. ஆனால் சர்ச் இஞ்சின்களில் நாம் தகவல்களைத் தேடுகையில் பல இஞ்சின்கள் நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடும் வாய்ப்பு உள்ளதே” இந்தக் கோணத்தில் பிரச்சினையை அணுகுகையில் ஏன் இது நடக்கக் கூடாது என்ற சந்தேகம் நமக்கு எழும்புகிறது. அதே நேரத்தில் சர்ச் இஞ்சின்கள் நம் கணினியில் உள்ள பெர்சனல் தகவல்களை நிச்சயம் திருடாது என்ற நம்பிக்கையும் கிடைக்கிறது. இருப்பினும் நாம் தகவல்களைத் தேடுகையில் பின்னணியில் என்ன நடை பெறுகிறது என்று யாருக்குத் தெரியும். எனவே ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் நாம் ஓரளவிற்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இயங்கலாமே. அத்தகைய நடவடிக்கைகள் குறித்து இங்கு காணலாம்.


முதலிலிருந்து இங்கு பார்ப்போம். ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு சர்ச் இஞ்சினைப் பயன்படுத்துகையில் (யாஹூ, கூகுள் போன்றவை) நீங்கள் தேடுதலுக்குப் பயன்படுத்தும் அனைத்து சொற்களையும் அவை டேட்டாவாக ஸ்டோர் செய்கின்றன. அத்துடன் நாம் செல்லும் அனைத்து தளங்களையும் தகவல்களாகப் பதிவு செய்து கொள்கின்றன. நாம் எந்த நாளில் எந்த நேரத்தில் இவற்றைத் தேடுகிறோம் என்ற தகவல்களையும் எடுத்துக் கொள்கின்றன. ஏன், நம் ஐ.பி. முகவரியைக் கூட இவை பதிந்து வைத்துக் கொள்கின்றன என்பதே உண்மை. இவற்றிலிருந்தே இந்த சர்ச் இஞ்சின்கள் நாம் எத்தகைய மனப்பாங்கு உள்ளவர்கள், இணையத்தை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம், நம் விருப்பங்கள், வெறுப்புகள் ஆகியவற்றைக் கணக்கிட்டுக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இது நம் பெர்சனல் வாழ்க்கையில் ஒருவர் தலையிடுவதைப் போல்தான். ஆனால் வேறு வழியில்லையே என்று நாம் அலுத்துக் கொள்ள வேண்டியதுள்ளது. இருப்பினும் இதிலிருந்து தப்பிக்கும் வழிகள் சிலவற்றை இங்கு காணலாம்.

1. சர்ச் இஞ்சினில் லாக் இன்,கூடுதல் வசதிகள் வேண்டாம்:

எந்த சர்ச் இஞ்சினில் நுழைந்தாலும் அதில் லாக் இன் செய்திட வேண்டாம். அவ்வாறு உங்கள் அடையாளத்தைக் கொண்டு உள்ளே நுழைந்தால் உடனே உங்களைப் பற்றிய குறிப்புகள் அங்கே செல்கின்றன. இதனை எப்படித் தவிர்க்கலாம்? சர்ச் இஞ்சின் தரும் கூடுதல் வசதிகள் எதனையும் பெறாதீர்கள். எடுத்துக்காட்டாக நீங்கள் கூகுள் சர்ச் இஞ்சினை வேறு எந்த தொடர்பும் இன்றிப் பயன்படுத்தினால் நம்மைப் பற்றிய தகவல் எதுவும் செல்லாது. ஆனால் அதன் கூகுள் டாக், ஜிமெயில், கூகுள் குரூப் போன்றவற்றைப் பயன்படுத்தினால் நம்மைப் பற்றிய தகவல்களை நாம் அதனிடம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். எனவே சர்ச் இஞ்சினில் தேடும் முன் இத்தகைய வசதி தரும் அனைத்து புரோகிராம்களிலிருந்தும் லாக் அவுட் செய்து விடுபட்டு வெளியே வரவும். இதனை அனைத்து சர்ச் இஞ்சின்களிலும் மேற்கொள்ள வேண்டும்.

2. கூகுளைவிட்டு விலகிச் செல்லுங்கள்:

நம்மில் பலர் கூகுள் சர்ச் இஞ்சினைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் ஆபத்து உள்ளது என்று பலருக்குத் தெரியாது. கூகுள் சற்று வித்தியாசமாகத்தான் தன் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. நம் தேடுதல் வேலையின் போது குக்கிகளைப் பயன்படுத்தி நம்மை அறிந்து கொள்கிறது. குக்கிகளை அழித்துவிட்டால் இந்த பிரச்சினை சரியாகிவிடும் என்று எண்ணுகிறோம். அனைத்து குக்கிகளையும் அழிப்பது நமக்கு சில வசதிகள் கிடைக்காமல் செய்துவிடும். எனவே கூகுள் ஏற்படுத்தும் குக்கிகளை மட்டும் நீக்கிவிடலாம் அல்லது தடுத்துவிடலாம். இதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options செல்லவும். இதில் Privacy என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Sites என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து Address of the Website என்ற கட்டத்தில் கூகுள் தளத்தின் முகவரியினை (www.google.com) டைப் செய்திடவும். டைப் செய்து முடித்தவுடன் Block என்ற பட்டனில் கிளிக் செய்து முடிக்கவும்.

பயர்பாக்ஸ் பிரவுசரில் Tools தேர்ந்தெடுத்து Options செல்லவும். இங்கும் Privacy டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் Exceptions என்பதில் கிளிக் செய்து அதில் கூகுள் தளத்தின் முகவரியினை டைப் செய்திடவும். முடித்தவுடன் Block என்பதில் கிளிக் செய்து முடிக்கவும்.

மேலே கூறிய செட்டிங்ஸ் முடித்துவிட் டால் கூகுள் தளத்தால் உங்கள் கணினியில்  குக்கிகளைப் பதிய முடியாது. இதனால் உங்களைப் பற்றிய தகவல்களைச் சேர்க்க முடியாது. 

3. உங்கள் ஐ.பி. முகவரியை மாற்றவும்:

சர்ச் இஞ்சின்கள் உங்களைப் பற்றிய தகவல் களைப் பெரும்பாலும் உங்கள் ஐ.பி. முகவரியினைக் கொண்டே பெறுகின்றன. எனவே உங்கள் ஐ.பி. முகவரியை அடிக்கடி மாற்றுங்கள். நீங்கள் கேபிள் அல்லது டி. எஸ்.எல். மோடம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் ஐ.பி. முகவரியை மாற்றுவது மிகவும் எளிது. உங்கள் மோடத்தினை சற்று நேரம் ஆப் செய்திடவும். சில நிமிடங் கள் கழித்து மீண்டும் ஆன் செய்து பயன்படுத்தவும். இதனால் உங்கள் பழைய ஐ.பி. முகவரி முற்றிலுமாக நீக்கப்பட்டு புதிய ஐ.பி. முகவரி உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் டயல் அப் வகை கனெக்ஷன் வைத்திருந் தால் உங்களுக்கு இன்டர்நெட் வசதி வழங் கும் நிறுவனத்திடம் உங்கள் ஐ.பி. முகவரி அடிக்கடி மாற்றப்பட்டு வழங்கப்படுவதனை உறுதி செய்து கொள்ளவும். இல்லை என்றால் மாற்றிப் பெறும் வழியை அவர்களிடமே கேட்டுப் பெறவும். 

4. தேடுதலில் பெர்சனல் தகவல்கள் வேண்டாமே:

தேடுதலில் உங்கள் பெயர், முகவரி,ஊர் போன்ற தகவல்கள் இருக்க வேண்டாம். சிலர் வேடிக்கைக்காக தங்களின் பெயர்கள், இமெயில் முகவரிகள், முகவரி, ஊர் பெயர், கிரெடிட் கார்டு எண் போன்றவற்றை இணைத்து தேடுவார்கள். இது வேடிக்கைக்காக என்றாலும் இதன் மூலம் நீங்கள் உங்கள் பெர்சனல் தகவல்களை ஊர் அறிய அனுப்புகிறீர்கள் என்பது உறுதி. உங்கள் அடையாளங்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகளை நீங்களே வழங்குகிறீர்கள் என்பதுதான் இங்கு உறுதியாகிறது. உங்களைப் பற்றிய தகவல்கள் தவறானவர்களின் கைகளில் சிக்க வாய்ப்புகள் ஏற்படுகிறது. 

5. பிற கணினிகளில் பெர்சனல் தேடுதல்கள்:

உங்களைப் பற்றிய தகவல்களுடன் நீங்கள் கட்டாயமாகத் தேடுதலை மேற்கொள்ள வேண்டும் என்றால் உங்கள் வீடுகளில் அல்லது அலுவலகத்தில் உள்ள கணினிகளில் இந்த வகைத் தேடுதல்களை மேற்கொள்ள வேண்டாம். இதனால் பெரிய அளவில் பாதுகாப்பு என்ன கிடைக்கப் போகிறது என்று எண்ணலாம். உங்கள் வீடு அல்லது அலுவலகக் கணினியில் நீங்கள் தேடுதலை நடத்தியகையோடு வேறு புரோகிராம்களிலும் லாக் இன் செய்திடலாம். இதனால் தகவல்கள் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம். ஆனால் நீங்கள் இதுவரை பயன்படுத்தாத பிற இடத்தில் உள்ள கணினி என்றால் வேறு புரோகிராம்களில் லான் இன் செய்வதனை நீங்கள் மேற்கொள்ளமாட்டீர்கள். 6. உங்கள் ஐ.எஸ்.பி. தரும் சர்ச் இஞ்சின் வேண்டாம்:

இறுதியாக ஒரு ஆலோசனை. உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனம் ஏதேனும் சர்ச் இஞ்சின் வசதியைத் தந்தால் அதனை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏற்கனவே உங்கள் ஐ.பி. முகவரி இருப்பதால் உங்களைப் பற்றிய அடிப்படை பெர்சனல் தகவல்களை அவர்கள் எளிதாகப் பெறலாம். அவர்கள் தரும் சர்ச் இஞ்சினைப் பயன்படுத்துவதன் மூலம் மேலும் சில கூடுதல் தகவல்களை நீங்கள் அவர்களுக்கு வழங்குகிறீர்கள். இதனைத் தவிர்க்கலாமே. உங்களுக்கு சர்வீஸ் வழங்கும் நிறுவனத்தை நம்பாமால் என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். இருப்பினும் உங்கள் பாதுகாப்பு முக்கியம் அல்லவா. மேலே சொன்ன அனைத்தையும் நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. படித்து இவற்றை மேற்கொண்டால் பயன் இருக்கும், பாதுகாப்பு கிடைக்கும் என உணர்ந்தால் மேற்கொள்ளுங்கள்.

உலகைமாற்றக்கூடிய வழிகள் சில!

உலகைமாற்றக்கூடிய வழிகள் சில! 


1. அழுகின்றவர்களுக்கு தோள் கொடுங்கள்.

2. உங்கள் பழைய நல்ல துணிகளை சுத்தம் செய்து இயலாதவர்களுக்கு தானமளியுங்கள்.

3. இரத்தம் தானமளியுங்கள்

4. வாழ்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள்.

5. தினமும் துணிச்சலான ஒரு செயலை செய்யுங்கள்.


6. அனைவரிடமும் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் சரி சமமாக பழகுங்கள்.

7. உங்கள் சுற்றத்தார்களை உற்சாகப்படுத்துங்கள், அவர்களை தட்டிக் கொடுங்கள்.

8. யாரையும் பார்க்கும் பொழுது கண்களால் சிறிது புன்னகை பூத்திடுங்கள்.

9. உங்கள் வாழ்க்கை அகராதியில் இருந்து பிடிக்காது, முடியாது, என்ற வார்த்தையை அழித்து விடுங்கள்.

10. உங்கள் திறமைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

11. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துரோகம்
செய்தவர்களை மனப்பூர்வமாக மன்னியுங்கள். மேலும்
அவர்களுக்காக பிராதித்துக்கொள்ளுங்கள்.

12. வயதானவர்களுக்கு, இயலாதவர்களுக்கு உங்கள்
இருக்கையை விட்டுக்கொடுங்கள்.

13. நல்ல செய்திகளை உலகிற்குஉரக்க சொல்லூங்கள்.

14. நீண்ட நாளைய நண்பனை கண்டவுடன் அவர்களை
தளுவிக்கொள்ளுங்கள், அவர்கள் முதுகில் தட்டிக் கொடுங்கள்.

15. உங்களை இதயப்பூர்வமாக, ஆத்மப்பூர்வமாக ஆழமாக நம்புங்கள், பின்னர் உலகம் உங்களை நிச்சயம்
கண்டுக்கொள்ளும் மேலான அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதை மறக்காதீர்கள்.

16. கோபம், பொறாமை கொள்ளாதீர்கள்.

17. தொல்வியுற்றவர்களுக்கு ஆறுதலாய் இருங்கள்.

18. நூலகங்களுக்கு உங்களால் முடிந்த புத்தகங்களை பரிசளியுங்கள், இயலாதவர்கள் அதனால் பயனடைவார்கள்.

19. மரங்கள், பூச்செடிகளை நடுங்கள்.

20. மக்களையும் அவர்களின் போக்கையும் விரும்புங்கள், அவர்கள் என்னதான் ஊமையாய் இருந்தாலும், ஒன்றுப்படாமல் இருந்தாலும் சரி காலம் அதற்கான சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை மறக்காதீர்கள்.

21. ஜாதி, மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் பழகிடுங்கள்,
அவ்வாறு உங்கள் சுற்றத்தார் இருப்பின் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறார்கள் என்றெண்ணி விலகிவிடுங்கள்.

22. தெருவில் அனாதையாய் திரியும் குட்டி நாய்களுள் ஒன்றினை தேர்ந்தெடுத்து அதனை வளர்த்திடுங்கள் (இருக்கும் காலம் வரை உங்களுக்கு நன்றியுடன் இருக்கும்).

23. நீங்கள் இவ்வுலகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அவ்வாறே அதனை காணுங்கள், உங்களால் மற்றவர்களும் மாறுவார்கள் உலகமும் தன்னை நிச்சயம் மாற்றிக்கொள்ளும் அல்லது மாற்றத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கும்.

24. இதுபோன்ற நல்ல விடையங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்