புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Saturday, January 11, 2014

வேகமாக சென்ற பறக்கும் தட்டு: லண்டனில் பெரும் பரபரப்பு

வேகமாக சென்ற பறக்கும் தட்டு: லண்டனில் பெரும் பரபரப்பு


லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்திற்கு மேற்கே பெர்க்‌ஷைர் பகுதிக்கு அண்மிய பகுதியில் 34 ஆயிரம் அடி உயரத்தில் ஏ-320 ஏர்பஸ் பயணிகள் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது.

அப்போது விமானத்தின் மேலே இடது புறமாக சில அடி தூரங்களில் ரக்பி பந்து வடிவில் ஒரு பறக்கும் தட்டு கடந்த சென்றுள்ளது. பின்னர் அது மின்னல் வேகத்தில் பைலட்டை நோக்கியும் வந்து சென்றுள்ளது.


உடனே இது குறித்து லண்டன் விமானக்கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து பரபரப்படைந்த லண்டன் விமான நிர்வாகம் அதுகுறித்து ஆராய்ந்து வருகிறது.

எனினும் எந்த நவீன கண்காணிப்பு ரேடார் கருவிகளிலும் அந்த மர்ம பொருள் பற்றிய பதிவு தெரியவில்லை என்றும் டெலிகிராப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

சவுதியில் விமானத்தோடு பறந்த உடல் உறுப்புகள்

சவுதியில் விமானத்தோடு பறந்த உடல் உறுப்புகள்


சவூதி அரேபியாவில் பறந்த விமானத்திலிருந்து மனித உடல் உறுப்புகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எல்லைத் தாண்டிச் செல்லும் பலர் கிடைக்கும் விமானத்தில் ஏறி விரைவது சவூதி விமான நிலையங்களில் வழக்கமாக உள்ளது.


இந்நிலையில் ஜெட்டா விமானம் பறக்கும்போது மனிதரின் உடல் உறுப்புகள் கீழே விழந்துள்ளன.

இதுகுறித்து பொலிஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் பின் நசீர் கூறுகையில், அதிகாலை 2.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முஷ்ரபா பகுதியில் மனித உடல் உறுப்புகள் விமானத்திலிருந்து விழுந்ததாக அந்தத் தகவல் வந்தது.

இதையடுத்து நாங்கள் அங்கு விரைந்து சென்று பார்த்த போது விமானத்தின் லேன்டிங் கியர் பகுதியிலிருந்து உடல் உறுப்புகள் விழுந்ததாக தெரியவந்துள்ளது என்றும் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.

சீனாவில் ஆறு டன் யானை தந்தங்கள் அழிப்பு

சீனாவில் ஆறு டன் யானை தந்தங்கள் அழிப்பு


வெள்ளை தங்கம் என்றழைக்கப்படும் யானை தந்தங்கள் கடத்தலில் உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா விளங்குகிறது.

கடந்தாண்டு மட்டும் தந்தங்களுக்காக 35 ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டுள்ளன. ஒரு கிலோ கிராம் யானை தந்தம் கள்ள சந்தையில் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சட்டவிரோதமாக வாங்கும் இந்த தந்தங்களை, மக்கள் தாங்கள் விரும்பும் பொருட்களுக்கு மாற்றி வீட்டில் வைத்து அழகு பார்க்கின்றனர். இவ்வாறு யானைகள் கொல்லப்படுவது குறித்து கவலையடைந்த சீனா அரசு, அதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


இதில் கைப்பற்றப்பட்ட 6 ஆயிரம் கிலோ யானை தந்தங்களை பொது இடங்களில் வைத்து நேற்று சீனா அழித்தது. அழிக்கப்பட்ட இந்த தந்தங்கள் சீனாவில் பிடிபட்டுள்ள யானை தந்தங்களின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது.

மற்ற நாடுகள் இதுபோன்று யானை தந்தங்களை அழித்ததையடுத்து சீனாவும் பொது இடத்தில் வைத்து அழித்துள்ளது. இருந்தும், எவ்வளவு டன் தந்த குவியல்கள் அங்கு இருக்கிறது என்று தகவல் வெளியிடப்படவில்லை.

மூன்று வயது சிறுமியின் கடைசி அன்பளிப்பு

மூன்று வயது சிறுமியின் கடைசி அன்பளிப்பு


கனடாவில் கார் விபத்தில் பலியான சிறுமியின் உடல் உறுப்புகளை, அவளது தந்தை தானமாக வழங்கியுள்ளார்.

கனடாவின் வின்னிபெக்கை சேர்ந்த லாசும், அவரது குடும்பத்தினரும் விடுமுறைக்காக கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி மினெபோலிஸ் மியூசியத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.


லா வேறொரு வண்டியில் செல்ல, இவரது மனைவியும், மகளும் டிரக் வண்டியில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எல்லையை கடந்த சிறிது நேரத்தில், அவர்கள் சென்ற டிரக் வண்டி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து லாவுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்து வந்தவர் மகள் மரணமடைந்தது தெரிந்து அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமது குடும்பத்திற்கு ஏற்பட்டது போன்று மற்ற எந்த குடும்பத்திற்கும் ஏற்படக்கூடாது, இதையே எனது மகளும் விரும்புவாள்.

அன்பும், அக்கறையும் கொண்ட அருமையான குழந்தை.

அவள் தன்னால் முடிந்த அளவு உடல் உறுப்புகளை தானமாக அளித்து விட்டு சென்றுள்ளாள் என மிகுந்த சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் உலகத்திற்கு அவளது கடைசி அன்பளிப்பு அவளது ஆரோக்கியமான உடலுறுப்புகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பணம் ஏன் சும்மா இருக்கனும்? ரூ.17 லட்சத்தை கொளுத்திய சகோதரிகள்

பாகிஸ்தான் நாட்டில் ரூ.17 லட்சத்தை சகோதரிகள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் பிலால் நகரைச் சேர்ந்தவர்கள் நஹீத்(40), ரூபினா(35). சகோதரிகளான இவர்கள் 3 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தேசிய வங்கிக்கு சென்று ரூ.17 லட்சத்தை எடுத்துள்ளனர்.

பின்னர் அவர்கள் பணத்தைப் போட்டு தீவைத்து எரித்துள்ளனர், இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுப்பதற்குள் முழுப் பணமும் எரிந்து போய் விட்டது.

மேலும், அந்த சகோதரிகளில் மூத்தவர் கையில் இருந்த பிஸ்டலை எடுத்து அக்கம் பக்கத்தினரை மிரட்டவும் செய்ததால் அவர்கள் அருகில் போக அஞ்சினர். பணத்தைக் காப்பாற்ற வந்தவர்களைப் பார்த்து, இது எங்கள் பணம். இதை என்ன வேண்டுமானாலும் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. யாரும் அருகில் வரக் கூடாது, வந்தால் சுட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளார்.

இந்த தகவலானது பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில், இந்த சகோதரிகளின் தந்தை பெயர் ராஜா முகம்மது இக்பால். இவர் சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.


இவரது சொத்தை விற்றுத்தான் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ. 28 லட்சம் பணத்தைப் சகோதரிகள் பெற்றனர் . வங்கியில் போட்ட அந்த பணத்தில் இருந்துதான் ரூ. 17 லட்சத்தை எடுத்து தீவைத்து எரித்துள்ளனர்.

இரு சகோதரிகளும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர்களுக்கு இரு தம்பிகளும் உள்ளனர், ஆனால் அவர்களுடன் இவர்கள் சேர்ந்து வசிக்கவில்லை. தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர் மேலும் இவர்கள் இருவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று இவர்களது வீட்டுக்கு அருகே வசித்து வருபவர்கள் கூறியுள்ளனர்.

Friday, January 10, 2014

நியூசிலாந்தில் திமிங்கலங்கள் சுட்டுக்கொலை

நியூசிலாந்தில் திமிங்கலங்கள் சுட்டுக்கொலை


உலகிலேயே அதிக கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்குமிடமாக நியூசிலாந்து கடற்பகுதிகள் உள்ளன.

இங்கு வருடத்திற்கு 300 டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நியூசிலாந்த்தின் தெற்கு தீவு பேர்வெல் ஸ்பிட் கடற்கரை பகுதியின் தூரத்தில் நேற்று முன் தினம் இரவு 39 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.

நீண்ட துடுப்புகள் கொண்ட இந்த பைலட் திமிங்கலங்கள் கடலுக்குள் மீண்டும் திரும்பி செல்ல முடியாமல் தரையில் தவித்துள்ளன. இதில் 12 திமிங்கலங்கள் நேற்றுகாலை உயிரிழந்து கிடந்ததை கடல் பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்துள்ளனர். மற்ற உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 27 திமிங்கலங்களை கடலுக்குள் கொண்டுவிடும் முயற்சியில் இறங்கினர்.


ஆனால், காலம் கடந்துவிட்ட நிலையில் அந்த திமிங்கலங்களை ஆழ்கடலுக்குள் கொண்டுசென்று அவர்களால் விடமுடியவில்லை. இதையடுத்து துடித்துக்கொண்டிருந்த அந்த 27 திமிங்கலங்களையும் சுட்டுக்கொல்ல தீர்மானித்தனர். இதையடுத்து கருணை அடிப்படையில் அவைகள் சுட்டுக்கொல்லப்பட்டன.

இந்த திமிங்கலங்களை மிகப்பெரிய அலை அடித்துவந்து கரையில் விட்டு சென்றுள்ளது என்று கூறப்படுகிறது.

1998-ம் ஆண்டும் 300 பைலட் திமிங்கலங்களும், 1918-ம் ஆண்டு சுமார் 1000 பைலட் திமிங்கலங்களும் இறந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

ஜனவரி 7 ஆம் தேதி கிறிஸ்துமஸை கொண்டாடும் மக்கள்

ஜனவரி 7 ஆம் தேதி கிறிஸ்துமஸை கொண்டாடும் மக்கள்


உலக முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி அன்று கிறிஸ்துமஸை கொண்டாடுகின்றனர்.

ஆனால் கிரிகோரியன் காலண்டரை பின்பற்றும் பழமைவாத கிறிஸ்தவர்கள், ஜனவரி 7 ஆம் தேதி கிறிஸ்துமஸை கொண்டாடி வருகின்றனர்.

உக்ரைன், ரஷ்யா, ஜார்ஜியா, செர்பியா, ரோமானியா, அல்பேனியா மற்றும் பின்லாந்து நாடுகளில் உள்ள தேவாலயங்களில் ஜனவரி 7 ஆம் தேதி அன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் .என்னை விட அழகா இருக்கியே! பொறாமையில் ஆசிட் ஊற்றிய பெண்

என்னை விட அழகா இருக்கியே! பொறாமையில் ஆசிட் ஊற்றிய பெண்


லண்டனில் சகதோழி ஒருத்தி தன்னை விட அழகாக இருந்த காரணத்தால், பெண் ஒருவர் ஆசிட் ஊற்றிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிழக்கு லண்டனை சேர்ந்த மேரி கோனி(வயது 21) என்ற பெண், தன்னுடன் பணிபுரியும் நயோமி ஓனி(வயது 21) என்ற பெண்ணின் மீது பயங்கர கோபத்தில் இருந்துள்ளார்.

இதற்கு காரணம் நயோமி, தன்னை விட அழகாக இருந்ததே.

இதனையடுத்து சதித்திட்டம் தீட்டி நயோமியின் மீது கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிட்டை ஊற்றியுள்ளார்.


இதுகுறித்து கரேத பட்டர்சேன் என்ற வழக்கறிஞர் கூறுகையில், நயோமி ஒருநாள் நள்ளிரவில் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது அவளுடன் இருக்கும் மேரி கந்தக அமிலம் என்ற ஒருவகை ஆசிட்டை வீசியுள்ளார்.

இதனால் அலறி துடிதுடித்து போன நயோமி, ஒருமாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்போது நயோமியின் அவல நிலையை கண்ட பின், தன் செயலுக்காக மிகவும் வேதனைப்படுவதாக மேரி தரப்பில் கூறப்படுகிறது.

சூட்கேஸ் மூலம் அமெரிக்கா செல்லலாம்! பெண்ணின் பலே ஐடியா

சூட்கேஸ் மூலம் அமெரிக்கா செல்லலாம்! பெண்ணின் பலே ஐடியா


பெட்டியில் மறைந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்ற தாய்லாந்து பெண் கைது செய்யப்பட்டார். 

அமெரிக்காவின் அரிசோனா மாகாண எல்லையில் உள்ள நோகல்ஸ் சோதனைச் சாவடியை கடந்து வரும் வாகனங்களை குடியுரிமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துகொண்டிருந்த போது, அவ்வழியாக நவீன ஹோண்டா ரக கார் படுவேகமாக வந்தது.


அதிலிருந்த கனமான சூட்கேஸ் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்ததால் பொலிசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்பெட்டியில் பல துணிகள் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு மேலும் தீவிர சோதனையில் இறங்கியபோது பெண் ஒருவரின் உடல் இரண்டாக மடிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர்.

பொலிசாரை கண்ட அப்பெண் எழுந்து உட்கார்ந்தார். உரிய ஆவணங்கள் இல்லாமல், அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குற்றத்திற்காக தாய்லாந்து பெண்ணையும், அந்த காரின் உரிமையாளரையும் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பூமிக்கு அருகே சுற்றிவரும் மிக அபாயகரமான விண்பாறை

பூமிக்கு அருகே சுற்றிவரும் மிக அபாயகரமான விண்பாறை


விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

இது, கடந்த மாதம் 29-ம் திகதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளது.


2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்து செல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது.

அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படபிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக இருக்கும் இந்த விண்பாறையின் அளவு, வெளிச்சம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும். சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது என்று விண்பாறை மற்றும் வால் நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எமன் ரூபத்தில் வந்த கொட்டாவி !!!

எமன் ரூபத்தில் வந்த கொட்டாவி !!!


சீனாவில் பலமாக கொட்டாவி விட்ட இளைஞரின் நுரையீரல் கிழிந்து பாதிப்படைந்த பரிதாமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

சீனாவை சேந்தவர் ஓயூ(வயது 26), இவர் சின தினங்களுக்கு முன்பு காலையில் எழுந்த போது பலத்த கொட்டாவி விட்டார்.

இதன் பின்னர் அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது.

எனினும் அதை பொருட்படுத்தாமல், தொடர்ந்து தன் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் ஓயூவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அவரால் சுவாசிக்க முடியாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.


இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில், இவரின் நுரையீரலின் காற்று பை கிழிந்து துளை ஒன்று ஏற்பட்டுள்ளது.

எனவே காற்றுப் பையிலிருந்து வெளியேறும் காற்று, உடலின் மற்ற பாகங்களுக்கு செல்வதால், அவருடைய நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் இயல்புநிலைக்கு திரும்புவதற்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

ஐஸ் கட்டியாக உறைந்து கிடக்கும் நயாகரா

ஐஸ் கட்டியாக உறைந்து கிடக்கும் நயாகரா


வரலாற்றிலேயே இல்லாத அளவு மிக அதிகளவான குளிரில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.


அமெரிக்காவே உலக மக்களின் கண்களில் பெரும் காட்சிப் பொருளாக மாறி மாபெரும் ஐஸ் கட்டி நாடாக மாறிக் கிடக்கிறது.

எங்கு பார்த்தாலும் பனிக் கட்டிகள், ஐஸ் கட்டிகள், கடும் குளிர், பனிக் காற்று.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பயங்கரமான பனிக்காற்றை தாங்க முடியாமல் அமெரிக்கா நடுங்கிக் கிடக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையே இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

கிட்டத்தட்ட முழுமையாக உறைந்து விட்டது, மேலிருந்து பெரும் சத்தத்துடன் விழும் தண்ணீர் தற்போது ஐஸ் கட்டியாக காட்சி தருகிறது.

கீழே பார்த்தால் ஐஸ் மலைகளாக மாறி நிற்கின்றது தண்ணீர் தடாகம்.

நயாகரா உறைந்து போயிருப்பதைக் காண கடும் குளிரையும், உயிர் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் அங்கு வந்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

1912ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இப்படி உறைந்துள்ளதாம்.
அதிசயங்கள் நிறைந்த சாக்கடல் (Dead Sea)

அதிசயங்கள் நிறைந்த சாக்கடல் (Dead Sea)


சாக்கடல் (Dead Sea) என்று ஏன் அழைக்கப்படுகிறது?

சாதாரண கடல் நீரை விடஇங்கு 8.6 மடங்கு உப்புச்செரிவு அதிகமானதால் உயிரினங்களின் குடி நீராகவோ வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை. அதனால் சாக்கடல் எனப்படுகிறது.


பல ஆறுகளில் இருந்து வரும் நீர் இங்கு தேங்கி நிற்கின்றது. ஆனால், இங்கிருந்து வேறு எங்கும் நீர் விரையமாவதில்லை. ஆறுகளின் நீர் இறுதியாக வந்தடையும் இடம் என்பதால் டெட் சீ/ சாக்கடல் எனப்படுகிறது.

சாக்கடல் என்ற பெயரைக் கேட்கும்போது எந்த ஒரு உயிரினமும் இல்லாத கடல் என்றுதானே நாம் நினைப்போம்? அது தவறு. உப்பை உணவாகக் கொள்கின்ற பலவித நுண் உயிரிகள் சாக்கடலில் நல்லபடியாக வாழ்கின்றன.

ஹாலோ பாக்டீரியம், ஹாலோபியம்,ட்யூனாலைலா எனும் நுண் உயிரிகளை உதாரணமாகச் சொல்லலாம். இவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவை உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றவை. இவை, தாவரங்களில் உள்ள குளோரோபிலுக்குச் சமமான ஒரு இயற்கைப் பொருளை தாமாகவே உற்பத்தி செய்து, அதன் உதவியுடன் உணவை உற்பத்தி செய்துகொள்கின்றன. அது மட்டுமன்றி சாக்கடலுக்கு அடியில் நீரூற்றுகள் உள்ளன.

நீரில் மிதக்க வேண்டுமானால் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். அல்லது உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் இல்லையென்றால் ஏதாவது அதிசயங்களை நிகழ்த்த வேண்டும். இவை எதுவும் இல்லாமல் நீரில் மிதப்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். பார்ப்பதற்கு கடல் போல காட்சி அளிக்கும், ஆனால் உண்மையில் கடல் இல்லை… தண்ணீர் தான் ஆனால் குதிப்பவர்கள் நீருக்குள் மூழ்கமாட்டார்கள்.. இதுதான் Dead Sea என்று அழைக்கப்படும் சாக்கடலின் சிறப்பம்சம்.

உலகிலேயே பள்ளமான பகுதி இதுவாகும். கடல் மட்டத்தில் 378 மீட்டர் (1340 அடி) ஆழமானது. இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் எல்லையில் மத்திய தரைக்கடலோடு சேர்ந்திருக்கும் நீர்ப்பரப்புதான் சாக்கடல். உண்மையில் இது ஒரு கடல் கிடையாது, உப்பு நீர் நிறைந்த பெரிய ஏரி. சுமார் 67 கிலோமீட்டர் நீளமும், 18 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த சாக்கடலில் உப்பின் அளவு மிகுதியாக காணப்படுகிறது.

சாதாரண கடல் நீரை விட 8.6 மடங்கு அதிகமாக இருப்பதால் இந்தக் கடலில் நாம் நீச்சல் அடிகாமலேயே மிதக்க முடியும். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சாக்கடலில் மிதந்து கொண்டே புத்தகங்களும், செய்தித்தாள்களும் படிக்கும் காட்சியை அடிக்கடி காணலாம்.

இந்த சாக்கடலில் பொட்டாசியம், மக்னீசியம், புரோமைடுகள் உள்ளிட்ட பொருட்கள் பெருமளவில் கிடைக்கின்றன.இவை ரசாயன மற்றும் ரசாயன உரத் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. எகிப்தில் ஆயிரம் ஆண்டுகளாக மம்மிக்கள் கெட்டுப் போகாமல் இருக்க காரணம் சாக்கடலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகைப் பொருள்கள்தான். சாக்கடல் நீரை இரண்டு முழுங்கு குடிக்க நேர்ந்தால் குரல் வளைப் பகுதி வீக்கம் கண்டுவிடும். அதனால் மூச்சு விட முடியாமல் போகலாம். சாக்கடல் நீர் கண்களில் பட்டால் பார்வை பறி போகின்ற ஆபத்து உண்டு.

சாக்கடல் நீரிலும் சேற்றிலும் கலந்துள்ள மருத்துவகுணங்கள் தோல் நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இச்சேறு சொரியாசிஸ் உட்பட சில தோல் கோளாறுகளைக் குணப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இதற்காகவே ஏராளமான பேர் இங்கு வந்து சாக்கடல் சேற்றை உடலில் பூசிக் கொள்கின்றனர். இதனாலேயே சாக்கடலுக்கு the lowest health spa மற்றும் நேச்சுரல் ஸ்பா (natural spa) என்ற பெயரும் உண்டு. உலகிலேயே மிக தாழ்வான பகுதி என்ற மற்றொரு சிறப்பும் சாக்கடலுக்கு உண்டு.

இத்தனை பெருமை கொண்ட சாக்கடலின் முக்கிய நீர் ஆதாரமான ஜார்டன் நதி நீரின் அளவு தற்போது குறைந்து கொண்டே வருவதால் இந்தக் கடலின் பரப்பு குறைந்து கொண்டு வருகிறது என்பதுதான் கவலையளிக்கும் செய்தி. ஜோர்டானிலும், யார்மோக் ஆறுகளின் மூலமாகவும் மனித பயன்பாட்டிற்காக அதிக அளவில் நீர் எடுத்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேலும் ஜோர்டானும் தங்களுடைய பொட்டாஷ் தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை சாக்கடலில் இருந்து எடுத்துள்ளன.

கடந்த முப்பது வருடங்களில் சாக்கடலின் நீர்மட்டம் ஆண்டிற்கு 0.7 மீட்டர் குறைந்து வருகிறது. நீரின் கன அளவு ஆண்டிற்கு 0.47 கன கிமீ குறைந்து வருகிறது. நீர்ப்பரப்பின் அளவும் ஆண்டிற்கு 4 சதுர கிமீ அளவில் குறைந்து வருகிறது என்று இந்தக்குழுவின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இந்த ஆய்வுகள் ஒரு எச்சரிக்கை மணியாகும். நீர்வளத்தை எச்சரிக்கையுடன் கையாளத் தேவையான திட்டங்களை நமது நாடு நடைமுறைப்படுத்தவேண்டும்.

அமெரிக்கா நடுங்குவதற்கான காரணம் என்ன?

அமெரிக்கா நடுங்குவதற்கான காரணம் என்ன?


அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு பனி மற்றும் குளிர் நடுக்கத்திற்கான காரணம் என்ன என்ற ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் சிகாகோ உட்பட பல நகரங்கள் பனியில் உறைந்து விட்டன. வெப்பநிலை செல்சியஸ் மைனஸ் 51 டிகிரிக்கு கீழ் போய்விட்டது. இதனால் வீட்டை விட்டு யாரும் வெளியே தலை காட்டவே இல்லை. விமான சேவை அடியோடு பாதிக்கப்பட்டது.


பல இடங்களிலும் நிறுவனங்கள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன. குழந்தைகளை கண்டிப்பாக வெளியே வர அனுமதிக்க கூடாது என்று ஆங்காங்கு அறிவுறுத்தப்பட்டனர்.

சிகாகோ போன்ற நகரங்களில் இன்னும் பனி விலகவில்லை. குளிர்காலம் என்பது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு புதிதல்ல. ஆனால், சமீப காலமாக மிக அதிகமாக பனிப்பொழிவு இருப்பது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு இது தொடர்பாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது.

இந்த குழுவின் ஆய்வு அறிக்கையின்படி, வட துருவ பிரதேசங்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் கொண்டதாக உள்ளன. உலக வெப்பமயமாதலின் விளைவு தான் இது.

பல நாடுகளை விட, வட துருவ பிரதேசங்கள் மிக அதிக வெப்பம் உள்ளதாக இருக்கிறது. இதனால் ஏற்படும் குளிர்காற்று, தெற்கு நோக்கி வீச வேண்டும். துருவ பிரதேச பகுதிகளில் இப்படி குளிர்காற்று சுழற்சி என்பது எப்போதும் ஏற்படக்கூடிய ஒன்று தான்.

இதை ‘போலார் வொர்டெக்ஸ்’ என்று கூறுவர். இது வட, தென் துருவ பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உயரே எழுந்து, அங்கேயே சுழன்று கொண்டிருக்கும். கீழே இறங்காது. இதன் சுழற்சி காற்றின் போக்கிற்கு ஏற்ப இருக்கும். ஒரு சில முறை வடக்கு நோக்கி தெற்கில் இருந்து வீசும். அதுபோல, எதிர்திசையில் திரும்பி வீசும். இதனால் எந்த பெரிய விளைவும் ஏற்படாது.

மேலும் இந்த வெப்ப மயமாதலால் ஏற்படும் குளிர்காற்று சுழற்சி, பலமாக சுழன்று, ஒரு கட்டத்தில் பலவீனமடையும். அப்படி பலவீனம் அடையும் போது, மத்திய பகுதிகளில் மிக அதிகமாக குளிர் காற்றும், பனிப்பொழிவையும் ஏற்படுத்தும். இதெல்லாம் வட, தென் துருவ பகுதிகளில் தான் ஏற்படும்.

அதனால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இப்படி குளிர் காற்றும், பனிப்பொழிவும் ஏற்படும் முன், மிகமிக அதிக வேகத்தில், அதாவது ஜெட் வேகத்தில் குளிர் காற்று வீசும். மாறி மாறி , எதிர்திசைக்கும், நேர் திசைக்குமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த குளிர்காற்று திடீரென தரை மட்டத்தையும் தாக்கும் வல்லமை படைத்தவை.

ஆனால், சமீப காலமாக தெற்கு நோக்கி இல்லாமல், கிழக்கு நோக்கி இப்படிப்பட்ட பயங்கர குளிர்காற்று வீசத்தொடங்கியதை பார்க்க முடிந்தது. கடந்த சில ஆண்டாகவே, கனடா, அமெரிக்காவின் சில பகுதிகள், பிரிட்டனின் சில பகுதிகள் பெரும் குளிருக்கும், பனிப்பொழிவுக்கும் ஆட்படுவது இதுவே காரணம்.

வட துருவ பிரதேசங்கள் மற்றும் இடைப்பட்ட பிரதேசங்களில் நிலவும் வெப்ப வேறுபாடு தான் இப்படிப்பட்ட மாறான வானிலைக்கு காரணம் என்றும் இனி வரும் ஆண்டுகளில் அமெரிக்கா உட்பட்ட சில நாடுகளில் இந்த காலகட்டங்களில் கடுங்குளிர், பயங்கர பனிப்பொழிவு நீடிக்கும் ஆபத்து உண்டு எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Source: SpotTamil

60 வருடமாக குளிக்காமல் இருந்தால் இப்படிதான் இருப்போம் பாத்துகோங்க !

60 வருடமாக குளிக்காமல் இருந்தால் இப்படிதான் இருப்போம் பாத்துகோங்க !


இந்த மனிதர் தன்னை சுத்தம் செய்து கொண்டது 60 வருடங்களுக்கு முன்பு என்று கூறினால் நீங்கள் நம்பவா போகிறீர்கள் ! ஆனால் அதுதான் உண்மை !

Wednesday, January 8, 2014

வெற்றி நாயகன் புரூஸ் லீ

வெற்றி நாயகன் புரூஸ் லீ


புரூஸ் லீயின் செல்லப் பெயர் ஒரு பெண் பெயர் :

புரூஸ் லீயின் குடும்பத்தினர் அவரை ஒருபோதும் அவரை “புரூஸ்” என்று அழைத்ததில்லை. அவர்கள் அவரின் செல்லப்பெயர்களான ”லிட்டில் ஃபீனிக்ஸ்” (Little Phoenix), ”சாய் ஃபொன்” (Sai Fon) என்ற பெயர்களாலேயே அழைக்க விரும்பினர்.


அவர்களின் முதலாவது மகன் குழந்தைப் பருவத்திலேயே இறந்ததால், தீய சக்திகளுக்கு அவர்களது குடும்பத்து ஆண்குழந்தைகளை பிடிக்கவில்லை என அவரது பெற்றோர் நம்பினர். எனவே, புரூஸ் லீயை பெண் பெயரால் அழைத்தால் அத்தீய சக்திகளை முட்டாளாக்கி தமது மகனை அவற்றிடமிருந்து காப்பாற்ற முடியும் என்று நினைத்து அவரை அவ்வாறு பெண் பெயரால் அழைத்தனர். அவரது ரசிகர்கள் அவரை “லிட்டில் ட்ராகன்” (Little Dragon) என்று அழைத்தனர்.


உண்மையில், “புரூஸ்” என்பது சான் பிரான்சிஸ்கோவில் அவர் பிறந்த ஜாக்சன் தெரு மருத்துவமனை (Jackson Street Hospital) தாதியினால் இடப்பட்ட பெயராகும். தாதி, அமெரிக்க பிறப்பு  சான்றிதழில் ஏதும் குழப்பம் நேராதிருக்க குழந்தைக்கு ஆங்கிலப் பெயரைக் கொடுத்தார். (ஆம், புரூஸ் லீ  பிறப்பால் ஒரு அமெரிக்கன், அவர் வேறெந்த நாட்டு குடியுரிமையையும் கொண்டிருக்கவில்லை).

புரூஸ் லீ ஒருபகுதி ஜேர்மானியர் :

புரூஸ் லீ, சீன – ஜேர்மானிய கலப்பினத்தவராவார். அவரது தாய் வழிப் பாட்டனாரின் பூர்வீகம் ஜேர்மனி.


வெற்றி நாயகன் புரூஸ் லீ : 

புரூஸ் லீ தனது வாழ்க்கையில் ஒரேயொரு முறை மாத்திரமே சண்டையில் தோல்வியடைந்தார். அது அவருக்கு 13 வயதாக இருக்கும் போது. அந்தத் தோல்வியானது அவரை விங் சுன் (Wing Chun) எனப்படும் சீன தற்காப்புக்கலையை இப் மான் (Yip Man) என்பவரிடம் கற்றுக்கொள்ளத் தூண்டியது.


புரூஸ் லீ ஒரு தூய சீனர் இல்லை, ஜேர்மானிய கலப்பினத்தவர் என்பதை அறிந்து கொண்ட சக மாணவர்கள் அவரை தாங்கள் கற்கும் வகுப்பில் பயிற்சியளிக்க அனுமதிக்க மறுத்துவிட்டனர். Yip Man அவரிடமிருந்த திறமையையும் ஆர்வத்தையும் கண்டு அவருக்கு தனியாகப் பயிற்சியளித்தார்.


 மோசமான மாணவன் :

புரூஸ் லீ ஒரு மோசமான மாணவன்கல்வியில் புரூஸ் லீக்கு நாட்டமில்லை. அவ்வாறே கல்விக்கூடங்களும் அவரை விரும்பியதில்லை. புரூஸ் லீ பதின் பருவத்தில் இருக்கும் போது அவரது பெற்றோர் அவரை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து ஹாங்காங்கிற்கு அனுப்ப உத்தேசித்தனர். எப்போதும் தெருச்சண்டைகளில் ஈடுபட்டதே இம்முடிவுக்கு காரணம். ஆரம்பக் கல்வியின் பின்னர், ஹாங்காங்கிலுள்ள ஆங்கில ஆண்கள் பாடசாலையான லா சால்லே கல்லூரியில் ( La Salle College ) தனது கல்வியைத் தொடர்ந்தார். அங்கும் தனது விளையாட்டைத் தொடர்ந்தார் புரூஸ் லீ. இடைஞ்சலான நடத்தைக்காக லா சால்லேவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரது பெற்றோர் அவரை வேறு பள்ளிக்கு மாற்றிய பின்னரும் அவர் தனது வீதிச் சண்டைகளை தொடர்ந்து கொண்டேதான் இருந்தார்.


நடனக் கலைஞர், குத்துச்சண்டை வீரர் :

எவ்வளவுக்கெவ்வளவு தற்காப்புக் கலைகளை கவனமாகப் பயின்றாரோ, அவ்வளவுக்கவ்வளவு நடனத்திலும் அவர் ஆர்வமாக இருந்தார். அவர் தனது 18 ஆவது வயதில் – 1958 இல், ஹாங்காங் சா சா சாம்பியன்ஷிப் (Hong Kong Cha Cha Championship) பட்டத்தை வென்றார். அவர் ஒரு பெரிய குத்துச்சண்டை வீரர் கூட. 1958 இல், குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (Boxing Championship) பட்டத்தை வென்றார் – நாக்அவுட் மூலம்.

தத்துவாசிரியர் : 

வெறும் வீரமும் முரட்டுத்தனமும் மட்டும் கொண்டவரல்ல புரூஸ் லீ. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், தற்காப்புக்கலை நுட்பங்கள், தத்துவக் கொள்கைகளை மையமாக கொண்டு தத்துவம் பயின்றார். அவர் அக்கல்லூரியில் தற்காப்பு கலைகள் கற்பித்தார். பின்னர், கல்லூரியைக் கைவிட்டு, தனது சொந்த தற்காப்பு கலை பள்ளியை ஆரம்பித்தார்.


 தரையில் காலால் உதைத்து, புரூஸ் லீயோடு சவால் விடலாம் :

புரூஸ் லீ மிகவும் பிரபலமான பின்னர், தங்களால் அவரை வெற்றி கொள்ள முடியும் என்று பலர் எண்ணினர். அவர்கள் அவரிடம் சென்று, தரையில் தங்கள் காலால் உதைத்து (சவாலுக்கு அழைத்து), அவரை தாக்க ஆரம்பித்தனர். அவரது பரவிய புகழானது, அவரைவிட தாங்கள் பலசாலிகள் என்பதை நிரூபிக்க பலரை ஈர்த்தது.

உறுதியும் வேகமும்1964 இல், கலிபோர்னியா லாங் பீச் (Long Beach) இல் ஒரு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிக்காக புரூஸ் லீ அழைக்கப்பட்டார். அங்கு அவர், அவரது பிரபலமான “ஒரு இன்ச் பஞ்ச்” (One Inch Punch) ஐ நிகழ்த்தினார். ஒரு அங்குல தூர இடைவெளியில் இருந்து அவர் கொடுக்கும் பாரிய அடியானது, எதிராளியை மறுபுறம் பறக்கச் செய்யும் வலிமையுடையது.

புரூஸ் லீ, “ஒரு இன்ச் பஞ்ச்” ஐ பிரயோகித்த பாப் பேக்கர் (Bob Baker) என்பவர் “நான் புரூஸ்லீயிடம், இந்த வகை பரிசோதனையை மீண்டுமொருமுறை செய்ய வேண்டாமென கேட்டுக்கொண்டேன். அவர் என்னை கடந்த முறை குத்திய போது, வலி தாங்க முடியாமல் வேலைக்குச் செல்லாமல் நான் வீட்டிலிருக்க நேரிட்டது” என்று கூறினார்.

இறந்தும் நடித்த புரூஸ் லீ :

Game of Death திரைப்படம் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக புரூஸ் லீ  மரணத்தை தழுவினார். அப்போது படநிறுவனம் என்ன செய்தது தெரியுமா? அவர்கள் திரைக்கதையை  மாஃபியாவிலிருந்து தப்பிக்க புரூஸ் லீ இறப்பது போல் நடிப்பதாக மாற்றினார்கள். அவரது மரணச்சடங்கின்  உண்மையான காட்சிகளையும் எடுத்து படத்தை தயாரித்தார்கள்.


நன்றி : v4tamil

Tuesday, January 7, 2014

3 அடி அளவுள்ள ஆந்தை போன்ற பறவை !

3 அடி அளவுள்ள ஆந்தை போன்ற பறவை !

பஹாமாஸ் தீவுகளை சேர்ந்து அன்றோஸ் என்னும் சிறிய தீவில் தான் இந்த மாதிரி பறவையை கண்டதாக சுற்றுல்லா பயணிகள் கூறியுள்ளனர் . 

ஆந்தை மாதிரி தோற்றத்தில் மிகவும் பெரியதாக , சுமார் மூன்று அடி வரை இருந்ததாகவும் நிறைய பேர் கூறியுள்ளனர் . பறவை ஆர்வலர்கள் பலர் இதற்கு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளனர் . அதாவது 16 ஆம் நூற்றாண்டு வரை அன்றோஸ் தீவில் சிக்சார்நி என்னும் பறவை இருந்துள்ளதாகவும் , அதன் பின் அங்கு மனிதர்கள் குடி பெயர ஆரம்பித்த உடன் மரங்களை வெட்ட தொடங்கியதால் இவை முற்றிலும் அழிந்து போனது என்று நம்பப்பட்டது !

இந்த வகை பறவைகளால் பறக்க இயலாது . இவை நிலத்தை சார்ந்தே வாழும் . எனவே அந்த தீவை விட்டு செல்ல முடியாமல் போனது. முற்றிலும் அழிந்து போனது என்று நம்ப பட்டாலும் இது நாள் வரை மக்கள் இதை போன்ற பறவையை பார்த்ததாக கூறுவது , இந்த வகை பறவைகள் எப்படியோ இன்னும் இருக்கின்றன என்றே தோன்றுகிறது !


எப்படி தன்னுடைய உயிர் போகும் என்று முன்பே அறிந்த ஆப்ரஹாம் லின்கன் !

எப்படி தன்னுடைய உயிர் போகும் என்று முன்பே அறிந்த ஆப்ரஹாம் லின்கன் ! 


எதிர்காலத்தை முன்பே அறியும்  திறன் உண்மையாக உள்ளதா என்பதை இது வரை எந்த அறிவியல் ஆராய்ச்சியாளரும் சொல்ல முடிய வில்லை ! 

எதிர்காலத்தில் நடக்க போவதை கணிக்க இயலும் என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர் . எதிர்காலத்தில் தாங்கள் இறக்க போகும் தருணத்தை பெரும்பாலானோர் கண்டதாக கூறி உள்ளனர் . இதில் மிகவும் பிரபலமான ஒன்று தான் ஆப்ரஹாம் லின்கனின் மரணம் . 

1865 ஆம் ஆண்டு , ஆப்ரஹாம் லின்கன் துப்பாகியால் சுட்டு கொல்லப்படும் முன்பு அவரின் கனவில்  தான் இறந்து கிடப்பதை கண்டு அந்த கனவை தனது மனைவியிடம் கூறி உள்ளார் . இருவரும் முற்போக்கு சிந்தனையாளர்கள் என்பதால் , இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை . எதோ ஒரு கேட்ட கனவு என்று விட்டு விட்டனர் . இரண்டே வாரங்களில் ஆபிரகாம் லின்கன் சுட்டு கொள்ள பட்டார் !

இந்த மாதிரி கனவுகளை  Precognitive Dreams என்று ஆங்கிலத்தில் கூறுவர் !


தண்ணீருக்குள் கூகிள் எர்த் கண்டு பிடித்த வட்ட வடிவ வினோத குழிகள் !

தண்ணீருக்குள் கூகிள் எர்த் கண்டு பிடித்த வட்ட வடிவ வினோத குழிகள் !


கூகிள் எர்த் தொழிற்நுட்பம் வந்த பின்பு வானில் இருந்து பூமியை பார்ப்பது என்பது சுலபமாக போனது . கூகிள் எர்த் தனது தேவைக்காக செயற்கை கோள்கள் மூலம் படங்கள் எடுத்து சேமித்து வைக்கும் . அது போன்று படங்கள் எடுக்கும் போது சில வித்தியாசமான படங்கள் சிக்குவது உண்டு . அது மாதிரி சிக்கிய படங்கள் தான் இவை . இவற்றை கூகிள் நிறுவனம் Circular Anomaly என்று குறிப்பிடுகிறது. அதாவது பூமியின் வெவ்வேறு இடங்களில் பெரும்பாலும் தண்ணீருக்குள் வட்ட வடிவ குழிகள் தென்படுகிறது . 


இவை பெரும்பாலும் சவுதி அரேபியா , நார்த் கரோலினா மற்றும் ப்ளோரிடா ஊர்களின் கடலோரங்களில் அதிகமாக தென்படுகிறது . இவை தோற்றத்தில் பெரும்பாலும் ஒரே மாதிரி உள்ளன . இவைகளை பழங்கால சமாதிகள் என்கிற அடிப்படையில் ஆராய்ந்து வருகின்றனர் . இவற்றில் பெரும்பாலானவை கி.பி 800 அளவு பழமையானது என்று கண்டு பிடித்துள்ளனர் . இன்னும் சில கிட்டத்தட்ட கி.பி 1௦,௦௦௦ வருட பழமையானது !

மேலும் பலர் பல்வகை கருத்துகளை முன் வைத்துள்ளனர் . எது எப்படியோ , மனிதன் இந்த உலகை பற்றி தெரிந்து கொண்டது என்பது கையளவுதான் ! நமக்கு புலப்படாத , புரியாத , பயம் உண்டாக்கும் பல விசயங்களும் இன்னமும் இந்த பூமியில் உள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை !இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்