புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Saturday, January 4, 2014

வீரசிங்கும் அவரது நண்பரும் - புதிர் கதை

வீர்சிங் ஒருநாள் தனது நன்பரான ஒரு சர்தாரைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தான்.பேச்சு பல விஷயங்களைத் தொட்டுச் சென்றது.

இறுதியில் சர்தார்களைப் பற்றி அடுத்தவர்கள் கேலியும் கிண்டலும் செய்யும் விஷயத்தில் வந்து நின்றது.

சர்தார்களை கேலிப் பொருளாக அடுத்தவர்கள் நினைப்பது வீர்சிங்கிற்குப் பிடிக்கவில்லை. சர்தார்கள் எவருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பதை மற்றவர்களுக்கு நிரூபிக்கவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தான்.

அவனது நண்பரும் அதை ஒத்துக்கொண்டார்.அதற்காக என்ன செய்யலாம் என்று இருவரும் ஆலோசித்தார்கள். இறுதியாக வீர்சிங்கிற்கு ஒரு அருமையான வழி புலப்பட்டது. அதை நண்பரிடம் வீர்சிங் கூறினான்.

நண்பரும், ஆஹா ---அருமையான வழி என்று ஒத்துக்கொண்டு அதை அடுத்த நாள் செய்துவிட வேண்டியதுதான் என்று பேசிக்கொண்டு பிரிந்து சென்றார்கள்.


அடுத்த நாள் பக்கத்தில் இருந்த கடற்கரைக்கு மாலை நேரத்தில் சென்றார்கள்.அபோதுதான் அங்கே மாலைநேரக் கடற்காற்று வாங்குவதற்கு மக்கள் சேர ஆரம்பித்திருந்தார்கள்.
வீர்சிங்கும் அவனது நண்பரும் கடற்கரையோரமாக நின்று கொண்டார்கள்.
வீர்சிங் கடலை நோக்கிக் கையைக் காட்டினான். 
அவனது நண்பர்- உடனே---ஆமாம் வீர்சிங்---ஆஹா என்ன அற்புதமான காட்சி----அருமை ------- அருமை என்று சத்தமாகச் சொல்லிக்கொண்டே அவரும் கடலையே நோக்கியபடி நின்றிருந்தார்.

இவர்களைக் கண்ட மற்றவர்கள் கடலில் என்ன தெரிகிறது என்று பார்க்க ஆரம்பித்தார்கள்.ஆனால் வீர்சிங்கும் அவனது நண்பரும் பின்பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. மேலும் சப்தமாக ---ஆஹா ஆஹா என்று கூறியபடியே கடலையே பார்த்தபடி நின்றார்கள்.

அவர்கள் பின் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூட ஆரம்பித்ததை மக்களின் சலசலப்பில் இருந்தும், பேச்சுக் குரல்களில் இருந்தும் ஊகித்துக்கொண்ட வீர்சிங்கும் அவனது நண்பரும், உள்ளூற நகைத்தபடியே, தாங்கள் சர்தாராக இருந்தும், எப்படி புத்திசாலித்தனமாக அடுத்தவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றோம் என்று தங்களைத் தானே மனதில் புகழ்ந்துகொண்டார்கள்.இரவு பத்து மணி ஆகிவிட்டது. 

சரி இனியும் ஏமாற்றக் கூடாது என்று நினைத்துத் திரும்பி கூடி நின்றிருந்தவர்களைப் பார்த்து , பார்த்தீர்களா? சர்தாரின் புத்திசாலித் தனத்தை என்று அருமையான கேள்வி ஒன்றைக் கேட்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

வீர்சிங்கும் அவனது நண்பரும் பின்பக்கம் திரும்பி அங்கிருந்தவர்களைப் பார்த்ததும், பலத்த அதிர்ச்சிக்கு ஆளானார்கள்!!!!!!!!!

நண்பர்களே -------------- இங்கேதான் புதிர்க் கேள்வி வருகின்றது.

விர்சிங்கும் அவனது நண்பரும் கூடியிருந்தவர்களைப் பார்த்ததும் ஏன் அதிர்ச்சி அடைந்தார்கள்?
அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் கூட்டம் கூடியிருந்ததா?

அல்லது மிகவும் குறைவான ஆட்களே இருந்தார்களா?

அல்லது காவலர்கள் நின்றிருந்தார்களா?

வீர்சிங்கும் அவனது நண்பரும் ஏன் அதிர்ச்சி அடைந்தார்கள்?

புதிர் விடை :-

அவர்கள் பின்னாடி நின்றிருந்த கூட்டம் பூராவுமே சர்தார்ஜிகள்....!!

நகைச்சுவை நாயகன் வீர்சிங் மற்றும் நிருபர் - புதிர் கதை [கடி]

ஒரு மாத இதழின் நிருபர், பொது மக்களிடையே எந்த எந்த கம்பெனியின் பொருட்கள் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன என்பதை ஆராய்ந்து அதைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிடுவதற்காக பலரைப் பேட்டி கண்டார்.

ஒருநாள் தற்செயலாக நமது நகைச்சுவை நாயகன் வீர்சிங்கையும் அவர் சந்தித்தார். வீர்சிங்கிடமும் தனது கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

நிருபர்- நீங்கள் எந்த பற்பசையை உபயோகிக்கின்றீர்கள்?
வீர்சிங்- பாபா
நிருபர்- நீங்கள் எந்த ஷேவிங் கிரீமை உபயோகிக்கின்றீர்கள்?
வீர்சிங்- பாபா
நிருபர்- எந்த ஷாம்புவை உபயோகிக்கின்றீர்கள்?
வீர்சிங்- பாபா
நிருபர்- எந்த சோப்பை உபயோகிக்கின்றீர்கள்?
வீர்சிங்- பாபா


இதுவரை இப்படிப்பட்ட கம்பெனியைப் பற்றிக் கேள்விப்பட்டிராத நிருபர், “ சரி இப்போது எனது அடுத்த கேள்வி. நீங்கள் எந்த அண்டர்வேரை உபயோக்கின்றீர்கள்.
வீர்சிங்- பாபா
வீர்சிங்கின் பதிலால் கடுப்படைந்த நிருபர், “ சரி கடைசியாக ஒரு கேள்வி.நீங்கள் எந்த செருப்பை உபயோகப் படுத்துகின்றீர்கள்?”
வீர்சிங்- பாபா

நிருபர்- நான் பாபா என்ற கம்பெனியின் பொருட்களைப் பற்றிக் கேள்விப் பட்டதில்லையே?இந்தியாவில் பாபா என்ற கம்பெனி இல்லையே?இது எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது?

இதற்கு வீர்சிங் கூறிய பதிலைக் கேட்டு நிருபருக்குப் பேச நா எழும்பவில்லை. தலையில் அடித்துக்கொண்டு உடனே வெளியேறினார்.

நண்பர்களே அவரது கேள்விக்கு வீர்சிங்கின் பதில் என்னவாக இருந்திருக்கும்?

புதிர் விடை :-

பாபா என்பது வீர்சிங்கின் நண்பர்தான்.வீர்சிங் நண்பரது பொருட்களைத்தான் உபயோகப் படுத்திக்கொண்டிருந்தான்.

வீரசிங்கும் நேர்முகத் தேர்வும் - புதிர் கதை

நமது நகைச்சுவை நாயகன் வீர்சிங்கை அனைவருமே அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்.

வீர்சிங் ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போயிருந்தான். அவனது சர்ட்டிபிகேட்டுகள் அனைத்தையும் பார்த்த தேர்வுக் குழுவினர் அவனைப் பார்த்து, நல்லது வீர்சிங். இப்போது உனது பொது அறிவைப் பரீட்சிக்கப் போகின்றோம்..இந்தப் பரிசோதனையில் நீ தேர்வு பெற்றால் வேலை உனக்குத்தான்என்றார்கள். 

வீர்சிங்கும் துணிச்சலுடன் நான் தயார் என்றான். அவனைப் பார்த்த தேர்வுக் குழுவின் ஒரு அதிகாரி,  வீர்சிங்! சுலபமான பத்துக் கேள்விகள் கேட்கலாமா ? அல்லது கடினமான ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கலாமா? நீ இதில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்துகொள் என்றார்.


சிறிது நேரம் ஆலோசனை செய்த வீர்சிங். ஐயா --- சுலபமான பத்து கேள்விகளைவிட கடினமான ஒரே ஒரு கேள்வியை மட்டும்தான் நான் தேர்வு செய்கின்றேன் என்றான்.

அப்படியே ஆகட்டும், என்றவர், எது முதலில் வருகின்றது? இரவா??? அல்லது பகலா?? என்று கேட்டார். சிறிது நேரம் ஆலோசித்த வீர்சிங் பதிலைக் கூறினான். அவனது பதிலைக் கண்டு வாயடைத்துப் போன தேர்வுக் குழுவினர் அவனுக்கே அந்த வேலைக்கான உத்திரவைக் கொடுத்தார்கள்.

நண்பர்களே..அவர்களது கேள்விக்கு வீர்சிங் என்ன பதிலைக் கூறியிருப்பான்?

புதிர் விடை :-

முதலில் தேர்வுக்குழுவினரின் நிபந்தனை என்ன என்று பார்ப்போம்.
கடினமான ஒரே ஒரு கேள்வியா? அல்லது சுலபமான பத்து கேள்விகளா?
வீர்சிங் தேர்வு செய்தது கடினமான ஒரே ஒரு கேள்வியைத்தான்.

அடுத்து அவர்களது கேள்வி " முதலில் வருவது ---இரவா? அல்லது பகலா??"
பொதுவாக இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும், என்ன பதில் கூறுவது என்று புரியாமல் குழப்பம் அடைந்து "தெரியாது" என்றுதான் பதில் கூறுவார்கள்.

ஆனால் வீர்சிங்கோ இரவு என்று துணிச்சலாக பதில் கூறினான்.
தேர்வுக் குழுவினர் " அது எப்படி பகல் முடிந்தால்தானே இரவு வரும்.?"என்று கேட்க நினைத்தாலும் அவர்களால் கேள்வியை எழுப்ப முடியாது. வீர்சிங்கின் பதிலுக்கு அவர்கள் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். ஏனென்றால் கடினமான ஒரே ஒரு கேள்வியை மட்டும்தானே அவர்கள் கேட்க முடியும்.

ஆண் வயிற்றில் கர்ப்பம் – அதிர்ச்சியில் நபர்!!!

ஆண் வயிற்றில் கர்ப்பம் – அதிர்ச்சியில் நபர்!!!


கடந்த 66 வருடங்களாக தன்னை ஆண் என்று நினைத்து கொண்டு வாழ்ந்தவர் தனக்கு வந்த வயிற்றுவலியை செக்கப் செய்ய போன போது அங்கிருந்த மருத்துவர்கள் – -இவர் ஒரு பெண்ணாக்கும் என்று கூறியதால் பலத்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார் அந்த நபர். வியட்நாமில் பிறந்த சீனரான 66 வயது நபர், வயிறு வீக்கமாக இருப்பது குறித்து, டாக்டரிடம் பரிசோதிக்க சென்றார். அவரை நன்றாக பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கருப்பையில் கட்டி இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்ட அந்த நபருக்கு பெரிய அதிர்ச்சி. இது நாள் வரை அவர் தன்னை, ஆண் என, நினைத்து கொண்டிருந்தார். ஆனால், அவர் பெண் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.


இதுவரை மருத்துவ உலகில் 6 நபர்கள் மட்டுமே இதுபோன்று ஆண் பாதி, பெண் பாதி உடல் அமைப்புடன் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. யுவாங்ஷூ உடலில் ஆண் சுரப்பிகளும் இருந்துள்ளதால், அவர் பெண்களுக்குரிய உடல்வாகுடன் இல்லாமல் ஆணாக உள்ளார். இதுபோன்ற நபர்கள், ஏதாவது ஒரு பாலினத்துக்கான சுரப்பி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து யுவாங்ஷூவிடம் கேட்டபோது, அவர் ஆண் சுரப்பிக்குரிய சிகிச்சையையே எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். இந்த வகை குறைபாடுக்கு டர்னர் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. 2,500 முதல் 3,000 பெண்களில் ஒருவருக்கு இந்த சிண்ட்ரோம் காணப்படுகிறது. இவர்கள் ஆண் தன்மையுடன் இருப்பார்கள்.

இதற்கு காரணம், பெற்றோரிடம் இருந்து எக்ஸ் குரோமோசோம் வந்தால், அது பெண் குழந்தையாக இருக்கும். ஒரு எக்ஸ் மற்றும் ஒரு ஒய் குரோமோசோம் வந்தால், அது ஆண் குழந்தையாக இருக்கும். டர்னர் சிண்ட்ரோம் என்பது வெறுமனே எக்ஸ் குரோமோசோம் மட்டுமே இருப்பது. யுவாங்ஷூவிடம் டாக்டர்கள் துருவித்துருவி விசாரித்ததில், தனக்கு சிறுநீர் தானாக வெளியேறும் பிரச்னை இருப்பதாகவும், உயரமாக வளர்வது 10 வயதிலேயே நின்றுவிட்டதாகவும் கூறினார். யுவாங்ஷூக்கு பெண் உடலுக்குரிய அமைப்பு இருந்தாலும், அவரால் கர்ப்பம் தரிக்க முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இனி இரண்டு “நேர மண்டலம்”

இந்தியாவில் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பின்பற்றப்படும் “மணி நேரம்” நடைமுறைக்குப் பதிலாக முன்பு கடைபிடித்த பழைய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது.  

பூமியின் பரப்பில் குறுக்கும், நெடுக்குமாக கற்பனைக் கோடுகள் வரையப்படுகின்றன. பூமியை குறுக்காக பிரிக்கும் கோடுகள் அட்சரேகைகள் (Latitudes) எனப்படுகின்றன. பூமியை நீளவாக்கில் பிரிக்கும் கோடுகள் தீர்க்க ரேகைகள் (Longitudes ) எனப்படுகின்றன.


இந்த தீர்க்க ரேகைகளை வைத்தே ஒரு இடத்தின் நேரம் தீர்மானிக்கப்படுகிறது. கிரீன்வீச் மீன் டைம் 12 ஆக இருந்தால் டெல்லியில் நேரம் 5.30 மணி. ஆனால், இந்தியாவில் இரு தீர்க்க ரேகைகள் செல்கின்றன. இதன்படி வட கிழக்கு மாநிலங்களின் நேரம் டெல்லியை விட 1 மணி நேரம் அதிகமாக இருக்க வேண்டும்.

ஆனால், டெல்லி ஆட்சியாளர்கள் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தாங்களாகவே கூறிக் கொண்டு, டெல்லியில் 5 மணி என்றால் அஸ்ஸாமிலும் 5 மணி தான் என்று அர்த்தமில்லாத வாதம் பேசி அதையே வட கிழக்கு மக்களின் தலையிலும் கட்டினர்.

இதனால், டெல்லியில் சூரிய உதயம் ஆவதற்கு முன்பே அஸ்ஸாமில் சூரிய உதயம் ஆகிவிடுகிறது. அங்கு சூரிய அஸ்தமானம் ஆகி ஒரு மணி நேரத்துக்குப் பின்பே டெல்லியில் சூரிய அஸ்தமானம் நடக்கிறது.

அதாவது அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சூரிய உதயம் என்பது அதிகாலை 4 அல்லது 5 மணிக்கே வந்துவிடும். அதேபோல் மாலைப் பொழுது என்பது 4 அல்லது 5 மணிக்கு முடிந்து இருளாகிவிடும். தற்போது இந்தியாவின் பிறபகுதிகளில் இருப்பதைப் போல அதாவது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் பணி நேரம் கடைபிடிக்கப்படுவதால் பொதுவாக பகல் பொழுதில் வேலை நேரம் குறைவாகவும் இரவு சற்று கூடுதல் வேலை நேரமாகவும் இருந்து வருகிறது.

ஆனால் அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 150 ஆண்டுகாலத்துக்கு முன்னர் பகல் பொழுதை அதிகம் பயன்படுத்தும் வகையிலான மணி நேர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுதான் தற்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் இந்திய மணி நேர நடைமுறைப்படுத்துவதால் பகல் நேர வேலை மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் பணி மற்றும் உற்பத்தித் திறன் குறைகிறது என்பது பொதுவான ஆதங்கம்.

ஆனாலும் டெல்லியின் 9 மணி முதல் 5 மணி வரையிலான அதே நேரம் தான் வட கிழக்கு மக்களின் அலுவலக, பள்ளி நேரமாக உள்ளது. இதன்மூலம் அந்தப் பகுதி மக்களின் அடிப்படை உரிமையையைக் கூட டெல்லி அதிகார வர்க்கம் மதிக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இப்போது எப்படியோ இந்த நீண்ட காலக் கோரிக்கை மத்திய அரசின் காதில் விழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய், அஸ்ஸாமின் தேயிலை தோட்டங்களில் பின்பற்றப்படுகிற நடைமுறைதான் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பொருந்தும். அப்போதுதான் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.

இதனால் தேயிலைத் தோட்டங்களில் பின்பற்றப்படும் நேர முறையையே நாங்களும் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இப்படி நேரம் மாற்றி அமைக்கப்பட்டால் அஸ்ஸாமில் காலை 6 அல்லது 7 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை வேலை நேரம் இருக்கும். இதன்படி இந்தியாவின் இதர பகுதிகளில் ஒரு நேர முறையும் வடகிழக்கில் ஒரு நேர முறையும் கடைபிடிக்கப்படவுள்ளது.

காட்டின் ராஜா சிங்கமும் ஒரு முயலும் - புதிர் கதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.கரடி,குரங்கு மற்றும் முயல் மூன்றும் அதற்கு அமைச்சர்களாக இருந்ததன. அந்தச் சிங்கம் எந்த அநியாயம் செய்தாலும், அதை நியாயமாகச் செய்வது போலவே காரணம் காட்டிச் செய்து வந்தது. 

ஆண்டுகள் சென்றன. சிங்கத்துக்கு வயதாகிவிட்டது. அதனால் இரை தேடிச் செல்ல இயலவில்லை. அதனால் ஏதாவது காரனம் கட்டி ஒவ்வொரு அமைச்சர்களாகக் கொன்று தின்றுவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டது. 


முதலில் கரடியை அழைத்தது. அதனிடம், என் வாய் எப்படிப்பட்ட மணம் வீசுகின்றது.?நான் நன்றாக வாயைத் திறக்கின்றேன். என் வாயின் அருகே உன் மூக்கை வைத்து முகர்ந்து பார்!. என்ன மணம் வருகிறது என்று சொல் என்றது.

சிங்கத்தின் சூழ்ச்சியை அறியாத கரடி சிங்கத்தின் வாய்க்கருகில் தனது முகத்தைக் கொண்டு சென்றது.சிங்கம் வாயைத் திறந்தது முகர்ந்து பார்த்தது.சிங்கம் எப்போதும் இறைச்சியையே சாப்பிடுவதால் அதன் வாயில் இருந்து கெட்ட நாற்றம் வீசியது. அதனால் கரடி, அரசே! தங்கள் வாயில் இருந்து கெட்ட நாற்றம் வீசுகின்றது.என்னால் தாங்க இயலவில்லை என்றது.

கோபத்துடன் சிங்கம் எல்லோரும் புகழும் அரசனாக விளங்கும் எனது வாய் கெட்ட நாற்றம் வீசுகின்றது என்று எப்படிச் சொல்லலாம்.உனக்கு என்ன துனிச்சல்?என்னையே குறை கூறுகிறாயா என்று கூறியபடியே பாய்ந்து கரடியைக் கொன்றது.

சில தினங்களுக்கு சிங்கம் கரடியைச் சாப்பிட்டு பசியைத் தீர்த்துக்கொண்டது.

மேலும் சில தினங்கள் கடந்தன.அடுத்தாற்போல் குரங்கை அழைத்தது.கரடிக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்திருந்த குரங்கு நடுங்கியபடியே சிங்கத்தின் அருகே சென்றது. சிங்கம் தனது வாயைத் திறந்து குரங்கை முகர்ந்து பார்த்துக் கூறும்படி கட்டளையிட்டது.

குரங்கும் முகர்ந்து பார்த்தது. தான் உயிர் பிழைக்கவேண்டுமானால் பொய் கூறுவதில் தப்பில்லை என்று நினைத்த குரங்கு,அரசே----என்னே இனிய மணம். இதுபோன்ற நறுமணத்தை நான் இதுவரை முகர்ந்ததே இல்லை என்றது.

உடனே சிங்கம், குரங்கே---நான் பச்சை இறைச்சியைச் சாப்பிடுகின்றேன்.பல் விளக்குவதே கிடையாது. இப்படிப்பட்ட எனது வாயில் எப்படி நறுமணம் வரமுடியும். அரசனான என்னிடமே பொய் பேசுகின்றாயா?உன்னை என்ன செய்கிறேன் பார்--- என்றபடியே குரங்கை ஒரே அடியில் அடித்து சில தினங்களுக்குப் பசியைத் தீர்த்துக்கொண்டது,

மேலும் சில நாட்கள் கழிந்தன. மறுபடியும் சிங்கத்துக்குப் பசியெடுத்தது. இப்போது முயலை அழைத்தது. முயல் புத்தி கூர்மை கொண்டது. கரடிக்கும், குரங்குக்கும் நேர்ந்த கொடுமைகளைக் கண்டிருந்ததால் தான் என்ன பதில் கூறவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டது.?

சிங்கத்தின் வாயை முகர்ந்த முயல் தான் தீர்மானித்தபடியே கூறியது. அதைக் கேட்ட சிங்கத்தால் எந்தக் காரணம் கூறியும் முயலைக் கொல்ல இயலவில்லை. 

அப்படியானால்----முயல் என்ன பதில் கூறியிருக்கும்?

புதிர் விடை :-

"ராஜா! எனக்கு சளி பிடித்து மூக்கு அடைத்துள்ளது. அதனால் நான் தங்கள் வாயின் மணம் எப்படி என்று கூற இயலவில்லை" என்றது.

ராமு சோமுவின் கார் பந்தயம் - புதிர் கதை

ராமுவும் சோமுவும் புதிதாகக் கார் வாங்கத் தீர்மானித்தார்கள். ஒரே மாதிரியான கார் வாங்குவது என்று முடிவு செய்து கொண்டார்கள். 

மாருதி கார் விற்பனையகம் சென்று ஒரே மாதிரியான வண்ணத்தில், ஒரே சக்தி அளவில், ஒரே விலையில், அடுத்து அடுத்து வரும் கார் என்ஜின் வரிசை எண்ணாக இருக்கும்படி [motor engine serial number] பார்த்துப் பதிவு செய்தார்கள்.


ராமுவும் சோமுவும் ஒரே இடத்தில் அடுத்து அடுத்த வீட்டில் வசித்துவந்தார்கள். ஒரே நாளில் ஒரே சமயத்தில் அவர்கள் வீட்டுக்கு முன்பாக கார்களைக் கொண்டுவந்து விற்பனையாளர் நிறுத்தினார்.

ராமுவும் சோமுவும் கார் ஓட்டுவதில் ஒரே மாதிரியான திறமை கொண்டவர்கள். எப்போதும் 50 கிலோ மீட்டர் வேகத்தில்தான் இருவருமே ஓட்டுவார்கள். வீட்டின் முன்னால் வந்து சேர்ந்த கார்களில் ராமு ஒரு காரிலும், சோமு ஒரு காரிலும் ஏறினனர்கள்.

ராமு மேற்குத் திசையில் காரை ஓட்ட ஆரம்பித்தான். சோமு கிழக்குத் திசையில் காரைச் செலுத்த ஆரம்பித்தான். இருவருமே ஒரே மாதிரியான வேகத்தில் ஓட்டுபவர்கள் என்று கூறியுள்ளேன்.

காரும் ஒரே மாதிரியான கார். கார்கள் நிற்காமல் போய்க்கொண்டே உள்ளது.எரிபொருள் தீரத்தீர நிரப்பிக்கொண்டு இருவருமே தங்கள் திசையை விட்டு விலகாமல் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி ! யாருடைய காரின் டயர்கள் முதலில் தேய்ந்து போய் மாற்ற வேண்டிவரும்?

புதிர் விடை :-

பூமி அப்பிரதட்சிணமாக அல்லவோ சுற்றுகிறது, தன்னைத்தானே? அப்படியானால் அதற்கு எதிர்திசையில் பயணம் செய்பவரின் கார்தானே சீக்கிரம் பழுதடையவேண்டும்? அதாவது மேற்கு திசை நோக்கி செல்லும் கார்?
கிழக்கு திசையிலிருந்து  மேற்கு திசையை நோக்கி போகும் சோமுவின் டயர்கள்தான் முதலில் மாற்றவேண்டி வரும்....( பூமியின் சுற்றும் திசையை வைத்து பார்க்கும்போது )

ராமு மற்றும் சோமுவின் பந்தயம் - புதிர் கதை

ராமு சோமு இருவருமே கட்டிடத் தொழிலாளிகள்.ஒரே இடத்தில் வேலை செய்தார்கள். அன்று விடுமுறை தினமானதால் வேலை எதுவும் நடைபெறவில்லை.

அவர்களின் கட்டிடப் பணி நடந்துகொண்டிருந்த இடத்துக்கு அடுத்தாற்போல் இருந்த ஒரு மைதானத்தில் ராமுவும் சோமுவும், மாலை நேரத்தில், பலவிஷயங்களைப் பேசியபடியே காலாற நடந்துகொண்டிருந்தார்கள்.


பேச்சு வாக்கில் தான்தான் அறிவாளி என்பதுபோல ராமு பேசினான்.சோமு அதை ஒத்துக்கொள்ளவில்லை.ஏதாவது ஒரு போட்டி வைத்துக்கொள்வது.. அதில் யார் வெல்கிறார்களோ அவர்களே அறிவாளி என்று மற்றவன் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

அங்கிருந்த ஒரு சிறிய , மணல் அள்ளிப்போட்டுத் தள்ளிச் செல்லும் கைவண்டி ஒன்றைப் பார்த்த ராமு,  இதோ பார் சோமு-----இந்த தள்ளு வண்டியை எடுத்துக்கொள்வோம்.இதில் ஏதாவது ஒன்றை வைத்து, இங்கிருந்து இந்த மைதானத்தின் எல்லைவரை தள்ளிக்கொண்டு சென்று திரும்பவேண்டும். வண்டியில் வைக்கப்படுவது கீழே விழாமலும், அதே சமயம் வேகமாகவும் யார் வருகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர். பந்தயம் நூறு ரூபாய். சம்மதமா? என்று கூறினான்.

சிறிது நேரம் ஆலோசனை செய்த சோமு அதற்கு ஒத்துக்கொண்டான். ஆனால் நான்தான் வண்டியை முதலில் தள்ளிச் செல்வேன் என்றான். அத்துடன் வண்டியில் எதை வைத்துத் தள்ளிச் செல்வது என்பதையும் தானே தேர்ந்தெடுத்துக்கொள்வதாகக் கூறினான்.

கொஞ்சம் கூட தாமதிக்காமல் ராமு அதற்கு ஒத்துக்கொண்டு, சோமுவை போட்டியை ஆரம்பிக்கும்படி கூறினான். போட்டியை சோமு ஆரம்பித்தான்.

வண்டியில் தான் விருப்பப்பட்டதை வைத்து, மிக மிக மெதுவாகச் சோம்பல் முறித்தபடியே, தள்ளிக்கொண்டு மைதானத்தின் விளிம்புவரை சென்று திரும்பினான்.இடை இடையே நீண்ட நேரம் வண்டியை நிறுத்தி வைத்தான்.இதைவிட மெதுவாக யாருமே வண்டியைத் தள்ள முடியாது என்பதுபோல சோமு வண்டியைத் தள்ளினான். ஆனால் போட்டியோ யார் வேகமாகத் தள்ளுவார்கள் என்பதுதான். ஆனால் அதைப் பற்றி சோமு கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

அடுத்து ராமுவின் முறை. சோமுவை ஏற இறங்கப் பார்த்த ராமு , தான் தோற்றுவிட்டதாகக் கூறி பந்தயப் பணமான நூறு ரூபாயை பேசியபடியே சோமுவிடம் கொடுத்தான்.

நண்பர்களே-----சோமு வண்டியை மிக மெதுவாக தள்ளிச் சென்று திரும்பியும், ராமு பந்தயத்தில் கலந்து கொள்ளாமல், தோல்வியை ஏன் ஒப்புக்கொண்டான்? கூறுங்களேன் !

புதிர் விடை :-

சோமு கைவண்டியில் ஏற்றிக்கொண்டதே ராமுவைத்தான்.... .ராமு ஒல்லியான உருவம் கொண்டவனாக இருந்திருப்பான்.. ஆனால் சோமுவோ மிகவும் குண்டான உருவம் கொண்டவனாக இருந்திருப்பான்.  அவனை துக்கி அந்த வண்டியில் உக்கார வைக்க ராமுவால் கண்டிப்பாக முடிந்திருக்காது என்ற காரணத்தால் ராமு தன் தோல்வியை ஒத்துக்கொண்டிருப்பான்... இரண்டாவதாக எப்படி அவனே அவனை (ராமுவே ராமுவை )வண்டியில் ஏற்றி தள்ளவும் முடியும்???

காளிதாசனின் தற்கொலை முயற்சியும் , துப்பாக்கியின் சத்தமும் - புதிர் கதை

காளிதாஸன் வாழ்க்கையே வெறுத்துப் போய் அமர்ந்திருந்தான் ♣

தன்னையே வெறுத்துக்கொண்டான்.இனிமேலும் உயிர் வாழ்வதில் எந்த அர்த்தமும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை, தான் எந்தக் காரியத்தைச் செய்தாலும் வெற்றியில் முடிவதில்லை என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை அவனுள் கிளர்ந்தெழுந்து அவனை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது.


தற்கொலையாவது சரியாகச் செய்துகொள்வேனா என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது.மேசை டிராயரை இழுத்தான், உள்ளே இருந்த துப்பாக்கி பளபளவென்று மின்னியது அவனைப் பார்த்து எள்ளி நகையாடுவது போன்றிருந்தது. துப்பாக்கியைக் கையில் எடுத்தான். உற்றுப் பார்த்தான். சரி---இனிமேல் செய்து பார்த்துவிடவேண்டியதுதான் என்று முடிவு செய்தான்.

எழுந்தான். துப்பாக்கியில் குண்டு நிறப்பியுள்ளதா என்று சரிபார்த்துக்கொண்டான். குளியல் அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றான்.
தனது நெற்றிக்குச் சரியாகக் குறி வைத்தான். குறி சரியாக உள்ளது என்ற திருப்தியுடன் துப்பாக்கியின் விசையை இழுத்தான். டுமீல் என்ற சப்தம் அந்தப் பகுதியையே அதிர வைத்தது.

அக்கம் பக்கம் இருந்தவர்கள் அனைவரும் காளிதாஸனின் வீட்டுக்குள் கேட்ட சப்தத்தைக் கேட்டு, என்னவோ ஏதோ--- என்று பதறியடித்து ஓடிவந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள். 

அங்கே-------------------காளிதாஸன் அமைதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

கேட்டவர்களுக்கெல்லாம் துப்பாக்கி தவறுதலாக வெடித்துவிட்டது. ஒன்றும் ஆபத்தில்லை என்று பதில் கூறி அனுப்பிவைத்தான்.

நண்பர்களே---------நெற்றிக்குச் சரியாகக் குறி வைத்து துப்பாக்கியின் விசையை இழுத்து, அது வெடித்தும் ஏன் காளிதாஸனுக்கு ஒன்றுமே சம்பவிக்கவில்லை??  

புதிர் விடை :-

குளியலறை கண்ணாடியில் நெற்றியைப் பார்த்து சுட்டிருப்பான் !

வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக என்ஜினியர் ♥

வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக என்ஜினியர்


குமரி மாவட்டம் கருங்கல், அய்யன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மனைவி ரத்தினம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது இளைய மகன் அமிர்தராஜ். ஐஐடியில் உயர் படிப்பு பயின்றவர். இந்த நிலையில் கடந்த 5 வருடமாக சீனாவில் உள்ள யு யாங் ஹூனன் பகுதியில் உள்ள ஐபிஎம் சாப்ட்வேர் கம்பெனியில்  பிராஜக்ட் எக்ஸ்சிகியூட்டிவாக பணியாற்றி வருகிறார்.


இந்த கம்பெனி இருக்கும் பகுதியை சேர்ந்த யு ஜின் ஷாவின் மகள் லிங் ஷீயு சாஓவை சந்தித்தார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

அடிக்கடி இருவரும் சந்தித்து கொண்டதால் கடந்த 6 மாதமாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வருகின்றனர். காதல் விவகாரம் பெண் வீட்டுக்கு தெரியவந்ததும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அமிர்தராஜ் தனது பெற்றோரிடம் கூறினார்.

உடனே உறவினர்களுடன் சீனா சென்று பெண்ணின் பெற்றோரிடம் பேசினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி சீனா முறைப்படி மணமகன் வீட்டார் நகை, துணிமணிகள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்து திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து அமிர்தராஜ்-லிங் ஷீயு சாஓ திருமணம் கருங்கலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இந்திய முறைப்படி நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரிகள், அவருடன் வேலை பார்ப்பவர்கள் என்று மொத்தம் 15 பேர் வந்திருந்தனர்.

பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் லிங் ஷீயு சாஓ சீனாவின் பாரம்பரிய உடையுடன் பங்கேற்றார்.

முள் படுக்கையில் தவம்: சாமியார் முன் குவியும் பக்தர்கள் !

முள் படுக்கையில் தவம்: சாமியார் முன் குவியும் பக்தர்கள் 


சிவகங்கை: மானாமதுரை அருகே முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்யும் சாமியாரிடம் அருள் வாக்கு கேட்க ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள லாடனேந்தல் கிராமம் மதுரை&ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.


இங்கு அருள்மிகு பூங்காவன முத்துமாரியம்மன் கோயில் பூசாரியாக நாகராணி என்ற 50 வயது பெண்மணி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முள் படுக்கையில் அமர்ந்து இவர் குறி சொல்வது வாடிக்கை. இதற்காக காடுகளில் இருந்து உடை முள், இலந்தை முள், காட்டு கருவேல முள் உள்ளிட்ட ஏழு வகை முட்கள் கொண்டு வரப்பட்டு கோயில் முன் அமைந்திருக்கும் மைதானத்தில் 5 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது.

முள் படுக்கையில் ஏறுவதற்கு வசதியாக மர ஏணியும் அமைக்கப்படுகிறது. மார்கழி 18ம் நாள் அதிகாலையில் ஈரத்துணியுடன் கோயிலை வலம் வந்த நாகராணி பின் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூஜைகள் நடை செய்கிறார். அதன்பின் கோயிலின் மேற்கு பகுதியில்புதிதாக அமைக்கப்பட்ட மாசானியம்மனுக்கு பூஜைகள் செய்துவிட்டு ஆவேசம் வந்தது போல சாமியாடுகிறார் நாகராணி. பின் முள் படுக்கைக்கு பூஜைகள் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. முள் படுக்கையை மூன்று முறை வலம் வந்து மர ஏணியில் ஏறி ஆடுகிறார்.

திடீரென்று முள் படுக்கையில் சாஷ்டாங்காக மல்லாக்க படுக்கிறார். சுமார் ஒருமணி நேரம் ஆடாமல் அசையாமல் படுத்து கிடக்கிறார். பக்தர்கள் கூட்டம் மெய் மறந்து கோசமிடுகிறது. ஒரு மணி நேர தவம் முடிந்த பின் எழுந்து நின்று சாமியாடுகிறார். பின் ஒவ்வொருவராக வந்து அருள் வாக்கு கேட்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் வரிசையாக சொல்லி முடிக்கிறார். அதன்பின்பு தீபாராதனை காட்டப்படுகிறது.

இது சாமி மலையேறிவிட்டதாக அர்த்தம். பின் நாகராணி கீழே இறங்கி வந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதுடன் இந்தாண்டு மார்கழி திருவிழா முடிவடைகிறது. இதற்காக கோயில் வளாகத்தில் தற்காலிக பந்தல் அமைப்பதுடன் பிரம்மாண்டமான யாகசாலை பூஜைகளும் நடக்கின்றன. மாலையில் அன்னதானத்துடன் மார்கழி மாத முள்படுக்கை தவம் முடிவடைகிறது.

2013-ல் உலக கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு 3.7 ட்ரில்லியன் டாலர்! அவா்களின் வரிசையும்

2013-ல் உலக கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு 3.7 ட்ரில்லியன் டாலர்! அவா்களின் வரிசையும்


2013ஆம் ஆண்டில் உலக கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 3.7 ட்ரில்லியன் டாலராகவும், பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து கொண்டிருப்பதாகவும் ப்ளூம்பெர்க் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. ப்ளூம்பெர்க் தளமானது 2013ஆம் ஆண்டின் 300 கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து பில்கேட்ஸ் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 15.8 பில்லியன் டாலர் அதிகரித்து 78.5 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த மே மாதம் மெக்சிகோவின் முதலீட்டு நிறுவன அதிபர் கால்ஸ் சிலிமிடம் இருந்து முதல் கோடீஸ்வரர் என்ற பெயரை 6 ஆண்டுகளுக்குப் பின்னர் தட்டிப் பறித்தார் பில்கேட்ஸ்


பிரபல கேசினோ அதிபர் லாஸ் வேகாஸ் குழுமத்தின் ஷெல்டன் அடெல்சனின் சொத்து மதிப்பு 2012 ஐ விட 14.4 பில்லியன் டாலர் உயர்ந்து 2வது இடத்தில் இருக்கிறார்.


ஃபேஸ்புக்கின் அதிபர் மார்க் ஸ்கெர்பெர்க்கின் சொத்து மதிப்பு 12.4 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளதாம்.


ஆசியாவின் முதல் பணக்காரராக தொடர்ந்தும் லி கா ஷின் இருந்து வருகிறது. அவரது சொத்து மதிப்பு 30.2 பில்லியன் டாலர்.சீனாவில் கோடீஸ்வரர்கள் ஸோங் க்வின்கோ மற்றும் வாங் ஜியானலின்ஆகியோரிடையேதான் யார் முதல் கோடீஸ்வர் என்ற போட்டி. இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு மாறி மாறி சீனாவின் முதல் கோடீஸ்வரர் பட்டியலில் இருந்துள்ளனர் 


ரஷியாவின் அலிஷர் உஸ்மனோவ் அந் நாட்டின் கோடீஸ்வரர் பட்டியல் முதலிடத்தில் இடம்பிடித்திருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 20.2 பில்லியன் டாலர்.சவூதியின் இளவரசன் அல்வலீத் பின் தலால் தொடர்ந்தும் மத்திய கிழக்கின் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 32.4 பில்லியன் டாலர்


இணையத்தில் மனித உடல் மற்றும் மனித உடல்களின் பாகங்கள் விற்பனை !

இணையத்தில் மனித உடல் மற்றும் மனித உடல்களின் பாகங்கள் விற்பனை


அமெரிக்காவிலுள்ள இண்டியானா போலிஸ் மாகாணத்தை சேர்ந்த டேவிட் சார்லஸ் என்ற 21 வயது நபரை போலீசார் ஆன் லைனில் “ஈ பே”[E-Bay] மூலம் மனித மூளையை விற்றதாக கூறி கைது செய்தனர்.

அங்குள்ள இந்திய மருத்துவ வரலாற்று அருங்காட்சியகத்திலிருந்து 60க்கும் மேற்பட்ட மூளைகளை அவன் திருடியுள்ளதாக தெரிகிறது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அவன் அந்த அருங்காட்சியகத்தில் அத்துமீறி நுழைந்து மூளை திசுக்களை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த அருங்காட்சியகத்தில் 2000 நோயாளிகளின் உடல் உறுப்புகள் உள்ளதாகவும், அவை அனைத்தும் 1890 முதல் 1940 வரையான காலத்திற்கு உட்பட்டவை என்றும் கூறப்படுகிறது.

ஜார்களில் வைக்கப்பட்டிருந்த இம்மூளைத் திசுக்களை “ஈ பே” இணையதளம் மூலம் மத்தியஸ்தர் ஒருவரை கொண்டு அவன் விற்றுள்ளான். அது ஈ பேயின் “மனிதன், மனித உடல் மற்றும் மனித உடல்களின் பாகங்களை” தங்களது இணையதளத்தில் விற்கக்கூடாது என்ற கொள்கைக்கு எதிரானது என்றும் கூறப்படுகிறது.

சார்லஸிடம் 6 மூளைகளை வாங்கிய நபர் ஒருவர் அருங்காட்சியகத்தின் நிர்வாக இயக்குனரான மேரி ஹெலன் ஹென்னஸ்சியுடன் தொடர்பு கொண்டு தான் வாங்கியுள்ள மூளைகளில் அருங்காட்சியகத்தின் முத்திரைகள் ஒட்டப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அவரது இந்தக்குறிப்பை கொண்டு இண்டியானா போலிஸ் காவல்துறையிடம் மேரி புகார் அளித்தார்.

உடனடியாக தங்கள் “கொடுக்கு நடவடிக்கை”யை துவக்கிய போலீசார் அவனை பொறி வைத்து பிடித்தனர். அதாவது மத்தியஸ்தர் ஒருவரை கொண்டு மூளைகள் தேவைப்படுவதாகவும், அது குறித்து விவாதிக்க ஓரிடத்திற்கு வருமாறும் கூறி அவனை அங்கு வரச்செய்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கிட்டத்தட்ட 4800 டாலர் மதிப்புள்ள மனித மூளைகளை திருடியதாக அவன் மீது வழக்கு பதிவு செய்யபட்டு அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்