புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Sunday, January 5, 2014

நாஸ்கா கோடுகள் - புரியாத புதிர்

நாஸ்கா கோடுகள் - புரியாத புதிர் 

இந்த பூமிப்பந்தானது பல்வேறு மர்மங்களையும் அதிசையங்களையும் தன்னகத்தே அடக்கியது. இம்மர்மங்களின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் தருணம் அவை மானுட வாழ்வியலுக்கான புதியதொரு திறவுக்கொலாக அமைந்துள்ளது.


பலகோடி நட்சத்திர மண்டலங்களையும் கிரகங்களையும் உள்ளடக்கிய இந்த அண்டத்தில் பூமி என்னும் இக்கோளில் மட்டுமே உயிர்கள் தோன்றியது முதல் அவ்வுயிர்கள் அண்டத்தை ஆளும் வேட்கை கொண்டு அலைவது வரை அனைத்துமே விந்தையானது. இதில் இன்றும் மானுட அறிவிற்கு சவால் விடும் அதிசயங்களையும் மர்மங்களையும் இயற்க்கை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் நாஸ்கா கோடுகள்.

பெரு நாட்டின் தெற்கில் அமைந்திர்க்கும் நாஸ்கா பாலைவனதிலிருந்து, லிமா, பல்பா, பம்பாஸ் சமவேளிகளுக்கிடையே  400 கி.மீ., சுமார்  தெற்கு கடற்கரை அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான மனைகொடுகள் அவை. 1994 ல் "உலக தொல்லியல் பாரம்பரிய தளம்" என்று யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது.


(குரங்கைப்போன்று அமைந்துள்ள கோடுகள்)


(பிரமிட்போன்று அமைந்துள்ள கோடுகள்)

(மனிதனின் கைகள் போன்று அமைந்துள்ள கோடுகள்)


(சிலந்தி போன்று அமைந்துள்ள கோடுகள்)


(பாடும்பறவை போன்று அமைந்துள்ள கோடுகள்)


( நாய் போன்று அமைந்துள்ள கோடுகள்)

நாஸ்கா கோடுகள் 1927 விமானத்தில் இருந்து தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது.அறிவியலாளர்கள் இவற்றை நாஸ்கா கலாசார மக்களால் கி.பி.400 மற்றும் கி.பி.600 ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் இவற்றை உருவாக்கியிருக்கலாம் என்று கருதுகின்றனர். 

பலநூறு விலங்கு,பறவை,தாவர இனங்களின் உருவங்களை வெளிப்படுத்தும் இந்த நாஸ்கா மனைகொடுகளை ஒரு சாரர் இவை விவசாயிகள் உருவாகியவை என்றும், மற்றொரு தரப்பினர் இவை வேற்றுலகவாசிகளால் ஏற்ப்படுத்தப்பட்டவை என்று கூறிவருகின்றனர். இவற்றில் எது உண்மை என்று இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. இருந்தும் விஞ்ஞானம் வளராத அக்காலக்கட்டத்தில் இவ்வளவு பிரமாண்டமான கோடுகளை அப்பெரும் நிலப்பரப்பில் எவ்வாறு நேர்த்தியாகவும், துல்லியமாகவும் வரையப்பட்டது? யாரால் வரையப்பட்டது? அவற்றை வரைய வேண்டிய அவசியமென்ன? அவை நமக்கு உணர்த்துபவை யாவை?

இம்முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. விஞ்ஞானம் நாஸ்கா கோடுகளுடன் இன்றும் போரடிக்கொண்டிருகிறது.

நன்றி : 

நோவாவின் பேழையும் மற்ற மதங்களின் நம்பிக்கையும் !

கிறித்துவர்களின் புனித நூலான விவிலியத்தில் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமத்தில் நோவாவினுடைய கதை வருகிறது. உலகில் பாவங்கள் அதிகரித்து மனிதர்கள் தீய குணங்கள் உடையவர்களாக இருந்ததினால் இறைவன் இவ்வுலகை மீண்டும் புதுப்பிக்க எண்ணினார். எனவே, மனிதர்களில் நற்குணங்கள் கொண்டவரும் நீதிமானாகவும் திகழ்ந்த நோவவினை தேர்ந்தெடுத்து அவரிடம் உலக ஜீவராசிகள் அனைத்திலும் ஒரு ஜோடி விலங்கினங்களும் அவற்றுடன் நோவா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவதற்காக பேழையை உருவாக்குமாறு கட்டளையிட்டார்.


 நோவா பேழையை உருவாக்கியவுடன் தான் பூமிக்கு பெருவெள்ளத்தை அனுப்புவதாகவும் அதில் உலகில் உள்ள அனைத்தும் அழிக்கப்படும் நீயும், உன் குடும்பத்தாரும், எஞ்சிய பேழையிலிருக்கும் உயிரினங்கள் மட்டுமே ஜீவித்திருப்பீர்கள். வெள்ளம் வடிந்தவுடன் புதுவுலகில் நீங்கள் மேன்மையான வாழ்வை வாழுங்கள் என கட்டளையிட்டார். அதன்படி நோவாவும் பேழையை செய்து முடிக்க பெருவெள்ளம் பூமியை ஆட்கொண்டது. அனைத்து உயிரினங்களும் மாண்டன பேழையில் எஞ்சியிருந்தவர்களை தவிர. விவிலியத்தின் கூற்றுப்படி வெள்ளம் வடிந்து நோவாவின் பேழை அரராத் என்னும் மலையின் கீழ் கரை ஒதுங்கியதாக உள்ளது. உலகிலுள்ள அனைத்து தொன்மங்களிலும் இதுப்போன்ற கதைகள் ஏராளம் உள்ளன. முகமதியர்களின் தொன்மமான குரான் இவரை நுவா இஸ்லாம் என்றழைக்கிறது. குரானிலும் அரராத் மலையினை அல்ஜூடி அன்று குறிப்பிட்டு அதனை 'பேழையின் உறைவிடம்' என்று கூறுகிறது.

இதனை ஆதாரமாகக்கொண்டு நோவாவின் பேழைக்கான தேடுதலை தொடங்கிய நேஷனல் ஜியோகிராபிக் தொலைகாட்சி குழுமத்தினர் 2009ஆம் அக்டோபர் மாதம் நோவாவின் பேழையை கண்டுப்பிடித்துள்ளனர். அவ்விடத்தில் செய்யப்பட்ட அனைத்து சோதனைகளும் அது நோவாவின் பேழைதான் என்று நிரூபிக்க போதுமானவையாக உள்ளதாக அவர்கள் தெரிவிகின்றனர். நோவாவின் பேழைக்கான தேடுதலின் காணொளி கீழே.
  


மேலும் விரிவாக படிக்க இந்த தளத்தை உபயோகிக்கவும்  : http://www.arkdiscovery.com/noah's_ark.htm

விவிலியத்திலும் குரானிலும் மட்டுமல்ல கிரேக்க, இந்து புராணங்களிலும் இவ்வாறான கதைகள் உள்ளன. இந்துக்கள் இவ்வாறாக ஏற்பட்ட பெருவெள்ளத்தினை பிரளையம் என்றும் ஊழிக்காலம் என்றும் அழைக்கிறது. பிரதோஷங்கள் ஏழு வகைப்படும் அவற்றில் ஏழாவதான பிரளையக்கால பிரதோஷத்தினை யாரும் தரிசிக்க முடியாது அன்று இறைவன் ஊழித்தாண்டவம் ஆடுவார் என்று இந்து சமயத்தினரால் நம்பப்படுகிறது. எது எப்படியோ எந்தவொரு தொன்மமும் மனிதனுக்கு நேரிடையாக செய்திகளை வழங்குவதில்லை நாம் தான் அவற்றை புரிந்துக்கொள்ளவேண்டும்.

நன்றி : 

கழண்டு ஓடிய காரின் டயரும் , அருமையான ஒரு யோசனையும் - புதிர்

♣ இது ஒரு சுலபமான புதிர் - முயற்சியுங்கள் ♣
திருச்சியில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு காரில் நான் சென்று கொண்டிருந்தேன்.

திடீரென்று அந்தக் கார் நேராகச் செல்லாமல் அங்கும் இங்குமாக அலைந்தது.

சமாளிக்க இயலாமல் ஓட்டுனர் வேகத்தைக் குறைத்துக் காரை நிறுத்தினார்.
கீழே இறங்கிவந்து வாகனத்தின் நான்கு பக்கமும் ஆராய்ந்துபார்த்தார்.

ஒவ்வொரு சக்கரமாகப் பார்த்து வந்ததில், ஒரு சக்கரத்தில் பினைப்புக்காகப் பொருத்தப்பட்டிருந்த நட்டுகள் நான்குமே இல்லாமல் சக்கரம் எந்த சமயமும் விலகிக் கீழே விழும் நிலையில் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.நல்ல வேளையாக பெரிய விபத்து நடக்காமல் இருந்தது என்று மனதைத் தேற்றிக்கொண்டார்.


அடுத்த நகரமான மேலூர் இன்னும் பத்து கிலோமீட்டார் தொலைவில் இருப்பதினால், வேறு ஒரு வாகனத்தில் ஏறிச் சென்று மேலூரில் இருந்து சக்கரத்தில் பொருத்தும் நட்டுகளை வாங்கி வந்து பொருத்தினால்தான் வண்டியை ஓட்ட முடியும் என்று முடிவு செய்துகொண்டார்.

இதற்கிடையில் காரில் இருந்து நான் இறங்கினேன். சக்கரத்தின் நட்டுகள் கழன்றுபோன விபரத்தைக் கூறி, .தான் மேலூர் சென்று விரைவில் நட்டுகளை வாங்கிவந்துவிடுவதாகக் கூறினார்.

சிறிது ஆலோசனை செய்த நான் ஒரு எளிய வழியைக் கூறினேன். 
அதன்படி செய்த ஓட்டுனர் வாகனத்தை உடனே கிளப்பினார். 
மெதுவாக ஓட்டிச்சென்று மேலூரை அடைந்தோம்.
வேறு புதிய நட்டுகளை வாங்கிப் பொருத்திக்கொண்டு வழக்கமான வேகத்தில் சென்று மதுரையை அடைந்தோம். 

நண்பர்களே------------நான் அந்த வாகன ஓட்டுனருக்கு என்ன வழி கூறியிருப்பேன்???

புதிர் விடை :-

மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து ஒரு நட்டை கழற்றி மாட்டியிருப்பீர்கள். மேலூர் வந்த பின்பு சரி செய்து பயணத்தை தொடர்ந்திருப்பீர்கள் !

அழிந்து போன உயிரினம் மீண்டும் உயிர் பெற்றது எப்படி - புதிர் கதை

ஏராளமான விலங்கினங்கள் பூமியில் ஆனந்தமாக

வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒருநாள் அந்த விலங்கினங்களுக்குள், ஒரு விலங்கினத்துக்கு மட்டும் புதுமையான ஒருவகை நோய் பிடித்தது.

மிகச் சிறிய காலத்துக்குள், பூமியில் , அந்த வகை விலங்கினம் அனைத்தும் முற்றிலுமாக இறந்துபோயின.

அந்த வகை விலங்கினம் ஒன்றுகூட மீதம் இல்லாமல் அழிந்துபோனது. ஒரு வருடம் கடந்தது.

மறுபடியும் அந்த விலங்கினம் பூமியில் ஜனித்தது.கொஞ்சம் கொஞ்சமாக பெருகி மீண்டும் அதன் தொகை அதிகரித்தது.

இப்போது நண்பர்களே கூறுங்கள் ---இது சாத்தியமா?

சாத்தியம் என்றால் அந்த விலங்கு எது?


புதிர் விடை :-

போணி எனப்படும் கோவேறு களுதை இனம்தான் அந்த விலங்கு . குதிரையும் கழுதையும் சேர்வதினால் உண்டாகும் ஒட்டு விலங்கினம்தான் கோவேறு கழுதை.

காட்டு மிருகங்களும் ஒரு குரங்கின் குடையும் ! - புதிர் கதை [கடி]

ஒரு பெரிய காடு. அந்தக் காட்டிலே எண்ணற்ற மிருகங்கள் இருந்தன.

ஒருநாள் ஒரு வரிக்குதிரை, ஒரு யானை, ஒரு கரடி, ஒரு முயல், இரண்டு எலிகள், ஒரு பாம்பு, இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தன. அனைத்து மிருகங்களும் ஒன்றுடன் ஒன்று நெருக்கியடித்துக்கொண்டு நின்றிருக்க,ஒரே குரங்கு மட்டும் யானையின்மேல் அமர்ந்து ஒரு சாதாரன குடையை விரித்து அனைவருக்கும் சேர்த்துப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.


நன்றாகக் கவனித்துக்கொண்டீர்களா? காட்டு  மிருகங்களும் ஒரு குடையும் ! 

இப்போது யார் யார் மட்டும் நனையாமல் இருப்பார்கள்?

சொல்லுங்களேன்.

புதிர் விடை :-

அனைவருமே நனைய மாட்டார்கள். ஏன் எனில் மழை வந்ததாக கதையில்  கூற வில்லை. ஹி ஹி !

“வெந்ததின் மேலே நின்றுகொண்டு, தின்று சிவக்கின்ற பெண்ணே! சோற்றைக் கறி தின்னுவதைப் பார்க்கவில்லயா? - புதிர்

ஒரு அரசன் ஒருவன் மாறு வேடத்தில் தன் நாட்டில் உள்ள ஒரு சிறு ஊர் வழியாகச் சென்று கொண்டிருந்தான். அப்போது அரசனின் காதில் “வெந்ததின் மேலே நின்றுகொண்டு, தின்று சிவக்கின்ற பெண்ணே! சோற்றைக் கறி தின்னுவதைப் பார்க்கவில்லயா?” என்று ஒரு ஆண் பேசுவது விழுந்தது. 

அவன் என்ன சொல்கிறான் என்று அரசனுக்குப் புரியவில்லை. அந்தப் பெண் என்ன செய்துகொண்டிருக்கின்றாள்?அவன் ஏன் அப்படிச் சொன்னான்? என்று குழம்பியபடியே சுற்று முற்றும் பார்த்து அங்கே ஒரு பெண் இருப்பதைக் கண்டான். அவளைக் கண்டதும்தான் அந்த ஆண்குரல் கூறியதின் பொருள் அரசனுக்கு விளங்கியது. அப்போது அந்தப் பெண் பேச ஆரம்பித்தாள்.


“பட்ட மரத்தின் மீது ஏறிப் பச்சிலை தின்னுகின்ற மாடே! கட்டிஒய மாடானால் இங்கே வராதே! கட்டாத மாடென்றால் இங்கே வா” என்றாள்.

மீண்டும் குழப்பம் அடைந்தான் அரசன். அவளது சொல்லுக்குப் பொருள் விளங்கவில்லை.கொஞ்சம் எட்டிப் பார்த்தான் …அங்கே ஒரு ஆண் இருப்பதைக் கண்டான். அவனைக் கண்டதும்தான் அவள் கூறியதன் பொருளை உணர்ந்தான் அரசன்.

ஆஹா----அந்த ஆணுக்கு ஏற்ற அறிவுடையவளாக இருக்கிறாளே இந்தப் பெண் என்று வியந்தான்.

இருவரையும் அழைத்தான். அவர்களது அறிவை மெச்சி அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளித்து அவர்கள் இருவருக்கும் மணம் செய்து வைத்தான்.

நண்பர்களே----அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று எனக்கு விளங்கவில்லை-----அந்த ஆண் கூறியதன் பொருளையும் அதற்கு பெண் அளித்த பதிலின் பொருளையும் நீங்கள்தான் எனக்குச் சொல்லவேண்டும்.

புதிர் விடை :-

அவள் நெல்லைக் காய வைத்துக்கொண்டிருந்தாள். அது வேக வைத்த புழுங்கல் நெல்.அதனால் அவளை வெந்ததின்மேல் நின்றுகொண்டிருக்கும் பெண்ணே என்றான்.

அவள் வாய் வெற்றிலை பாக்கு போட்டுச் சிவப்பாக இருந்தது. அதனால் தின்று சிவக்கும் பெண்ணே என்றான். அவளை அவன் அழைத்ததின் நோக்கம், நெல்லை ஒரு பக்கத்தில் ஆடு மேய்கிறது. அதை விரட்டு என்று கூறத்தான்.----நெல் பின்னால் சோறாகப் போகிறது. ஆடு நாம் தின்னும் கறி ஆகப் போகிறது.அதைத்தான் சோற்றைக் கறி தின்கிறது என்றான்.

அடுத்தாற்போல் அவள் கூறியதைப் பார்ப்போம். மரத்தால் செய்த மிதியடியைப் போட்டுக்கொண்டு வெற்றிலையை வாயில் குதப்பிக்கொண்டிந்த அவனைப் பார்த்து, " பட்ட மரத்தின் மேலே ஏறிப் பச்சிலை தின்னும் மாடே" என்றாள்.தன்னிடம் சாதுர்யமாகப் பேசியவன் திருமணம் ஆனவரா என்று அறியத்தான் " கட்டிய மாடென்றால் இங்கே வரரதே என்றும் கட்டாத மாடென்றால் வா " என்றும் கூறினாள்.

சிகை அலங்கார கடையும் இலவசமும் - புதிர் கதை

பெங்களூரில் ஒருவன் சிகை அலங்கார நிலையம் ஒன்றை வைத்திருந்தான். மக்களுக்கு சேவை செய்யும் ஆட்கள் முதன்முதலாக கடைக்கு வந்தால், தான் இலவசமாக சிகை அலங்காரம் செய்வது என்ற முடிவை ஒருநாள் எடுத்தான்.

அன்று காலை முதன் முதலாக சவரம் செய்துகொள்ள வந்தார் ஒருவர்.
அவனும் அவருக்கு சவரம் செய்துவிட்டான். எல்லாம் முடிந்து பணம் கொடுக்க அவர் வந்தபோது நாவிதன் “ ஐயா----நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் “ என்று கேட்டான். அதற்கு அவர் “ நான் ஒரு பூக்கடை வைத்திருக்கின்றேன்.” என்றார்..

உடனே அவன் , “ ஐயா---பூக்கடை வைத்து புனிதமான மலர்களை மக்களுக்குக் கொடுக்கும் உங்களிடம் இன்று பணம் வாங்கப் போவதில்லை.” என்றான்.அவரும் நன்றி என்று கூறிவிட்டுச் சென்றார்.
மறுநாள் காலையில் கடையைத் திறக்க வந்த நாவிதன், கதவுக்கு முன்னால் ஒரு நன்றி கூறும் அட்டையும், பக்கத்திலேயே ஒரு பூங்கொத்தும் வைக்கப்பட்டிருந்தது.


அன்று முதன் முதலாக வந்தவர், முடி அலங்காரம் செய்துகொண்டபிறகு பணம் கொடுக்க வந்தார்.நாவிதனும் அவருடம் அவர் என்னவாக இருக்கின்றார் என்று கேட்டான். அவர் ஒரு பேக்கரி வைத்து வியாபாரம் செய்வதாகக் கூறினார். உடனே நாவிதன், “ ஐயா----பேக்கரியில் ரொட்டிகளை உற்பத்தி செய்து, மக்களின் வயிற்றுப் பசியைப் போகுகிறீர்கள். உங்களுக்கு இலவசம்” என்றான். அவரும் நன்றி கூறிவிட்டுப் போனார். 

மறுநாள் காலையில் கடையைத் திறக்க வந்தவன், கதவுக்கு எதிரே ஒரு வாழ்த்து அட்டையும், பக்கத்திலேயே ஒரு கேக் பார்சலும் வைக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினம் முதன் முதலாக வந்தவர் பேஷியல் செய்துகொண்டார். அவர் பணம் கொடுக்க வந்தபோது, “ ஐயா—தாங்கள் என்னவாக இருக்கின்றீர்கள்” என்று விசாரித்தான்.
அதற்கு அவர் தான் ஒரு மென்பொருள் நிபுணர் என்றார்(SOFTWARE ENGINEER)அவரிடமும் அவன் பணம் வாங்காமல் அவரிடம் தனது கொள்கையைக் கூறி அனுப்பித்தான். அவரும் நன்றி கூறிவிட்டுப் போனார்.

மறுநாள் காலையில் கடையைத் திறக்கவந்தான்.
அவன்.கடைக் கதவின் முன்னால் இருந்தததக் கண்டு நாவிதன் திகைத்து நின்றான். 

நண்பர்களே அது என்னவாக இருந்திருக்கும் என்று நீங்கள் கூறலாமே!!

புதிர் விடை :-

அந்த மென்பொருள் நிபுணர் என்ன செய்தார் தெரியுமா??

தனது கணிணியில் இருந்த அனைத்து நண்பர்களுக்கும் இந்த விஷயத்தைத் தெரிவித்து ஈ மெயில் அனுப்பி ---அப்படி அனுப்பியதன் நகல் எடுத்து கடை வாசலில் ஒட்டி வைத்திருந்தார்.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்