புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Tuesday, January 7, 2014

3 அடி அளவுள்ள ஆந்தை போன்ற பறவை !

3 அடி அளவுள்ள ஆந்தை போன்ற பறவை !

பஹாமாஸ் தீவுகளை சேர்ந்து அன்றோஸ் என்னும் சிறிய தீவில் தான் இந்த மாதிரி பறவையை கண்டதாக சுற்றுல்லா பயணிகள் கூறியுள்ளனர் . 

ஆந்தை மாதிரி தோற்றத்தில் மிகவும் பெரியதாக , சுமார் மூன்று அடி வரை இருந்ததாகவும் நிறைய பேர் கூறியுள்ளனர் . பறவை ஆர்வலர்கள் பலர் இதற்கு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளனர் . அதாவது 16 ஆம் நூற்றாண்டு வரை அன்றோஸ் தீவில் சிக்சார்நி என்னும் பறவை இருந்துள்ளதாகவும் , அதன் பின் அங்கு மனிதர்கள் குடி பெயர ஆரம்பித்த உடன் மரங்களை வெட்ட தொடங்கியதால் இவை முற்றிலும் அழிந்து போனது என்று நம்பப்பட்டது !

இந்த வகை பறவைகளால் பறக்க இயலாது . இவை நிலத்தை சார்ந்தே வாழும் . எனவே அந்த தீவை விட்டு செல்ல முடியாமல் போனது. முற்றிலும் அழிந்து போனது என்று நம்ப பட்டாலும் இது நாள் வரை மக்கள் இதை போன்ற பறவையை பார்த்ததாக கூறுவது , இந்த வகை பறவைகள் எப்படியோ இன்னும் இருக்கின்றன என்றே தோன்றுகிறது !


எப்படி தன்னுடைய உயிர் போகும் என்று முன்பே அறிந்த ஆப்ரஹாம் லின்கன் !

எப்படி தன்னுடைய உயிர் போகும் என்று முன்பே அறிந்த ஆப்ரஹாம் லின்கன் ! 


எதிர்காலத்தை முன்பே அறியும்  திறன் உண்மையாக உள்ளதா என்பதை இது வரை எந்த அறிவியல் ஆராய்ச்சியாளரும் சொல்ல முடிய வில்லை ! 

எதிர்காலத்தில் நடக்க போவதை கணிக்க இயலும் என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர் . எதிர்காலத்தில் தாங்கள் இறக்க போகும் தருணத்தை பெரும்பாலானோர் கண்டதாக கூறி உள்ளனர் . இதில் மிகவும் பிரபலமான ஒன்று தான் ஆப்ரஹாம் லின்கனின் மரணம் . 

1865 ஆம் ஆண்டு , ஆப்ரஹாம் லின்கன் துப்பாகியால் சுட்டு கொல்லப்படும் முன்பு அவரின் கனவில்  தான் இறந்து கிடப்பதை கண்டு அந்த கனவை தனது மனைவியிடம் கூறி உள்ளார் . இருவரும் முற்போக்கு சிந்தனையாளர்கள் என்பதால் , இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை . எதோ ஒரு கேட்ட கனவு என்று விட்டு விட்டனர் . இரண்டே வாரங்களில் ஆபிரகாம் லின்கன் சுட்டு கொள்ள பட்டார் !

இந்த மாதிரி கனவுகளை  Precognitive Dreams என்று ஆங்கிலத்தில் கூறுவர் !


தண்ணீருக்குள் கூகிள் எர்த் கண்டு பிடித்த வட்ட வடிவ வினோத குழிகள் !

தண்ணீருக்குள் கூகிள் எர்த் கண்டு பிடித்த வட்ட வடிவ வினோத குழிகள் !


கூகிள் எர்த் தொழிற்நுட்பம் வந்த பின்பு வானில் இருந்து பூமியை பார்ப்பது என்பது சுலபமாக போனது . கூகிள் எர்த் தனது தேவைக்காக செயற்கை கோள்கள் மூலம் படங்கள் எடுத்து சேமித்து வைக்கும் . அது போன்று படங்கள் எடுக்கும் போது சில வித்தியாசமான படங்கள் சிக்குவது உண்டு . அது மாதிரி சிக்கிய படங்கள் தான் இவை . இவற்றை கூகிள் நிறுவனம் Circular Anomaly என்று குறிப்பிடுகிறது. அதாவது பூமியின் வெவ்வேறு இடங்களில் பெரும்பாலும் தண்ணீருக்குள் வட்ட வடிவ குழிகள் தென்படுகிறது . 


இவை பெரும்பாலும் சவுதி அரேபியா , நார்த் கரோலினா மற்றும் ப்ளோரிடா ஊர்களின் கடலோரங்களில் அதிகமாக தென்படுகிறது . இவை தோற்றத்தில் பெரும்பாலும் ஒரே மாதிரி உள்ளன . இவைகளை பழங்கால சமாதிகள் என்கிற அடிப்படையில் ஆராய்ந்து வருகின்றனர் . இவற்றில் பெரும்பாலானவை கி.பி 800 அளவு பழமையானது என்று கண்டு பிடித்துள்ளனர் . இன்னும் சில கிட்டத்தட்ட கி.பி 1௦,௦௦௦ வருட பழமையானது !

மேலும் பலர் பல்வகை கருத்துகளை முன் வைத்துள்ளனர் . எது எப்படியோ , மனிதன் இந்த உலகை பற்றி தெரிந்து கொண்டது என்பது கையளவுதான் ! நமக்கு புலப்படாத , புரியாத , பயம் உண்டாக்கும் பல விசயங்களும் இன்னமும் இந்த பூமியில் உள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை !டிராகன் குகை மர்மம் !

டிராகன் குகை மர்மம் !


அமெரிக்காவின் அர்கன்சாஸ் நகரத்தின் பூனே கவுன்டியில் உள்ள ஒரு குகையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் தங்களின் கயிறுகளை உள்ளே போட்ட உடன் மிகப்பெரிய உறுமல் சத்தம் கேட்டது எனவும் அது கேட்பதற்கு ஒரு ராட்சச மிருகத்தின் உறுமல் போல இருந்ததாகவும் கூறி இருந்தனர் ! 


அது இது வரை முழுமையாக ஆராயப்படாத ஒரு குகை . எனவே அதனுள் இருந்த வந்த சத்தம் எந்த மிருகத்தினுடையது என்பது தெரிய வில்லை ! இது நாள் வரை அந்த குகையை மக்கள் டிராகன் குகை என்றே அழைத்து வருகின்றனர் . இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை ! சுற்றுல்லா பயணிகளை வர வைக்கும் சூழ்ச்சியா இல்லை உண்மையிலேயே ஏதேனும் ராட்சச மிருகம் இறுக்குமா என்பது தெரியவில்லை ! 

நீங்க தயாரா இருந்தா இப்பவே போய் ஆராய்ந்து பார்த்திடலாம் ! ஹி ஹி ! என்ன நண்பர்களே சொல்றீங்க ? :) 

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்