புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Sunday, August 16, 2015

இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்! – Yamaguchi

இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்! – Yamaguchi


Tsutomu Yamaguchi (திசுதொமு யொமாகுசி) என்ற துரதிஷ்டசாலி பற்றியே இன்று பார்க்கப்போகின்றோம்.

உலக வரலாற்றில் இதுவரை இரண்டு அணுகுண்டுகளே யுத்தங்களின் போது பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டாம் உலகயுத்தத்தின் போது அமெரிக்காவினால் ஜப்பான் மீது வீசப்பட்ட இரண்டு அணுகுண்டு தாக்குதலுக்கும் முகம்கொடுத்து தப்பித்த ஒரே ஒரு நபர் Yamaguchi ஆவார்.


மிஷுவிஷி நிறுவனத்தின் வேலை அலுவல்களுக்காக ஹிரோஷிமா (Hiroshima) நகரத்தில் தங்கியிருந்தார் Yamaguchi. அடுத்த நாள் தனது சொந்த ஊரான நாகஷாகி (Nagasaki) இக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தார். காலையில் நகரத்தை விட்டு வெளியேற தயாராக இருந்த அவருக்கு பயணச்சீட்டை தவறுதலாக அலுவலகத்தில் விட்டு விட்டது அப்போது தான் நினைவிற்கு வந்தது. உடனடியாக அலுவலகம் சென்று பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினார். அப்போது நேரம் 8:15. (6/8/1945)

அமெரிக்க போர்விமான ஓட்டி எனோலா கேய், “Little Boy” என பெயரிடப்பட்ட முதலாவது அணு குண்டை ஹிரோஷிமா நகர மையத்தில் போட்டார்! இதன் தாக்கத்தால் சுமார் 3 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த Yamaguchi இன் பார்வை தற்காலிகமாக அற்றுப்போனதுடன், அவரது உடலின் வலதுபாகங்கள் பெரும்பாலும் எரிந்துபோயின. பின்னர், மீட்பு படையினரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் 3 நாள் சிகிச்சை பெற்ற அவர் தனது சொந்த ஊரான நாகசாகிக்கு மாற்றப்பட்டார்.

9/6/1945 அமெரிக்க போர் விமானி பொஸ்கார் “Fat Man” என்ற இரண்டாவது அணுகுண்டை நாகசாகி மீது போட்டார்!
குண்டு போடப்பட்ட இடத்தில் இருந்து சரியாக 3 கிலோமீட்டர் தூரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த Yamaguchi, இவ் முறை எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் காக்கப்பட்டார்.

இவ்வாறு, துரதிஷ்ட வசகாம இரண்டு அணு குண்டுத்தாக்குதலுக்கும் உள்ளான Yamaguchi ஐ, 2009 ஆம் ஆண்டு “இரண்டு அணுகுண்டுகளுக்கும் தப்பிய ஒரே நபர் ” என்ற ரீதியில் ஜப்பான் அரசு கெளரவித்தது.
இவர் 2010 ஆம் ஆண்டு தனது 93 ஆவது வயதில் வயிற்றுப்புற்று நோயினால் இறந்தார்.

உலகை தலைகீழாக காணும் பெண் – வினோத நோய்

உலகை தலைகீழாக காணும் பெண் –
வினோத நோய்


பொயன டனிலொவி (Bojana Danilovic) என்ற வினோத பெண்ணைப்பற்றியே இங்கு பார்க்கப்போகின்றோம்.

Bojana சாதாரண மனிதர்கள் போல் தோற்றமளித்தாலும், உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் விட சற்று வித்தியாசமான ஒரே பெண் இவர்தான். ஏனெனின், நாமெல்லாம் காட்சிகளை நேராக பார்க்கின்றோம். ஆனால் இவர் அனைத்து காட்சிகளையும் தலைகீழாக பார்க்கிறார்! ஆம் இவரால் எந்த காட்சிகளையும், எழுத்துக்களையும், சம்பவங்களையும் நேராக பார்க்க முடியாது. அனைத்துமே தலை கீழாகத்தான் தெரியும்!

Bojana இன் கண்களை பரிசோதித்த மருத்துவ ஆராய்சியாளர்கள் அவரின் கண்களில் எந்த பிழையும் இல்லை என்பதை அறிந்துகொண்டனர். Bojana இன் மூளையே இவர் பார்க்கும் காட்சிகளை தலைகீழாக புரிந்துகொள்கிறது!

சேர்பியாவைச்சேர்ந்த 28 வயதாகும் இவர் இப்போது “வேலை தேடுபவர்களுக்கு உதவும்” அமைப்பில் வேலைபார்த்துவருகிறார். இவரது அலுவலகத்தில் இவர் பயன்படுத்தும் கணினித்திரை மட்டும் தலைகீழாக இருக்கும்!
வீட்டிலும், அனைவரும் பார்வையிடும் தொலைக்காட்சியுடன் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி மூலமாகவே இவர் திரைப்படங்களையும் நிகழ்வுகளையும் கண்டுகளிக்கிறார்.

இவரின் இக்குறைக்கு இதுவரை தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. இக் குறைபாடு “spatial orientation phenomenon” என்றழைக்கப்படுகிறது.

பற்கள் மூலம் தமிழரின் கின்னஸ் சாதனை! | ராதாகிரிஷ்னன் வேலு -King Tooth

பற்கள் மூலம் தமிழரின் கின்னஸ் சாதனை! | ராதாகிரிஷ்னன் வேலு -King Tooth


ஆம் ஆண்டு ஆவணி 30 ஆம் திகதி (2007/08/30) மலேசியாவின் 50 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜா ஜிகி என்று அழைக்கப்படும் ராதாகிரிஷ்னன் வேலு என்ற தமிழர் கின்னஸ் புத்தகத்தில் தனது சாதனையை பதிவு செய்திருந்தார்.

சுமார் 6 பெட்டிகள் பொருத்தப்பட்ட 297.1 தொன் நிறையுடைய புகையிரதத்தை 2.8 மீட்டர் தூரத்திற்கு தனது பற்கலாள் இழுத்துச் சென்று சாதனை படைத்திருந்தார் இவர். 14 வயதில் தனது உடல் பாகங்களில் குறிப்பிட்ட பாகங்களை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய கவன ஈர்ப்பு சக்தியை யோகா கலை மூலம் இந்தியாவில் குருவிடம் கற்றுக்கொண்டமையால் இச்சாதனையை தன்னால் நிலை நாட்ட முடிந்ததாக குறிப்பிட்டார்.

இன்றுவரை இச்சாதனை முறியடிக்கப்படவில்லை. King Tooth (ராஜ பற்கள்) என்றழைக்கப்படும் இவர், தமிழர் என்ற ரீதியில் நாம் பெருமைப்படக்கூடிய மற்றுமோர் தமிழர். :)

தொலைக்காட்சி பெட்டியின் முன்னால், 42 வருடங்களாக சடலமாக இருந்த பெண்!

தொலைக்காட்சி பெட்டியின் முன்னால், 42 வருடங்களாக சடலமாக இருந்த பெண்!


பாலடைந்த வசிப்பிட அடுக்கு மாடியொன்றை அகற்றுவதற்கு அதன் உரிமையாளர் முடிவெடுத்துக்கொண்டார். 1970 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்த அடுக்கு மாடிக்கட்டிடத்தில் எவரும் தங்கியதில்லை. எனினும், ஒரு வீடு மட்டும் உரிமையாளார் பற்றிய தகவல்கள் இல்லாமல் திறக்க முடியாது இருந்தது. உரிமையாளர் பொலிஸாரை தொடர்பு கொண்டார். உரிமையாளர் கேட்டுக்கொண்டதன் பெயரில் பொலிஸார் வீட்டுக்கதைவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள்.

அவர்கள் அங்கு கண்ட காட்சி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஆம், அங்கு எலும்புக்கூடாகிப்போன ஒரு சடலம் தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னே இருந்த கதிரையில் அமர்ந்திருந்தது! அச்சடலத்தின் அருகே இருந்த மேசை மீது என்றோ போடப்பட்ட கோப்பியும் இருந்தது.

பின்னர் பெறப்பட்ட தகவல்களின் படி, 1924 ல் பிறந்த ஹெவிகா கொலிக் (Hedviga Golik) என்ற காணமல் போனதாக அறியப்பட்ட நபரின் சடலமே அது என இனங்கானப்பட்டது. 1966 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்தப்பெண்ணையாரும் கண்டிருக்கவில்லை. அவரது அயலவர்கள் அந்தப்பெண் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக நினைத்துக்கொண்டார்கள். காலப்போக்கில் அனைவரும் அந்த அடுக்குமாடியைவிட்டு வெளியேறி விட்டார்கள்.

கோப்புயுடன் தனது கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னர் அமர்ந்து, ஏதோ ஒரு காரணத்தினால் இறந்துபோன் அந்தப்பெண்ணை எவரும் தேடவில்லை. சுமார் 42 வருடங்களுக்குப்பின்னர், எதேச்சையாக பொலிஸாரால் அவரது உடல் கண்டறியப்பட்டது!

மேலும் வியப்பான சம்பவங்களை அறியலாம் தொடர்ந்திருங்கள்!

காதலுக்காக கிட்னியையும் இழந்து காதலையும் இழந்த நபர் !!!

காதலுக்காக கிட்னியையும் இழந்து காதலையும் இழந்த நபர். – வினோதம்


சில பெண்கள் குறிப்பிட்ட நிறுவன பெயருடைய “handbags” களை வாங்குவதற்கு ஆசைபடுவார்கள். அவர்களது காதலர் / கணவர் அதை அவங்கி கொடுக்க நினைப்பார். (கடமையாகவும்.)

27 வயதான பார்க் என்ற நபர் தனது காதலி ஆசைப்பட்ட “Kelly bag” ஐ வாங்குவதற்க்கு முடிவெடுத்தார்.

அதற்க்காக, பகுதி நேர வேலை செய்தமையுடன் 3 மாதங்களுக்கு பகுதி நேர ஆசிரியர் வேலையும் செய்து பணம் சேர்த்தார். அப்படி இருந்தும் பணம் போதாமல் இருந்ததுள்ளது.

அந்த நேரத்தில் “மனித ஹிட்னி தேவைப்படுகிறது” என்ற விளம்பரம் அவரது கண்ணிற்கு பட தனது கிட்னியை விற்று அந்த பணம் மூலம் அந்த handbag ஐ வாங்கி தனது காதலிக்கு பரிசாக கொடுத்துள்ளார்!

பரிசு கொடுத்து இரண்டு நாட்களில் அவர்களின் காதல் முறிவடைந்துவிட்டது! 

ஐந்து வயதில் ஒரு தாய்! – மருத்துவ வினோதம்!

ஐந்து வயதில் ஒரு தாய்! – மருத்துவ வினோதம்!


இது நடந்தது இப்போதல்ல, எனினும் வினோதமான இந்த சம்பவம் பற்றி பார்ப்போம்…


1934 ஆம் ஆண்டு பேரு/பெரு நாட்டில் இந்தியப்பெண் ஒருவர் 3 அடி உயரமுள்ள ஒரு ஐந்து வயது நிரம்பிய சிறுமியை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்திருந்தார். குழந்தையின் வயிறு மிகப்பெரிதாக கட்டிபோன்று இருந்தது.

மருத்துவர் வயிற்றுக்கட்டி என்று பரிசோதனைகளை மேற்கொண்டார். X-Ray பரிசோதனையை மேற்கொண்ட மருத்துவருக்கு ஆச்சரியம். அந்த ஐந்துவயது சிறுமியின் வயிற்றில் 8 மாதங்கள் நிரம்பிய சிசு இருந்தது!

மருத்துவரின் உதவியுடன் சிறுமி பேரு நாட்டின் தலை நகரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். விசேட கவணிப்பில் இருந்த அந்த சிறுமி ஒன்றரை மாதங்களின் பின் 14/05/1939 இல் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்!

குழந்தை 2.7 கிலோகிராமுடன் ஆரோக்கியமாக பிறந்தது. (40 வயதில் எலும்பு மச்சையில் ஏற்பட்ட புற்று நோயினால் மரணமடைந்தது.)

ஆரம்பத்தில், பிறந்த குழந்தை அவரது தம்பியாக இருக்கும் என மருத்துவர்கள் ஊகித்தார்கள் (பெண் குழந்தையின் வயிற்றில் இன்னோர் குழந்தை தங்கும் சம்பவங்கள் நடப்பதுண்டு, எனினும் அக் குழந்தை இறந்த உடலாகவே தங்கும்.)
ஆனால், மருத்துவ பரிசோதனைகளில் அக் குழந்தை அச் சிறுமியின் குழந்தை தான் என உறுதிப்படுத்தப்பட்டது.

சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுமியால் அடையாலம் காட்டப்படவுமில்லை. சிறுமியின் தந்தை சந்தேகத்தின் பெயரில் கைதாகினார். எனினும், பல மருத்துவ சான்றுகளின் உதவியுடன் அவர் மீது தப்பு இல்லை என்பது நிரூபனமாக்கப்பட்டது.

1972 இல் வேறு ஒரு நபரை திருமணம் முடித்த அந்த பெண்(=சிறுமி) இன்னோர் குழந்தையை பெற்றெடுத்தார்.

இச் சிறுமி பற்றிய தகவல்கள் 2003 ஆண்டிலேயே வெளியுளகத்திற்கு தெரியவந்தது. ஊடகங்கள் அவரை பேட்டி எடுக்க நாடியபோதும் அவர் அதற்கு மறுத்துவிட்டார்!

இணைந்திருங்கள் மேலும் அறியலாம்…

கரும்பள்ளிவண்டு[Lady Bug] அடிமையாக்கும் குளவி

கரும்பள்ளிவண்டு[Lady Bug] அடிமையாக்கும் குளவி


நமக்குத் தெரியாத எவ்வளோ இரகசியங்களை உள்ளடக்கியது பூமி. அதில் ஒன்றுதான் கரும்பள்ளிவண்டு[Lady Bug] அடிமைப் படுத்தும் குளவி பற்றிய தகவல்.

டினோகேம்பஸ் கோஸினெல்லா[ Dinocampus coccinellae ]என்ற அறிவியல் நாமகரணம் கொண்ட குளவி லேடி பக்கை ஜோம்பீஸ் ஆக மாற்றுவது வியப்பானதுதான்.

ஏன் இந்த கரும்பள்ளிவண்டுக்குள் [Lady Bug] குளவியின் கூட்டை பாது காக்க வேண்டும் என்பது தான். சமீபத்தில் பிரெஞ்ச் -கனேடியன் குழு ஒன்று இதற்கான காரணத்தை கண்டுபிடித்திருக்கின்றன.

இந்த குளவியானது கரும்பள்ளிவண்டை [Lady Bug] ஒரு வித வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்குகிறது அதன் காரணமாக அவைகளின் நரம்பு மண்டலமும் மூளையும் பாதிப்புக்கு உள்ளாகிறது. பின் அது குளவியின் கட்டளைகளை ஏற்கிறது. சொல்லப் போனால குளவியின் கூட்டுக்கு பாதுகாவலனாக மாறிவிடுகிறது.

குளவி கரும்பள்ளிவண்டின் [Lady Bug] உடலின் வைரஸ்தாக்கிய முட்டைகளை உட் செலுத்துவிடுகிறது(by using ovipositor ). முட்டையில் இருந்து பொறித்த லார்வாக்கள் அதன் உடலில் இருந்து வெளியேறி கூட்டை(cocoon) அமைக்கிறது. முட்டை பொறிந்த போதே பக் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த கூடு பக்கின் உடலை ஒட்டிய படியே கால்களுக்கு இடையில் பாதுகாப்பாக இருக்கும். லார்வா முழுவளர்ச்சி அடைந்து கூட்டை விட்டு வெளியேறும் வரை பக்கின் தலையாய பணி கூட்டை பாது காப்பது தான்

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்