புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

Sunday, September 3, 2017

கர்னி மாதா கோவில் - ராஜஸ்தானில் உள்ள எலிக்கோவில்

கர்னி  மாதா  கோவில் - ராஜஸ்தானில் உள்ள எலிக்கோவில்


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  தேஷ்நோக்கே என்ற ஒரு சிறிய ஊரில் உள்ளது கர்னி  மாதா கோவில். இக்கோவில் முழுவதும் உள்ள எலிகள் தான் இங்கு பிரசித்தி பெற்றது. சுமார் ஆயிரக்கணக்கில் இங்கு எலிகள் வாழ்கின்றது.சுமார் 20000 எலிகள் உள்ளது என்று தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இங்கு வாழும் எலிகள் கடித்துப்போட்ட உணவுகளைதான் மக்கள் பிரசாதமாக உண்கின்றனர். இங்கு உள்ள ஒரு எலி இறந்தாலும், அதற்க்கு பதில் ஒரு தங்க எலியை வைக்க வேண்டும்.

எப்படி இங்கு எலிகள் கூடுகிறது. ஏன், எதற்கு என்று பல கேள்விகள் இன்றும் ஒரு புரியாத புதிரே !


போலி மருத்துவரை கண்டுப்பிடிப்பது எப்படி ?

பரிந்துரைச் சீட்டு தரமாட்டார். பரிந்துரைச் சீட்டு கொடுத்தால் தான் மாட்டிக் கொள்வோம் என்பதை அவர் அறிவார்.


பெரும்பாலும் கிளினிக்கின் முன் பெயர் பலகை இருக்காது. மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த எண்ணும் இருக்காது.

அவரை சந்திக்கும் போது , நோயாளியின் அறிகுறிகளுக்கே முக்கியம் தருவார். நோயின் தன்மை பற்றி பேசமாட்டார். 

எத்தனை முறை சென்றாலும் ஒரு ஊசி போடுவார். நோயாளி கேட்டால் ஐ.வி திரவம் போடுவார்.நோயாளியின் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் சிகிச்சையில் வளைந்து கொடுப்பார்.

மீண்டும் தன்னை எப்போது சந்திக்க வேண்டும் என்று கூறமாட்டார். நோய் குணமாக எத்தனை நாள் ஆகும். ஒரு மருந்து கடை  நிச்சயம் கூட இருக்கும்.

பின்குறிப்பு : நோயாளிகள் பல பேர் தாங்கள் போலி மருத்துவரிடம் தான் செல்கிறோம் என்று அறிந்தே செல்கின்றனர். இந்தப் பதிவு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று விரும்புவோருக்காக மட்டும்.

உங்கள் ஊர்களில் வசிக்கும் இடங்களில் போலி மருத்துவர்கள் இருப்பின் தங்கள் மாவட்டத்தில் உள்ள இணை இயக்குநர், சுகாதார மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் புகார் அளிக்க வேண்டும்.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்